Tagged: பெரியார் முழக்கம் 06022014 இதழ்
காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜன.30 அன்று சென்னையில் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாசிச எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து: பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு அமைப்பு. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் தேர்வு செய்யப்பட்டவர். மோடி-ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து, பிறகு பா.ஜ.க.வுக்குள் திணிக்கப்பட்டவர். மோடியை பிரதமர் வேட்பாளராக அத்வானி ஏற்க மறுத்தார். உடனே ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு சமரசம் செய்தது. அத்வானி விருப்பம் இல்லாவிடிலும் ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்கு அடிபணிந்தார். இப்போது ‘தேசம் – தேச முன்னேற்றம் – வல்லரசு – இந்திய குடிமகன்’ என்ற சொல்லாடல்களை முன் வைத்து பா.ஜ.க.வும் மோடியும் தேர்தலை அணுகுகிறது. தங்களின் ‘மதவாதம் – இந்துராஷ்டிரம்’ என்ற அடிப்படையான கொள்கைகளை தற்காலிகமாக மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைத்து இந்துக்களின் ராஷ்டிரத்தை வேத புராண சாஸ்திரங்களின்...
2013 டிசம்பர் 7, 8, 9, 10 தேதிகளில் ஜெர்மனியின் ப்ரமன் நகரில் மக்கள் தீர்ப்பாயத்தின் இரண்டாவது அமர்வு விசாரணை நடைபெற்றது. சிங்கள அரசு புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறிக் கொண்டு, இலட்சக்கணக்கான தமிழர்களை குழந்தைகள், பெண்கள், ஆயுதம் ஏந்தாத பொது மக்கள் என அனைவரையும் படுகொலை செய்ததால், கொடுந்துயரத்துக்கு ஆளான ஈழத் தமிழர்கள் நேரடி சாட்சியங்களை பிரமாண வாக்குமூலங்கள் மூலம் மக்கள் தீர்ப்பாயத்தில் பதிவு செய்தனர். இனக் கொலை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மனித உரிமை ஆர்வலர்கள், அனைத்துலக சட்ட வல்லுநர்கள், களப் பணியாளர்கள், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள் ஆகியோரின் கருத்து களையும் தீர்ப்பாயம் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. தமிழகத்திலிருந்து மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான திருமுருகன் காந்தியும், உமரும் இது குறித்த அறிக்கையை தீர்ப்பாயத்திடம் தந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பின், நான்காம் நாளான டிசம்பர் 10 ஆம் தேதி அன்று...
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் நிர்ணயித்த 60 சதவீத மதிப்பெண் நிர்ணயத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல மாதங்களாக சமூக நீதி அமைப்புகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தபோதும், அதை மதிக்காமல் ‘கேளாக் காதுடன்’ இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, இப்போது 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு மாநில அரசும் தகுதித் தேர்வு மதிப்பெண் நிர்ணயிப்பை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு குறைத்துக் கொள்ளலாம் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் கூறியிருந்தாலும்கூட, முதலமைச்சர் அந்த உண்மையை மறைக்கவே துடித்தார்; பழியை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் மீது தூக்கிப் போட்டார். அந்த அமைப்பு நிர்ணயித்த மதிப்பெண்ணைத்தான் தமிழக அரசு பின்பற்றுகிறது என்றார். ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டை தமது ஆட்சி பின்பற்றி வருவதாக – ஏதோ, தமிழ்நாட்டு மக்கள் விவரம் தெரியாதவர்களாகக் கருதிக் கொண்டு...
ஊடகங்கள் பா.ஜ.க.வின் ஊதுகுழல்களாக மாற்றப்பட்டு வருகின்றன. பா.ஜ.க. – மதவெறிக் கொள்கைகளை தனிப்பட்ட முறையில் ஏற்க விரும்பாத ஊடகவியலாளர்களை பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க.வினர் மிரட்டி வருகிறார்கள். 17 ஆண்டுகளாக சன் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சி நடத்தும் வீரபாண்டியன் தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமியர்கள் உரிமைகள் – மதவெறி சக்திகளின் ஆபத்து பற்றி கருத்து தெரிவித்தார். அதன் காரணமாக அவர் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என்று. தமிழ்நாடு பா.ஜ.க. ‘சன்’ தொலைக்காட்சி நிறு வனத்துக்கு கடிதம் எழுதியது; சன் தொலைக் காட்சியும் பணிந்தது; வீரபாண்டியன் நிறுத்தப்பட்டு விட்டார். ‘இந்து’ ஏட்டின் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் சித்தார்த்த வரதராஜன். கடந்த அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகிவிட்டார். “கொள்கை ரீதியாக மோடியை ‘இந்து’ எதிர்க்கிறது. ஆனால், தேசிய அரசியலில் வளர்ந்து வரும் மோடிக்கு உரிய முக்கியத்துவம் ‘இந்து’வில் தரப்படவில்லை. இதற்கு சித்தார்த் வரதராஜன் பின்பற்றிய நெறிமுறைகளே காரணம்” என்று குற்றம் சாட்டியுள்ளார்...
