Tagged: பெரியார் முழக்கம் 08052014 இதழ்
நாட்டின் பெரிய கோயில்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகின்றன. கோயில் வழிபாட்டு முறைகளை தீர்மானிக்கிறவர்கள் பார்ப்பனர்கள்தான். தமிழ்நாடு கோயில்களில் உரிய ஆகமப் பயிற்சி பெற்ற எவரும் கருவறைக்குள் நுழையும் உரிமை பார்ப்பனர்களால் இன்று வரை மறுக்கப்பட்டே வருகிறது. ஆனால், கேரளாவில் இப்படி ஒரு தடை இல்லை. தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் நீதிபதி மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட சைவ வைணவ மதத் தலைவர்கள் இடம் பெற்ற குழு பரிந்துரை செய்த பிறகும் கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் மீண்டும் ஒரு முறை நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் தாங்கள் மட்டுமே நுழைந்து பூஜை செய்ய முடியும். ‘சூத்திரர்’ நுழைந்தால் தீட்டு என்று சாதிக்கிறார்கள். இது மத சுதந்திர உரிமையில் குறுக்கிடுவதாகும் என்று உச்சநீதிமன்றம் வரை போய் தடை ஆணை வாங்கி விட்டார்கள். பக்தி மார்க்கத்தில் ஊறித் திளைத்திருக்கும் சொரணையுள்ள ‘தமிழர்’...
சமூகத்தில் நிகழும் அரசியல்-பொருளாதார செயல்பாடுகளை மக்கள் மேம்பாட்டுக்கு பயன்படவிடாது, ஜாதியம் விழுங்கி செரிமானம் செய்கிறது என்று பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் 30.3.2014 அன்று சிறப்புக் கருத்தரங்கம், வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் சிறப்புடன் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மாநிலக் குழுத் தலைவர் எல்.பி. சாமி தலைமையில் நடந்த முதல் அமர்வில் ‘ஜாதியப் பாகுபாடுகளும் வன்கொடுமைகளும்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். “ஜாதியப் பாகுபாடுகளுக்கு அடிப்படையானது ஜாதியமைப்பு; ஜாதியமைப்பு உலகிலே எங்கும் இல்லாது இந்தியாவில் மட்டுமே இயங்கிக் கொண் டிருக்கிற பார்ப்பனர்களால் கட்டி எழுப்பப்பட்ட அமைப்பு. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வரும் வரை இந்தியா என்ற ஒன்று உருவாகவில்லை. ஆனால், வேத காலத்தில் தொடங்கிய பார்ப்பனர் களின் புரோகித ஆட்சிகளையே அரசர்களும் குறுநில மன்னர்களும் நடத்தி வந்தனர். இதனால் உலகில் பல்வேறு சமூக அமைப்புகளில்...
‘அறிவின் வழி’ என்ற மாத இதழ் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் பகுத்தறிவு பேசும் இயக்கம் குறித்து எழுதியுள்ள தலையங்கம் எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருளின் உண்மையான தன்மையை பகுத்து அறிந்து கொள்பவன் பகுத்தறிவாளன் ஆகிறான். தமிழ்நாட்டில் பகுத்தறிவு என்ற சொல் கடவுள் மறுப்பு என்பதையே முன்னிலைப்படுத்துகின்றது. பகுத்தறிவாளன் என்றால் நாத்திகன் என்று சொல்லிவிட்டு ஒதுக்கி விடுகிறார்கள் அல்லது ஒதுங்கி விடுகிறார்கள். ‘பகுத்தறிவு’ என்று பேசத் தொடங்கியதுமே அதைத் தட்டிக் கழித்து விட்டு, புறக்கணித்துவிட்டு ஓட்டம் பிடிக்கும் அளவுக்கு ஓர் ஒவ்வாமைப் பண்பை வளர்த்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் பகுத்தறிவுவாதம் பேசுகிறவர்கள் மூன்று பிரிவாகப் பிரித்துக் கொள்ளலாம். இதில் முதல் பிரிவினர், பகுத்தறிவு என்ற சொல்லைப் பட்டா போட்டு எடுத்துக் கொண்டிருப்பவர்கள். வேறு எவரும் பகுத்தறிவு என்ற சொல்லை பயன்படுத்துவதை அல்லது அந்தப் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்து வதை விரும்பாதவர்கள். அவ்வாறு ஓர் இயக்கம், அமைப்பு தொடங்கப்படுமானால், அதற்கு யாரும்...
