Tagged: பெரியார் முழக்கம் 10042014 இதழ்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பாக கோடை விடுமுறைக் காலத்தில் கொடைக்கானலில் குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 15 முதல் 19 வரை 5 நாள்கள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். 5 நாள்களுக்கு உணவு தங்குமிடம், சுற்றுலா உள்பட ரூ.1000 மட்டும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முகாமிற்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கவனத்திற்கு: பயிற்சி நடைபெறும் இடம் : கொடைக்கானல் வரவேண்டிய இடம் : திண்டுக்கல் பேருந்து நிலையம் வரவேண்டிய நேரம் : 14.05.2014 புதன் கிழமை 4 மணிக்குள் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட வேண்டும். அங்கிருந்து கொடைக்கானலுக்கு குழந்தைகளை மட்டும் தனிப் பேருந்தில் நாங்களே அழைத்துச்...

பெண்கள் தந்த ‘பெரியார்’ பட்டம்: ‘குடிஅரசு’ கூறும் வரலாறு

பெண்கள் தந்த ‘பெரியார்’ பட்டம்: ‘குடிஅரசு’ கூறும் வரலாறு

பெரியார் பற்றிய அவதூறுகள் – தீவிர ‘தமிழ்த் தேசியம்’ பேசும் சில குழுக்களால் இணைய தளங்களிலும் எழுத்துகளிலும் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழனுக்கு அடையாளம் ஜாதியே என்று பார்ப்பனியத்துக்கு சேவை செய்யவும் ஒரு சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். ம.பொ.சி.யின் பேத்தியான பரமேசுவரி, ‘பெரியார்’ என்ற பட்டத்தை பெண்கள் கொடுத்தார்கள் என்பதற்கே சான்று எதுவும் இல்லை என்று எழுதியிருக்கிறார். இந்த அவதூறுகளுக்கு மறுப்பாக பெண்கள் மாநாட்டில் 13.11.1938இல் பெரியாருக்கு பட்டம் தந்த செய்தியை ‘குடிஅரசு’ (நவம்.20, 1938) இதழிலிருந்து எடுத்து இங்கு வெளியிடுகிறோம். தமிழ்மொழிக்கும் பெண்கள் உரிமைக்கும் 1938ஆம் ஆண்டிலேயே பெரியார் இயக்கம் குரல் கொடுத்திருக்கிறது என்பதை ‘காமாலைக் கண்’ கொண்டு பார்ப்போருக்கு உணர்த்திட, பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் இங்கு வெளியிடுகிறோம். தீர்மானங்களில் சில: இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு...

மோடி பிரதமராகக் கூடாது – ஏன்?

மோடி பிரதமராகக் கூடாது – ஏன்?

சென்னையில் கழகம் தொடர் கூட்டங்கள் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 5.4.2014 முதல் 10.4.2014 வரை மோடி ஏன் பிரதமர் ஆகக் கூடாது என்பதை விளக்கி 5 நாள் தொடர் விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் 5.4.2014 சனி மாலை 6 மணியளவில் சைதாப்பேட்டை-ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு அருகில் நடந்த கூட்டத்தில் மனோகரன் தலைமை வகிக்க சிவா முன்னிலை வகித்தார். 6.4.2014 ஞாயிறு மாலை 6 மணியளவில் திருவான் மியூர் ஜெயந்தி தியேட்டர் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆ.சிவகுமார் தலைமை வகித்தார். 7.4.2014 திங்கள் மாலை 6 மணியளவில் இராயப் பேட்டை டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்திற்கு சித்தார்த் தலைமை வகிக்க, செந்தில் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. தொடர் கூட்டத்தில் சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வழக்கறிஞர் துரை...

பெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு

பெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு

மதிவண்ணன் நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன், பெரியார் மீது ம.பொ.சி.யின் பேத்தி பரமேசுவரி என்பவர், இணையதளத்தில் அவதூறுகள் எழுதி வருவதை சுட்டிக்காட்டி பேசினார். அவரது உரையையும், அவதூறுக்கு மறுப்பாக ‘குடிஅரசு’ பதிவுகளையும் (4 ஆம் பக்கம்) வெளியிடுகிறோம். ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள் மற்றும் மதிவண்ணன் எழுதிய, ‘உள் ஒதுக்கீடு’; ‘தொடரும் விவாதம்’; ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’, ‘ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 15.3.2014 அன்று சென்னை அய்கப் அரங்கில் நடைபெற்றது. ‘கருப்புப் பிரதிகள்’ இந்த நூல்களை வெளியிட் டுள்ளது. நூல்களை ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் வெளியிட, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். வ.கீதா, புனித பாண்டியன் மற்றும் தோழர்கள் உரையாற்றினர். நீலகண்டன் தொகுத்து வழங்கினார். ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’ நூலை அறிமுகம் செய்து பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த...

அரசியல் வழியாக – ‘சோதிட நம்பிக்கையாளர்கள்’ எழுப்பும் கேள்விகளுக்கு பதில்

அரசியல் வழியாக – ‘சோதிட நம்பிக்கையாளர்கள்’ எழுப்பும் கேள்விகளுக்கு பதில்

சோதிட நம்பிக்கையாளர்கள் சோதிடமும் ஒரு அறிவியல் தான் என்று முன் வைக்கும் வாதங்களுக்கு அறிவியல் மறுப்பு. எம்.ஜே. அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது. குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில் ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு. 1950களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். நடக்கப் போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள். சோதிடர் சொன்ன நாள் 27 மே, 1954. இந்தச் சம்பவத்திற்கு நேர்மாறாக இன்னொரு சம்பவத்தை நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த மத்தாய் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார். நேரு அவரிடம், “நான் 74 வயதுக்கு மேல் இருக்க மாட்டேன்” என்று சொல்லி யிருக்கிறார். சோதிடர்கள் சொல்லியிருப்பார்கள் என்ற மத்தாய்க்கு நேரு அளித்த பதில்: “இல்லை. குடும்பத்தில் இருந்த ஆண்களின் வயதுகளின் சராசரியைக் கணக்கிட்டேன். சரியாக 74 வருடங்கள், 6 மாதங்கள், 13 நாட்கள் வருகின்றன.”...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

பா.ஜ.கவில் நமோ மோடி பஜனை பாடுவதை ஏற்க முடியாது.   – ஜஸ்வந்த் சிங் எவ்வளவு காலத்துக்குத்தான் ராம பஜனையே பாடிக் கொண்டிருப்பது? ஒரு மாற்றம் வேண்டாமா? எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெய லலிதாவை முதலமைச்சர் களாக்கியதே காங்கிரஸ் தான்.  – தங்கபாலு காங்கிரஸ் முதல்வர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்புகள் வந்தபோதும்கூட காங்கிரஸ் அதை உதறிவிட்டு, இவர்களை முதல்வராக்கியதா சொல்ல வர்றீங்க… அப்படித் தானே…. பா.ஜ.க. கூட்டணியை நடிகர் ரஜினி ஆதரிப்பதாக வெளிப் படையாக அறிவிக்க வேண்டும்.    – பா.ஜ.க. தலைவர்கள்    வற்புறுத்தல் ஆமாம்! ரஜினி ‘வாய்ஸ்’ கொடுத்தால்தான் மோடி அலை வீசுதுன்னு மக்களை நம்ப வைக்க முடியும் ! குஜராத்தில் மனிதமலத்தை எடுக்கும் தொழிலில் 13 லட்சம் பேர் ஈடுபட் டுள்ளார்கள்.  – கர்மோச்சி அந்தோலன் ஆய்வு மய்யம் தகவல்! சும்மா சொல்லக்கூடாது; மோடி எப்படி எல்லாம் வேலை வாய்ப்புகளை உருவாக்குறாரு, பாருங்க! கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 ஆவது பிரிவுகள் தொடங்க, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்...

காவல்துறையின் இழிவான அறிவிப்பு: அரசியல் சட்டமும் மனு சாஸ்திரமும் ஒன்றுதானாம்!

காவல்துறையின் இழிவான அறிவிப்பு: அரசியல் சட்டமும் மனு சாஸ்திரமும் ஒன்றுதானாம்!

