Tagged: பிரச்சாரப் பயணம்

பிரச்சார பயண நிறைவு பொதுக்கூட்டம் நம்பியூர் 13122015

ஈரோடு (வடக்கு) மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ”எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” என்னும் பயண நிறைவு விழாப் பொதுக்கூட்டம், 13-12-2015 அன்று மாலை நம்பியூர் பேருந்து நிலைய திடலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நம்பியூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ரமேசு தலைமை தாங்கினார். தோழர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார்.மேட்டூர் டி.கே.ஆர். பகுத்தறிவு இசைக்குழுவினரின் சாதியொழிப்பு, பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரோடு இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் கோபி இளங்கோ, பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் உரையாற்றினார். அந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் மன்ற உறுப்பினர்களுக்கு, அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி, கழகத் தலைவர் வழியாக வழங்கினார்.

காஞ்சி மாவட்டத்தில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

ஏன் இந்த முழக்கம்? எதற்காக இந்த பரப்புரை? நமது இளைய தலைமுறையின் கவனத்திற்க்கு சில சிந்தனைகளை முன் வைக்கிறோம். தமிழர்களாகிய நாம்,தாழ்த்தபட்ட ஜாதிகளாக, பிற்படுத்தபட்ட ஜாதிகளாக எப்போது ஆனோம்? நமது பாட்டன்,முப்பாட்டன், காலங்களில் நாம் எப்படி வாழ்ந்தோம். பார்பனருக்கும், பண்ணையார்களுக்கும் அடிமைகளாகக் கிடந்தார்கள் நமது முன்னோர்கள்.அவர்களுக்கு எழுத படிக்க தெரியாது.உழைப்பு ,அடிமை வேலை ,குல தொழில் – இவற்றை மட்டுமே செய்ய வேண்டும் என்பது அன்று சமூதாயம் விதித்த காறாரான கட்டளை. ஜாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவுகளை எப்படி தகர்த்தோம். ஜாதியத்தை எதிர்த்த பெரியாரும்,அம்பேத்கரும் போராடிப் பெற்று தந்த கல்வி, வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை பெற்றதால் தகர்தோம். இந்த இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதில் காமராசர் ஆட்சியில் தொடங்கி தமிழகத்தில் தொடர்ந்தது. அதிகாரத்துக்கு வந்த ‘திராவிட’ கட்சிகள் ஆர்வம் காட்டின. ‘ஜாதி’ யை காட்டி, ‘படிக்ககூடாத ஜாதி’;  ‘உழைக்க வேண்டிய ஜாதி’ என்றார்கள். அத்தகைய ஜாதி தடைகளை, அதே ஜாதி அடிப்படையில் கன்டறிந்து...