Tagged: பெரியார் முழக்கம் 05062014 இதழ்

விடுதலைப்புலியின் களப்போருக்கு பெங்களூர் “அண்ணாச்சி”யின் அளப்பரிய உதவி! கழகத் தலைவர் உருக்கமுடன் நினைவு கூர்ந்தார்

விடுதலைப்புலியின் களப்போருக்கு பெங்களூர் “அண்ணாச்சி”யின் அளப்பரிய உதவி! கழகத் தலைவர் உருக்கமுடன் நினைவு கூர்ந்தார்

22-05-2014 வியாழக்கிழமை மாலை 6-00 மணியளவில், கர்நாடக மாநிலம், பெங்களூர்த் தமிழ்ச் சங்க கட்டிடம், திருவள்ளுவர் அரங்கில் மறைந்த, பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவரும், கர்நாடகத் தமிழர்ப் பேரவையின் தலைவருமாகிய திரு பா.சண்முகசுந்தரம் (எ) அண்ணாச்சி அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. மறைத்திரு பா.சண்முகசுந்தரம் நினைவு அறக்கட்டளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் “அண்ணாச்சி சிறப்பு மலர்” வெளியிடப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மலரை வெளியிட உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பெற்றுக் கொண்டார். காவேரிக் கலவரம், தொடர்வண்டித் துறையினரின் நிலம் கையகப்படுத்துதல், தலைமுறைக் கணக்காய் வாழ்ந்தோரை வனத்துறையினர் விரட்டி அடித்தல் போன்ற நிகழ்வுகளில் கருநாடகத் தமிழரின் உரிமை காக்க முன் நின்றவரும்; ஈழ விடுதலை ஆதரவாளரும்; விடுதலைப் புலிகளின் தோழருமான அண்ணாச்சி அவர்களை நினைவு கூர்ந்து, பலரும் உரையாற்றினர். கழகத்தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம்: கொளத்தூரில்...

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

காஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்வதற்கு வழங்கப் பட்டுள்ள 370 ஆவது பிரிவை நீக்கும் நோக்கத் தோடு மோடி ஆட்சி விவாதங்களைத் தொடங்கி யிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜிதேந்திரசிங் பிரதமர் அலுவலக இணையமைச்சராக்கப்பட்டுள்ளார். பதவி ஏற்ற அடுத்த நாளே இந்த விவாதத்தை அவர் தொடங்கிய நிலையில், ‘370’ உருவான வரலாற்றை விளக்குகிறது இக்கட்டுரை. இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனா, அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய பெரும்பான்மையானவர்கள் அறிய மாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும் பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன. இணைய மறுத்த ஐதராபாத் சமஸ்தானத்தை இராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்து வந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இ ஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தானுடன்...

இருளர் பழங்குடியினருக்கு மறுக்கப்படும் உரிமைகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

இருளர் பழங்குடியினருக்கு மறுக்கப்படும் உரிமைகளைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.5.2014 சனிக் கிழமை மாலை 4 மணியளவில் இருளர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்டத் தலைவர் ந.வெற்றிவேல் முன்னிலை வகிக்க, அறிவியல் மன்ற செயலாளர் சி.ஆசைத் தம்பி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் செ.நாவாப்பிள்ளை, ந. வெற்றிவேல், மதி, காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் செங்குட்டுவன், வி.வி.மு. பொருப் பாளர் இராமலிங்கம், கழக வழக்கறிஞர் துரை அருண், க. இராமர், பழங்குடியினர் பாதுகாப்பு முன்னணி தலைவர் சுடர்வொளி சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். 1952இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியினர் ஆறரை லட்சம் பேர், 2014-லும் அதே ஆறரை லட்சம் மக்கள் தொகை இருப்பதாக கூறுவது எப்படி சரியாகும்? இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. அதனால் இவர்களுக்கு இருப்பிட சான்றிதழ்...

தலையங்கம் : கள்ள மவுனம்! 0

தலையங்கம் : கள்ள மவுனம்!

19 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையால் “தூக்கிலிடப்பட்ட” தனது கணவரின் மரணத்துக்கு நீதியைப் பெற்றிருக்கிறார், அஞ்சலை! அரியலூர் மாவட்டம் வேப்பூர் ஆதி திராவிடர் குடியிருப்பில் வசித்துவரும் அஞ்சலை நடத்திய போராட்டம் இப்போது உதவி ஆணையராக உள்ள ஒரு காவல்துறை அதிகாரிக்கு கைவிலங்கிடச் செய்திருக்கிறது. மைனர் பெண் ஒருவர் காதலனுடன் ஓடிய வழக்கு அது. பெண்ணின் தந்தை, மகளைக் கண்டுபிடித்துத் தர உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விசாரணையைத் தொடங்கிய பாடலூர் காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி காந்தி என்பவர் அடைக்கலம் தந்த சந்தேகத்தின் பேரில் பாண்டியன் எனும் சுமை தூக்கும் தலித் தொழிலாளியை விசாரிக்கிறார். ஏதும் தெரியாத அந்த அப்பாவி கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கினார். காவல்துறை நடத்திய படுகொலை இப்போது நிரூபிக்கப்பட்டு, அதிகாரி கஸ்தூரி காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் இயக்கங்களுடன் இணைந்து அஞ்சலை நடத்திய போராட்டம் வீண் போகவில்லை. குறிப்பாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் இந்த வழக்கைத் தொடர்ந்து...

‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு

‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு

ஜாதி மறுப்புக் கொள்கைகளை வாழ்வியலாக்கி வாழும் பெரியார் குடும்பங்களின் சந்திப்பு பயிற்சியரங்கை ‘புதிய குரல்’ அமைப்பு ஆண்டுக்கு இரு முறை கூடி நடத்தி வருகிறது. பெரியார் இயக்கங்களுக்கும் அப்பால் வாழும் குடும்பங்களை ஒன்று திரட்டி கருத்துப் பரிமாற்றத்தோடு கொள்கை உறவுகளை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தோழர் ஓவியாவும் அவரது தோழர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த 23, 24, 25 தேதிகளில் கன்னியாகுமரியில் நடந்த குடும்ப சந்திப்பு நிகழ்வில், மதம்-மூடநம்பிக்கை-பெண்ணுரிமை குறித்த கருத்துகள் விவாதிக்கப்பட்டன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மதம் குறித்து உரையாற்றி, விவாதங்களிலும் பங்கேற்றார். குழந்தை களுக்கான அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வுகள் இசைப் பாடல்களோடும் தனியே நிகழ்ந்தன. அ. மார்க்ஸ் மதத்தின் சர்வதேச அரசியல் குறித்துப் பேசினார். அமைப்பின் தோழர்கள் தோழியர்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இரவில் ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. பெரியார் முழக்கம் 05062014 இதழ்

வினா-விடை!

வினா-விடை!

ஏழுமலையானுக்கு விசாகப்பட்டினத்தைச் சார்ந்த பக்தர், ரூ.30 இலட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ எடையுள்ள பாத கவசம் (செருப்பு) வழங்கினார்.   – செய்தி ஏழுமலையான் எந்தக் காலத்திலும் எழுந்து நடக்கவே போவதில்லை என்பதில் பக்தருக்கு அவ்வளவு உறுதியான நம்பிக்கை போலும்! அதனால்தான் ஒரு கிலோ எடையில் செருப்பு. 1967இல் தி.மு.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த போது 41.10சதவீதமாக இருந்த காங்கிரசின் வாக்கு வங்கி 2014 மக்களவைத் தேர்தலில் 4.3 சதவீதமாக சரிந்தது.     – ‘தினமணி’ செய்தி திவாலாகும் வங்கியைக் காப்பாற்ற முடியாது; இதுக் கெல்லாம் ரிசர்வ் வங்கியும் உதவி செய்யாது! அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர அன்னியநாடுகள் அல்ல.  – ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆமாம்! ‘அன்னிய முதலீடு’ பற்றி வெளிநாட்டுக் காரர்களுக்கு முடிவெடுக்க உரிமை கிடையாது; நாங்களே அந்த முடிவை தேசபக்தியோடு எடுப்போம்! தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.  – ஜி.கே. வாசன்...

வீதி நாடகப் புத்தாக்கப் பயிற்சி

வீதி நாடகப் புத்தாக்கப் பயிற்சி

சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக வீதி நாடக புத்தாக்கப் பயிற்சி, 26-05-2014 காலை முதல் மாலை வரை, சேலம் மாவட்டம் உக்கம்பருத்திக் காடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இரண்டு புதிய நாடகங்கள் உரு வாக்கப்பட்டன. நாடகங்களை காணொளியாக பதிவு செய்து, உடனுக்குடன் ஒளிபரப்பப்பட்டு, அதைப் பார்த்து திருத்தங்கள் செய்யப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு தனது ஆலோசனைகளை வழங்கினார். அடுத்தக்கட்ட பயிற்சி 2014 ஜூன் 22,23 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். பெரியார் முழக்கம் 05062014 இதழ்

கழக செயலவை கூட்டம் திருப்பூர்

கழக செயலவை கூட்டம் திருப்பூர்

திருப்பூரில் கூடிய தலைமை செயற்குழு முடிவுகள் 31-05-2014 சனிக்கிழமை அன்று காலை 10-00 மணிக்கு, திருப்பூர், கழக செயலவைத் தலைவர் தோழர் சு. துரைசாமி அவர்கள் இல்லத்தில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம், கழக செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையிலும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. தலைமை கழகப் பொறுப்பாளர்களும் மண்டல அமைப்புச் செயலாளர்களும் கலந்து கொண்டு விவாதித்த இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன: திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையை எதிர்வரும் 21-06-2014 சனிக்கிழமை அன்று கோவையில் கூட்டுவது என்று முடிவெடுக்கப் பட்டது. தமிழ்நாட்டில் இயங்கிவரும் வருமான வரித்துறை, சுங்க வரித்துறை முதலிய மத்திய அரசு அலுவல கங்களில், அண்மைக் காலமாக, அனைத்து மட்டங்களிலும், இந்தி பேசும் மாநிலங்களைச் சார்ந்தவர்களே குவிந்து வருகிறார்கள். அவர்களின் தாய் மொழியான இந்தியில் தேர்வு எழுதும் வாய்ப்பினால் மட்டுமின்றி, வட...