மோடி எதிர்ப்பு பரப்புரைக்கு சென்னை மாவட்டக் கழக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பணிக்கான காவல் உதவி ஆணை யாளர், இதற்கான அனுமதி வழங்கும் ஆணையில், கூட்டத்துக்கான அனுமதிக்கு நிபந்தனையாக, “மனு சாஸ்திர புத்தகம் மற்றும் சட்டப் புத்தகங்களை எரிக்கக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அரசியல் சட்டத்துக்கு சமமானது-மனு சாஸ்திரம்” என்று கூறுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. சட்டத்தின் முன் அவைரும் சமம் என்று சட்டம் எழுதி வைத்துக் கொண்டு சமூகத்தில் ‘பிராமணன்’ மேலானவன், ‘சூத்திரன்’ இழிவானவன் என்று கூறும் மனு சாஸ்திரத்தை சட்டத்துக்கு சமமானதாகக் கருதுகிறது, காவல்துறை. திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மனு சாஸ்திர எரிப்புப் போராட்டத்தின் தாக்கத்தை அரசின் இந்த ஆணையில் காண முடிகிறது. ஆனாலும், தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை இப்படி ஒரு நிபந்தனையை விதித்திருப்பது தமிழினத்தையே அவமதிப்பதாகும். பெரியார் முழக்கம் 10042014 இதழ்

திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு

திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு

6.4.2014 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் எதிரிலுள்ள ‘பிரிட்ஜ் அகடாமி’ அரங்கில், திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கழக இணைய தள செயலாளர் அன்பு. தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கழதத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் தி.தாமரைக் கண்ணன் உள்பட 50 தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக அதிகாரபூர்வ இணையதளமான செழுமைப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இணையதளங்களில் பெரியார் பற்றியும், பெரியார் இயக்கங்கள் பற்றியும் அவதூறு பரப்புவதை, எப்படி எதிர்கொள்வது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. இணையதளத்தில் பெரியார் முழக்கம், புகைப்படம், ஒலி, ஒளி, அறிக்கைகள், நிகழ்வுகள், மின்னூல்கள் முதலியவற்றை பதிவேற்றுவதற்கு தனித்தனியாக பொறுப்பாளர்கள் கீழ்கண்டவாறு நியமிக்கப்பட்டனர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழை இணையத்தில் பதிவேற்றும் பணி,...

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பிரகடனம் : இடஒதுக்கீட்டுக்கு ‘சமாதி’

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பிரகடனம் : இடஒதுக்கீட்டுக்கு ‘சமாதி’

வாக்குப் பதிவின் முதல் கட்டம் முடிந்த பிறகு, தேர்தல் அறிக்கையை ஒரு வழியாக வெளியிட்டு விட்டது பா.ஜ.க,. அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு அயோத்தியில் இராமன் கோயில் கட்டப் போவதாகவும், காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டமான 370 ஆவது பிரிவை நீக்கப் போவதாகவும், சிறுபான்மையினரின் மதச் சட்டங்களை நீக்கி, ஒரே சிவில் சட்டம் கொண்டு வரவிருப்பதாகவும் கூறும் தேர்தல் அறிக்கை – இட ஒதுக்கீடு கொள்கையிலும் கைவைத்து விட்டது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதியடிப்படையிலான இடஒதுக்கீடு முறைக்கு ‘சமாதி’ கட்டிவிட்டு அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு முறையைக் கொண்டு வரப் போவதாக கூறுகிறது. இது குறித்து பா.ஜ.க.வின் பேச்சாளர் நிர்மலா சீத்தாராமன், இடஒதுக்கீடு முறைகளை மாற்றி அமைக்கத் திட்டமிட் டுள்ளதாகக் கூறியுள்ளார். மிகவும் பின்தங்கியுள்ள 100 மாவட்டங்களை அடையாளம் கண்டு ஏனைய மாவட்டங்களோடு தரம் உயர்த்தும் முறையைக் கொண்டு வருவதாக இடஒதுக்கீட்டு முறை இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். இடஒதுக்கீட்டுக்கான சமூகக்...