Tagged: பெரியார் முழக்கம் 06032014 இதழ்

அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்!: மார்ச் 8 – சர்வதேச மகளிர் நாள்

அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்!: மார்ச் 8 – சர்வதேச மகளிர் நாள்

அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்! அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்! உங்கள் பொய்மை பேச்சும் இருட்டுக் காரியங்களும் அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்! தாய்மை எமக்கென தம்பட்டம் அடித்து நீவீர் பூட்டிய அடிமை விலங்குகள் அனைத்தும் அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்! பெண்மை போற்றுவோமென தெருவெல்லாம் கூவிவிட்டு மனைதோறும் அடிமைத்தன ஆணிவேரை வார்த்தெடுக்கின்ற உங்கள் இரட்டை நாக்கு அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்! தாய்மை என்றாலும் தாரமே என்றாலும் “சேவை செய்தே கடவாய்” எனச் சபித்துச்சொன்ன – உங்கள் மறைகள் அத்துணையும் அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்! என் ஜனனத்தின் வாயிலை போகத்தின் பொருளாக வார்த்தெடுத்த உங்கள் வேட்கை நரம்புகள் அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்! தேவதை என்று கூறியே எங்கள் கைகளில் கரண்டியை கொடுத்த  – உங்கள் அழுகுணி ஆட்டங்கள் அழிந்தே போகட்டும்! ஒழிந்தே போகட்டும்! தாலி எனக்கயிற்றை கட்டி சாகும்வரை எனை ஆளும் சாக்கடை அரசியல் அழிந்தே போகட்டும்!...

இங்கே ‘இரட்டைக் குவளை’யின் பெயர் ‘இராமபாத்திரம்’:மோடியின் குஜராத்தில் தீண்டாமை அவலங்கள்

இங்கே ‘இரட்டைக் குவளை’யின் பெயர் ‘இராமபாத்திரம்’:மோடியின் குஜராத்தில் தீண்டாமை அவலங்கள்

நரேந்திர மோடி எழுதிய நூல் ஒன்று 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. அதன் பெயர் கர்மயோகம். அவர் எழுதிய நூல் என்பதைவிட அவருடைய உரைகளின் தொகுப்பு. அதில் தலித் மக்களைப் பற்றி குறிப்பிடும்போது அவர்கள் மலம் அள்ளுதல் போன்ற பணிகளை செய்வதற்குக் காரணம், அவர்கள் அந்தப் பணிகளைப் புனிதமாகக் கருதுகின்றார்கள். “நுஒயீநசநைnஉந in ளுயீசைவைரயடவைல” ஆன்மிக அனுபவம் எனக் கூறுகின்றார். இதனால் தான் அவர்கள் மலம் அள்ளுதல் முதலாய தொழில் களை இத்தனை காலமாக செய்கின்றார்கள். அல்லாமல் அவர்கள் தங்களுக்கு வேறு தொழில்கள் கிடைக்கவில்லை என்பதனால் அல்ல என்கின்றார். அவர் அந்த நூலில் எழுதுகிறார்: “ஐ னடி nடிவ நெடநைஎந வாயவ வாநல யசந னடிiபே வாளை தடிb தரளவ வடி ளரளவயin வாநசை டiஎநடலாடிடின hயன வாளை நெநn ளடி, வாநல றடிரடன nடிவ hயஎந உடிவேiரேநன றiவா வாளை வலயீந டிக தடிb, பநநேசயவiடிn யகவநச பநநேசயவiடிn…...

உறவுக்குள் திருமணம்: ஊனமாகும் குழந்தைகள்: பெண்களை நெகிழ வைத்த பரப்புரை

உறவுக்குள் திருமணம்: ஊனமாகும் குழந்தைகள்: பெண்களை நெகிழ வைத்த பரப்புரை

அகமண முறைக்கு எதிராக கழகம் நடத்திய பரப்புரை இயக்கத்தின் பதிவுகள். கடந்த இதழின் தொடர்ச்சி. பிப்.18 காலை 10 மணிக்கு கருந்திணை இல்லத்தில் பயணக் குழுவில் உள்ள தோழர்களுக்கு பணியிடைப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அகமண முறையின் ஆபத்துகளையும், ஜாதி மறுப்புத் திருமணங்களின் அவசியத்தையும் விரிவாக விளக்கி தோழர் பூங்குழலி வகுப்பு நடத்தினார். இரண்டு நாள்களாக பயணக் குழுவிடம் பொது மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான பதில்களை அறிந்துகொள்ளும் வகையில் வகுப்பு நடந்தது. கேள்வி-பதில் முறையில் பயிற்சிக் கையேடும் வழங்கப்பட்டது. அந்தக் கையேட்டின் செய்திகளை அடிப்படையாக வைத்து பரப்புரைக் குழுவினர் வீதி நாடகங்களையும், சொற்பொழிவுகளையும் திட்ட மிட்டனர். அத்தகைய வீதி நாடகங்களைப் பார்த்து, அதன் உண்மைகளைப் புரிந்த கிராமத்துப் பெண்கள் நமது தோழர்களிடம், ‘எங்கள் ஊரில், எங்கள் வாழ்க்கை யில் நடப்பதை நாடகமாக நடத்துள்ளீர்கள். இனி ஒரு ஜாதிக்குள் திருமணம் செய்யவே மாட்டோம்’ என கண்ணீருடன் உறுதியளித்த நெகிழ்வான நிகழ்வு களோடு...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

