Tagged: பெரியார் முழக்கம் 11022016 இதழ்

வினா… விடை…!

வினா… விடை…!

தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை தொடர்ந்து நீடிப்பார். – செய்தி ‘மேடம்’ பா.ஜ.க. தலைவராகக் கூட முடியும். ஆனால், அதன் தந்தை அமைப்பான ஆர்.எ°.எ°.சில் ஒரு உறுப்பினராகக்கூட முடியாது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழல் புகாரில் திருப்பதி தேவ°தான அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை. – செய்தி இதுவே எங்க தமிழ்நாடாக இருந்திருக்குமானால் ‘ஏழுமலையானிடம்’ முன் அனுமதி பெறாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சட்டம போட்டு தடுத்திருப்பாங்கய்யயா…. சீதையை காட்டிலேயே தங்குமாறு காரணமின்றி தண்டித்த இராமன், இலட்சுமணன் மீது நடவடிக்கைக் கோரி பீகார் நீதிமன்றத்தில் சந்தன்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. – செய்தி ‘இராமனு’க்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்காமலே தள்ளுபடி செய்யறது எந்த ஊரு நியாயங்க… ‘இராம’ பகவானை இப்படியெல்லாம் அவமரியாதை செய்யாதீங்க… அந்த காலத்து ‘அக்கிரகாரங்களை’ ‘தொல் பெருமை’ப் பகுதிகளாக அறிவித்து புதுப்பிக்கிறது கேரள அரசு. – ‘இந்து’ செய்தி...

காந்தி படுகொலை ஆவணப்படம் வெளியீடு

காந்தி படுகொலை ஆவணப்படம் வெளியீடு

காந்தி படுகொலை குறித்து ஆவணப் படம் வெளியீடும், அதன் ‘உண்மை-பின்னணி’ என்ற தலைப்பில் கருத்தங்கமும் எஸ்.டி.பி.அய். கட்சி சார்பில் 3.2.2016 அன்று மாலை சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எ°.எம். தெகலான் பாகவி ஆவணப்பட குறுந்தகட்டை வெளியிட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் கட்சியின் மண்டல செயலாளர் ஏ.கரீம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, பொதுச் செயலாளர் சேக் முகம்மது அன்சாரி ஆகியோர் பேசினர். விடுதலை இராசேந்திரன், ஒரு மணி நேரம் சிறப்புரையாற்றினார். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஏராளமாக பெண்களும் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11022016 இதழ்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (11) தொன்று தொட்டு இந்தியா ஒரே நாடு, என்கிறார் ம.பொ.சி. வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (11) தொன்று தொட்டு இந்தியா ஒரே நாடு, என்கிறார் ம.பொ.சி. வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மை யில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி தமிழகம் தனி நாடாகக் கூடாது என்பதற்கு காரணங்களை அடுக்குகிறார், ம.பொ.சி. அயல்நாட்டு உதவி?: “அமெரிக்கா போன்ற அயல் நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம்” என்று கூறலாம். இப்போதே, பாரதத்துக்குற்ற நாணய மாற்று சக்தியையும் மீறி உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது, செய்தும், விலைவாசிகளை குறைக்க முடிய வில்லையே! கேட்டவனுக்கெல்லாம், கேட்ட போதெல்லாம் அவனவனுக்குத் தேவைப்படும் அளவுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்க அமெரிக்க நாட்டார் வள்ளல் பெருமக்கள் அல்லர். தாங்கள் உதவும் நாட்டிலிருந்தும், தங்கள் நாட்டிற்கு என்ன ஆதாயம் கிடைக்கும்? என்று அலசி ஆராய்ந்து பார்த்தப் பின்னர் தான் அவர்கள் உதவி புரிவார்கள்…… என்ன இருக்கிறது?: தமிழ் நாட்டில் உலக நாடுகளுக்குத் தேவைப்படுகின்ற...

ரோகித் மரணத்திற்கு நீதிக் கேட்டு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம்

அய்தராபாத் பல்கலை தலித் ஆராய்ச்சி மாணவர் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. தூத்துக்குடியில் – பார்ப்பன சூழ்ச்சியால் மரணமடைந்த ‘ரோஹித் வெமுலா’வின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்பு நிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் 01.02.2016 அன்று மாலை 5 மணியளவில் சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அம்புரோசு தலைமை உரையைத் தொடர்ந்து, ம.தி.மு.க.வின் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து ளுனுஞஐயின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மைதீன் கனி, ஆதித் தமிழர் கட்சியின் சு.க.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி...

பிப்.14 உலக காதலர் நாள் உயர்ந்த காதல் எது?

உணர்ச்சிகளால் உந்தப்படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரிதலோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து. “உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்!” – குடிஅரசு 21.7.45 நண்பர்களாகப் பழகி புரியுங்கள்! “ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடிகாரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரை யொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக் கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான்...

சிறைவாசிகளை விடுதலை செய்வதில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்? கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி

  பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் நீண்டகால சிறைவாசிகளையும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட் டோரை அரசியல் அமைப்பு சட்டம் 161வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை, மதுரை, கோவை நகரங்களில் மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை பிப்ரவரி 7ஆம் தேதியன்று நடத்தியது. மதுரை பழங்காநத்தம் பகுதியில் பிப்ரவரி 7ம் தேதி மாலை 4 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஐதர்அலி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது, மனித உரிமை அமைப்பு சார்பில் ஹென்றி டிபேன், புகழேந்தி, அருண்சோரி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தனது உரையில், “இந்த நாட்டை ஒரு ஜனநாயக...

திலீபன் மகேந்திரன் கையை முறித்த காவல்துறைக்கு கழகம் கடும் கண்டனம்

இந்திய தேசியக் கொடியை எரிக்கும் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட தற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் திலிபன் மகேந்திரனை காவல்துறை கைது செய்து, அவரது கையையும் மூன்று விரல்களையும் இரும்புக் கம்பியால் உடைத்திருக்கிறது. கொடி எரிப்பு அவமதிப்பு என்றால், அதற்கான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடரட் டும். ஆனால், காவல்துறை காட்டு மிராண்டித்தனமாக கையை உடைக் கும் அளவுக்கு போயிருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம், காவல் துறையின் இந்த செயலை வன்மை யாகக் கண்டிக்கிறது. கடந்த 6ஆம் தேதி மயிலாடுதுறையில் “ஜாதிக் கொரு சுடுகாடு; இது சுதந்திர நாடா?” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் இந்த செயலுக்காக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினார். சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தின் இந்த வன்முறை வெறியைக் கண்டித்து, கடந்த 8ஆம் தேதி காவல் நிலையத்தை...