Tagged: பெரியாரியல் பேரொளி

பட்டுக்கோட்டை சதாசிவம் இறுதி நிகழ்வு

19.01.2016 அன்று முடிவெய்திய தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அய்யா அவர்களின் இறுதி நிகழ்வு 20.01.2016 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. 20.01.2016 அன்று கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழக தோழர்கள்,திராவிடர் கழகம்.தந்தை பெரியார் திராவிடர் கழகம்,தி.மு.க உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் நடைபெற்றது.அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன்,திருவாரூர் மாவட்ட தலைவர் ராயபுரம் கோபால்,பகுத்தறிவாளர்கழகத்தின் தரங்கை சா.பன்னீர் செல்வம்,பட்டுக்கோட்டை அண்ணாதுரை, இராம.அனபழகன்,மாங்காடு மணியரசு,சின்னத்தூர் சிற்றரசு, தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,ப.சு.கவுதமன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,ஈரோடு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், மேட்டூர்...

பெரியாரியல் பேரொளி தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் முடிவெய்தினார்

கழகத் தோழர்களிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார் ”பட்டுக்கோட்டை சதாசிவம் !” பெரியார் கொள்கைக்காகவே வாழ்ந்த பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை வளவன் எனும் சதாசிவம் (76), ஜனவரி 19, 2016 பிற்பகல் 3 மணியளவில் தஞ்சை மருத்துவமனையில் கழகத் தோழர்களிட மிருந்து விடைபெற்றுக் கொண்டார். கடந்த சில ஆண்டுகளாக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களோடு நெருக்கமாக வாழ்ந்து வந்தார் சதாசிவம். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் தங்கி, அவ்வப்போது கழக நிகழ்ச்சிகளுக்கும் ஊருக்கும் சென்று வருவார். கழகத் தோழர்கள் உடல்நலிவுற்ற அவருக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து வந்தனர். தஞ்சை நகராட்சியில் பணியாற்றிய காலத்திலேயே தனது சொந்த செலவில் திராவிடர் கழகம் சார்பாக கிராமப் பிரச்சாரங்களை தொடர்ந்து நடத்திய பெருமைக்குரியவர். இந்தப் பயணத்தின் வழியாக பல பேச்சாளர்களை உருவாக்கியவர். பரப்புரைத் திட்டங்களையும் மக்களிடம் சென்றடையத்தக்க வகையில் கருத்துகளை வடிவமைத்துத் தருவதிலும் ஆற்றல் மிக்கவர். கடும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் கொள்கை மீதான உள்ள...