சிறைப்படுத்தப்பட்டுள்ள கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்கள் அம்பிகாபதி, அருண்குமார், கிருட்டிணன் ஆகியோர் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கம் செய்யக் கோரும் வழக்கு உயர்நீதிமன்றத்தில் (4.2.2014) அன்று நீதிபதிகள் எஸ்.இராஜேசுவரன், பி.என்.பிரகாசு அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வைகை நேர் நின்றார். அரசு வழக்கறிஞர் வராததால் வழக்கை பிப்.28 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் கேட்டார். இதற்கு மூத்த வழக்கறிஞர் வைகை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு வழக்கறிஞர் வரவில்லை என்று கூறி அரசு வழக்கைத் தள்ளிப் போட விரும்புவதற்கு நீதிமன்றம் துணை போகக் கூடாது. இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடியதாகும். 90 நாட்களாக ஒரு இயக்கத்தின் தலைவர் எந்த அடிப்படையும் இல்லாத ஒரு வழக்கில் சிறைபடுத்தப்பட்டுள்ளார். அவர், இன்றைக்கே விடுதலையாக வேண்டும் என்பதே எங்கள் நிலை....
ஜாதி மறுப்பு திருமணங்களை தடுக்காதே! திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வரும் ‘சுயமரியாதை சமதர்ம’ப் பரப்புரையின் இரண்டாவது கட்ட பரப்புரைப் பயணம் பிப். 16 ஆம் தேதி சிவகங்கையில் தொடங்கி, 25 ஆம் தேதி மேட்டூரில் நிறைவடைகிறது. பயணத்தில் தமிழர் சுயமரியாதைக்கு எதிரான ஜாதியமைப்பைத் தகர்த்திட ஜாதி மறுப்புத் திருமணங்களை வலியுறுத்தி பரப்புரை நிகழும். ஒரே ஜாதிக்குள் நடக்கும் திருமணங்களால் ஏற்படும் உடல் ரீதியிலான உளவியல் ரீதியிலான பாதிப்புகளை அறிவியல் பார்வையில் விளக்கப்படும். ஜாதியற்றோருக்கு தனி இடஒதுக்கீடு வலியுறுத்தப்படும். பயணத் திட்டங்களை விளக்கி பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: 16.2.2014 ஞாயிறு – பகல் 1 – சிவங்கை, மாலை 4 – காளையார் கோவில், இரவு 7 – காரைக்குடி. 17.2.2014 திங்கள் – காலை 10 – நத்தம், மாலை 4 – அஞ்சுகுழிப்பட்டி, மாலை 5.30 – கோபால்பட்டி, இரவு 7 – சாணார்பட்டி....
பெண்கள், இளைஞர்கள் முன்னேறாவிட்டால், இந்தியா வல்லரசாக முடியாது. – ராகுல் காந்தி என்னவோ, சுதந்திரத்துக்குப் பிறகு இப்பத்தான் முதன்முதலாக காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதுபோல் பேசுறீங்க… திருப்பதியில் – சொர்க்க வாசல் தரிசனத்துக்கு முக்கிய பிரமுகர் களுக்கான டிக்கட்டுகளை கோயில் நிர்வாகம் முறைகேடாக விற்றுள்ளது. – ஆந்திராவில் வழக்கு அப்படித்தாங்க விற்க முடியும்! முறையாக டிக்கட் தருவது என்றால், நேராக ‘சொர்க்கத்துக்கு’த்தான் போக வேண்டியிருக்கும்; புரிஞ்சுக்காம வழக்குப் போடாதீங்க! காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை ‘கடவுளே’ பட்டியலிடுவார். – ப. சிதம்பரம் இப்படிச் சொன்னால் எப்படி? கண்களுக்குத் தெரியாத சாதனை களை கண்களுக்கே புலப்படாத கடவுள் பட்டியலிடுவார் என்று புரியும்படி சொல்லுங்க, சார்! புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து அபிஷேகப்பாக்கம் சிங்கிரி கோயில் வரை 18 ஆவது ஆண்டாக பக்தர்கள் ‘உலக நன்மைக்காக’ பாதயாத்திரை. – செய்தி ‘பாத யாத்திரை’ – உலக நன்மைக்கா? உடல் நன்மைக்கா? பக்தி என்று வந்து விட்டாலே உண்மையைப் பேசவே...