Tagged: புத்தக வெளியீட்டு விழா

சிறப்பு முகாம் என்னும் சித்ரவதை முகாம் – புத்தக வெளியீட்டு விழா !

புத்தக வெளியீட்டு விழா ! தோழர் பாலன் அவர்கள் எழுதிய ‘சிறப்பு முகாம் என்னும் சித்ரவதை முகாம்”. – ஈழத்தமிழ் அகதிகளின் துயரம் எனும் நூல் வெளியீட்டு விழா 16.10.2015 வெள்ளிகிழமை மாலை 5.00 மணியளவில் கோவை அண்ணாமலை அரங்கில் நடைபெற்றது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நூல் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக ,பொதுச் செயலாளர் தோழர் கோவை கு.ராமகிருட்டிணன் மற்றும் தோழர்கள் உரையாற்றினார்

‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் விடுதலை இராசேந்திரன் உரை அமெரிக்க-இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

ஊடகவியலாளர்கள் அய்யநாதன் எழுதிய ‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கருத்தரங்கமும் அக்.2, 2015 அன்று சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் காலை முதல் இரவு வரை ஒரு நாள் நிகழ்வாக நடந்தது. காலை அமர்வில் அந்நூலை பழ. நெடுமாறன் வெளியிட, வைகோ பெற்றுக் கொண்டார். வழக்கறிஞர் பானுமதி, டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் இராமு மணிவண்ணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர். இரண்டாம் கட்ட அமர்வாக பிற்பகல் 3 மணியளவில் “அய்.நா. மனித உரிமை மன்றத் தீர்மானம்: தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் தலைமை யில் நடந்தது. நிகழ்வில் பங்கேற்று, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரை: எனது நீண்டகால நண்பர் அய்யநாதன் மிகச் சிறந்த பத்திரிகையாளர். ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் உந்தப்பட்ட அவர், தனது பத்திரிகையாளர் பணியையும் உதறிவிட்டு, செயல்களத்துக்கு வந்தவர். தமிழ் ஈழப்...