Tagged: பெரியார் முழக்கம் 16012014 இதழ்

இடஒதுக்கீடுகளை புறந்தள்ளும் தமிழக அரசைக் கண்டித்து ஜன.25இல் ஆர்ப்பாட்டங்களை நடத்துவீர்!

இடஒதுக்கீடுகளை புறந்தள்ளும் தமிழக அரசைக் கண்டித்து ஜன.25இல் ஆர்ப்பாட்டங்களை நடத்துவீர்!

தமிழக அரசே! ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் நியமனங்களை ரத்து செய்! ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரைப் பயன்படுத்தி, இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்காதே! ஓமந்தூர் ராமசாமி தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக்கும் தமிழக அரசு மருத்துவர் தேர்வில் இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவதால் இடஒதுக்கீட்டை அமுலாக்க முடியாது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா! ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்துவிட்டு பிறகு நிரந்தர மாக்கப்படுவதே இதில் அடங்கியுள்ள சதி. எனவே ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக  தமிழ்நாடு முழுதும் – மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்களை இந்த மருத்துவமனையில் பணியமர்த்தம் செய்ய முடியும். ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ மனைகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்கிறார், முதல்வர் ஜெயலலிதா. ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரை மாற்றி வேறு பெயரை ஏன்...

‘தேவாரம்’ பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி

‘தேவாரம்’ பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி

சிதம்பரம் கோயில் சைவ சமயக் குரவர் நால்வராலும் பாடல் பெற்றத் தலம். பாடல்கள் என்றால் தேவாரப் பாடல்கள்தான். அவை வெறும் பாடல்கள் அல்ல. சைவர்களுக்குத் தமிழ் மறை! அந்தப் பாடல்களை நியாயமாக தில்லை வாழ் அந்தணர்கள் பாதுகாத்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் பாதுகாக்கவில்லை! இறைவனைவிட கரையான் மேல் பற்று அதிகம்போல் தெரிகிறது. தேவாரப் பாடல்களை அறையில் பத்திரமாகப் பூட்டி வைத்து கரையானுக்கு ‘அமுது’ செய்தனர். அந்தக் காலங்களில் எழுத்துக்கள் எல்லாம் வடிக்கப்படுவது ஓலைச் சுவடிகளில் தானே? ஓலைச் சுவடிகள் மலிவுப் பதிப்பும் அல்ல சந்தையில் கிடைக்கக் கூடியதும் அல்ல. கோயில்களிலும், மடங் களிலும் மற்றும் முக்கிய சைவ நெறிப் பற்றாளர் களிடம் மட்டுமே கிடைக்கக் கூடியவையாகும். அவை முழுமையாகக் கிடைப்பது முற்றிலும் அரிது. தேவாரப் பாடல்களின் ஓலைச் சுவடிகள் எல்லாம் சிதம்பரம் கோயிலில் இருந்தன. ஆனால் தில்லைவாழ் அந்தணர்கள் அவற்றை யாருக்கும் கொடுப்பதில்லை. தேவாரப் பாடல்களைக் கேட்டு ரசித்த ராஜராஜ சோழன்...

நடராசன் ‘நர்த்தன தாண்டவத்தின்’ கதை

நடராசன் ‘நர்த்தன தாண்டவத்தின்’ கதை

தில்லை நடராசன் கோயில் நிர்வாக உரிமையை தீட்சதப் பார்ப்பனர்களிடம் மீண்டும் ஒப்படைத்து விட்டது உயர்நீதிமன்றம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியும் இதற்கு மறைமுகமாக உதவியிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் அனைத்துக் கோயில் களும் கொண்டு வரப்பட்டாலும், தில்லை நடராசன் கோயில் நிர்வாகம், வழிபாடு இரண்டையும் பார்ப்பனர்களிடமிருந்து பறி போய்விடக் கூடாது என்று துடிக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டிலேயே இந்த நிலை என்றால், கடந்த நூற்றாண்டுகளில் பார்ப்பனர்களின் ‘கோரத் தாண்டவம்’ எப்படி இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இந்த நிலையில் தில்லை நடராசன் கோயில், பெண்ணடிமை – வர்ணாஸ்ரமத் திமிரின் கோட்டையாகவும், சைவ வைணவ மோதல் களமாகவும் இருந்து வந்துள்ளதற்கான வரலாற்றுத் தகவல்களை இங்கு வெளியிடுகிறோம். சைவத்தின் பெருமை பேசும் தில்லை நடராசன், தன்னுடன் போட்டிக்கு வந்த பெண் தெய்வத்தை எப்படி சூழ்ச்சியில் வெற்றி பெற்றான் என்பதைக் கூறுகிறார் அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி. சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சில...