“கடவுள் எப்படி எங்கள் குழந்தையை இப்படி ஒரு கொடூரமான முறையில் எடுத்துக் கொள்ளலாம்?” என்று கேட்கிறார், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பில் பலியான இளம் பெண் பொறியாளர் சுவாதியின் பாட்டி! காலம் முழுதும் கடவுளை நம்பிக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் நியாயமான கோபத்துக்குப் பின்னால், கொந்தளிக்கும் உணர்வுகளை குறைத்து மதிப்பிட முடியாது. பேத்தியைப் பறி கொடுத்த துயரத்தின் வெளிப்பாடு – அவர் நம்பும் கடவுளின் நேர்மையை சந்தேகிக்க வைத்துவிட்டது. எப்படியோ குண்டு வைப்பதை கடவுளால் தடுக்கவும் முடியவில்லை. இப்போது மக்களின் கோபம் ஆட்சியின் செயலின்மை மீதுதான். ‘கடவுள்’ தப்பி விட்டார்! ‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பது’ என்று கூறுவார்கள். எல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆட்சி நிர்வாகம் சுறுசுறுப்பாகக் களமிறங்கிவிடும். ஆரவாரம், பதட்டம், குற்றவாளிகள் தேடுதல், பாதுகாப்பு கெடுபிடிகள் – இவை எல்லாம் சில வாரங்கள் தொடரும். தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து செய்தி கிடைக்காத சோகத்தில் மூழ்கிக் கிடந்த...
‘அட்சய திருதை’ நாளில் தங்கம் வாங்கினால், அது மேலும் மேலும் பெருகும். – நகைக்கடை விளம்பரங்கள் அப்படின்னா, கடைக்காரங்க தங்கத்தை வாங்கத்தானே வேண்டும்! ஏன், கூவிக் கூவி விக்குறாங்க? ‘அட்சயம்’ என்றால், ‘வளரும்’ என்பது அர்த்தம். தங்கம்தான் வாங்க வேண்டுமென்பது அல்ல, எதை வாங்கினாலும் வளரும். – செய்தி அப்ப இந்தியா, உலக வங்கியிடம் கடன் வாங்குவதற்கும் அதுதான் உகந்த நாள்ன்னு சொல்லுங்க! ‘அட்சய திருதை’ நாளில் ஒவ்வொரு நொடியும் புனிதமானது. தனியாக முகூர்த்த நேரம் பார்க்க வேண்டியதில்லை. – செய்தி ஆமாம்! வர்த்தக நலன் கருதி அன்றைக்கு ‘ராகு காலம்’, ‘எமகண்டம்’ எல்லாம் ‘தள்ளுபடி’! வைகாசி மாதத்தில் வளர்பிறை மூன்றாம் திதியில் வருகிற திருதியைதான் உண்மை அட்சய திருதி திருநாள். இந்த நாளில் சுவாதி நட்சத்திரம் இணைந்து விட்டால், நன்மை பயக்காது என்பதற்காக, அது சித்திரை மாத வளர்பிறை நாள் திருதிக்கு மாற்றப்பட்டு, அட்சய திருதி கொண்டாடப்படுகிறது....
தனியார் துறை இடஒதுக்கீடு; முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு என்று தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் சமூக நீதி பேசியது. ஆனால், டெல்லி அதிகார மய்யங்களில் சமூக நீதியை முற்றிலுமாக புறக்கணித்தது என்ற உண்மை வெளி வந்துள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் முதல் நிலை ‘ஏ’ குரூப் அதிகாரிகள் பதவியில் ஒரு தாழ்த்தப்பட்டவரோ, பழங்குடியினரோ இல்லை. 2013 ஜனவரி நிலவரப்படி இந்தப் பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இரண்டே பேர் மட்டுமே! ஏனைய 49 பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர்தான். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் அன்சாரி அலுவலகத்தில் ஒரு தலித் அதிகாரிகூட இல்லை. குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் முதல் நிலை அதிகாரியாக ஒரு பிற்படுத்தப்பட்டவர்கூட இல்லை. தலித் அதிகாரிகள் 3 பேரும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மட்டுமே உள்ளனர். எஞ்சிய 27 உயர்நிலை அதிகாரிகள் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் தான்! (இடஒதுக்கீடுப் பிரிவில் இடம் பெறாதவர்கள்) திட்டக் குழுவிலும் சமூகநீதிக்கு...