அமைச்சர்கள் – தலைவர்களின் குடும்ப வாரிசு களுக்கு தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் அனுமதிக்காது.       – ராகுல் அறிவிப்பு நல்ல முடிவு! அம்மா சோனியா, சகோதரி பிரியங்காவிடம் கலந்து ஆலோசித்தீர்களா, ராகுல்? மோடி எனக்கு சிறந்த நண்பர்.    – கலைஞர் ஆமாம்! திருவாரூரில் ‘முரசொலி’யை கையெழுத்துப் பிரதியாக வெளியிட்டபோது கலைஞரின் பேனாவில், மை நிரப்பிக் கொடுத்து எழுது எழுது என்று உற்சாக மூட்டிய நண்பர் ! ‘கருணை மனு’ குறித்து குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவில் எந்த மறுபரிசீலனைக்கும் இடமில்லை.    – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு இப்படி மொட்டையா சொன்னா எப்படி? அதாவது சோனியா விருப்பப்படி உள்துறை அமைச்சர் முடிவெடுத்து, அதை குடியரசுத் தலைவர் வழியாக வெளியிடும் அறிவிப்பில் உச்சநீதிமன்றமேயானாலும் தலையிடும் உரிமையே கிடையாது என்று விளக்கமாகச் சொல்லுங்க! அப்பத்தானே புரியும்! இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும்; பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் தளபதி வி.கே.சிங் அழைப்பு.              – செய்தி...

ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்: கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு

ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்: கழகத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பு

23-02-2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 6-00 மணியளவில், ஈரோடு பெரியார் மன்றத்தில் ‘மரணதண்டனை ஒழிப்புக் கருத்தரங்கம்’ நடை பெற்றது. மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண.குறிஞ்சி தலைமை தாங்கினார். தமிழ்த் தேச மக்கள் கட்சி நிலவன் அறிமுக உரை ஆற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி, திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் அற்புதம் அம்மாள், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், எழுத்தாளர் பாமரன், தமிழின பாதுகாப்பு இயக்கம் கி.வே.பொன்னையன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க் சிஸ்ட் – லெனினிஸ்ட் ஏ.கோவிந்தராசு ஆகியோர் கருத்துரை ஆற்றினர். த.பெ.தி.க குமரகுருபரன் நன்றி கூறினார். அரங்கில் “உயிர்வலி” படம் திரையிடப்பட்டது. தஞ்சையில் : 01-03-2014 சனிக்கிழமை காலை 9-30 மணி முதல், இரவு 8-00 மணிவரை, தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் தஞ்சாவூர் காவேரி திருமண மண்டபத்தில் “காவிரி எழுச்சி மாநாடு” நடை பெற்றது. காவிரி உரிமை மீட்பு,...

மேட்டூரில் முப்பெரும் நிகழ்வுகள்

மேட்டூரில் முப்பெரும் நிகழ்வுகள்

மேட்டூரில் 25.2.2014 அன்று மாலை முப்பெரும் விழாக்கள் சிறப்புடன் நடந்தன. ‘அகமணமுறையை அகற்றுவோம்; ஆரோக்கிய சமூகத்தை வளர்ப்போம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு; ‘புரட்சிப் பெரியார் முழக்கம்-2014’ஆம் ஆண்டு மலர் வெளியீடு; ஒரே ஜாதிக்குள் நிகழும் இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சந்திக்கும் உடல், மனநலக் கோளாறுகளை அறிவியல் ரீதியாக மருத்துவர்கள் முன் வைத்த கருத்துகளைத் திரட்டி உருவாக்கப்பட்ட ஆவணப் படம் திரையீடு என்ற முப்பெரும் நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை 5.30 மணியளவில் மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் ஜாதி எதிர்ப்புப் பாடல் களுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து மேட்டூர் பெரியார் பிஞ்சுகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள், பரப்புரை பயணத்தில் அகமண முறைக்கு எதிரான கருத்துகளை விளக்கிடும் திராவிடர் கலைக் குழுவினர் நடத்திய நாடகம் ஆகிய நிகழ்வுகள் அனைவரையும் கவர்ந்தன. கருந்திணை சார்பில் தயாரிக்கப்பட்ட அறிவியல் விளக்கங்களைக் கொண்ட ஆவணப் படம் திரையிடப்பட்டது. 40 நிமிடங்கள் ஓடிய...