பார்ப்பனர்களும் வஞ்சிக்கப்படும் விவசாயமும்

பார்ப்பனர்களும் வஞ்சிக்கப்படும் விவசாயமும்

விவசாயத் துறை இந்தியாவில் நலிவடைவதற்குக் காரணம் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பார்ப்பனர்கள் விவசாயம் செய்வதை ‘மனு சாஸ்திரம்’ தடை போட்டுள்ளது. சாஸ்திரத்தை மீறி விவசாயம் செய்த இரண்டு “பிராமணர்களை” குடந்தையில் மூத்த சங்கராச்சாரி, ஜாதி நீக்கம் செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. விவசாயம் என்ற அறிவியலின் வளர்ச்சியை சமூகப் பார்வையில் முன் வைக்கும் இக்கட்டுரையை எழுதியவர் சமூக ஆய்வாளர் காஞ்சா அய்லையா. நமக்கு உணவு தரும் உழவுத் தொழிலுக்கு நன்றி சொல்லும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது? ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும், காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய...

சன் தொலைக்காட்சி வீரபாண்டியனுக்கு பா.ஜ.க. மிரட்டல்

சன் தொலைக்காட்சி வீரபாண்டியனுக்கு பா.ஜ.க. மிரட்டல்

மதவாத அரசியல் குறித்துக் கருத்துக் கூறிய ஊடகவியலாளர் சன் தொலைக்காட்சி வீர பாண்டியன் மீது பா.ஜ.க. தொடுத்துள்ள தாக்குதல் தொடர்பாக அரசியல் தலைவர்களும் ஊடகவிய லாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் கண்டித்து ஜன. 7 அன்று வெளியிட்ட கூட்டறிக்கை: மதவாதத்திற்கு எதிராகப் பேசியதால் சன் தொலைக்காட்சியின் அரசியல் விமர்சகர் வீரபாண்டியனை பணியிலிருந்து நீக்க வேண்டு மென மதவாத சக்திகள் வலியுறுத்தியுள்ளதை மதச் சார்பின்னைம மீது நம்பிக்கைக் கொண்டுள்ள இந்த கூட்டறிக்கையில் கையொப்பம் ஈட்டுள்ள நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு மனித உரிமை அமைப்பு ஒன்றின் சார்பில், முசாபர் நகரில் சிறுபான்மையினர் மீதான வன்முறை குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை ஒன்று வெளி யிட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீரபாண்டியன் பா.ஜ.க. மீது சில விமர்சனங்களை முன் வைத்துப் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. வின் மாநில அலுவலகச் செயலாளர் கி.சர்வோத்தமன், சன் தொலைக்காட்சிக் குழும மேலாண் இயக்குநருக்கு டிசம்பர்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசை எழுப்புவதற்கான அலாரமா? காங்கிரசை அப்படி எழுப்பிவிடத்தான் முடியுமா?   – அமர்த்தியாசென் இதற்கு நீங்களே விடை கூறிவிட்டால், மற்றொரு நோபல் பரிசை தட்டிக்கொண்டு போய் விடலாம், சார். பிணையில் விடுதலையான லாலுபிரசாத், சாமி தரிசனத்துக்குப் போனபோது,  ஒரு போலீஸ் அதிகாரி, லாலு கால்களைக் கழுவினார். ஜார்கண்ட் அரசு விசாரணைக்கு உத்தரவு.   – செய்தி அதெல்லாம் சுத்தமாகத்தான் கழுவி இருப்பார். நம்புங்கள். இதற்கெல்லாம் விசாரணையா? நம்மால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூற வேண்டும்.  – மன்மோகன்சிங் “பொருளாதார நெருக்கடி தற்காலிகமானது தான்; விரைவில் சரியாகி விடும்” என்ற நம்மால் செய்ய முடிந்த கொள்கையை அப்படியே சரியாகச் சொல்லணும்! ஆமாம். இறை நம்பிக்கைதான் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்!  – ஜெயலலிதா பேச்சு அதனால என்னங்க பயன்? இறை நம்பிக்கை எதிர்க்கட்சிகளையே இல்லாமல் ஒழிக்குமா? அதைச் சொல்லுங்க. மகாராஷ்டிரா காங்கிரஸ் ஆட்சி வீட்டுவசதி வாரிய ஊழல் விசாரணை...

காவல்துறை தடைகளைத் தகர்த்து நடந்த தமிழர் திருநாள் விழா

காவல்துறை தடைகளைத் தகர்த்து நடந்த தமிழர் திருநாள் விழா

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் 14 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்-தைப் புத்தாண்டு விழா, ஜனவரி 12 ஆம் தேதி காவல்துறை தடையைத் தகர்த்து எழுச்சியுடன் நடைபெற்றது. அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களையும் கொண்டுள்ள பொங்கல் விழாக் குழு, இந்த விழாவை நடத்தி வருகிறது. கடந்த காலங்களில் பெரியார் திராவிடர் கழகமும், கடந்த இரண்டு ஆண்டுகளாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் முன்னின்று விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண் டிருந்த போது, கடந்த 10 ஆம் தேதி காலை காவல் துறை உதவி ஆணையர் (மயிலைப் பகுதி) விழா நடத்துவதற்கு அனுமதி மறுத்து எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். அன்று நீதிமன்றத்தின் கடைசி வேலை நாள். அதற்குப் பிறகு பொங்கல் விடுமுறை. எனவே, விழாவை நடத்த விடாமல் தடுத்து விடலாம் என்று காவல்துறை திட்டமிட்டது. உடனே கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண் அவசர அவசரமாக மனுக்களை தயாரித்து, அவசர...