இலண்டனும் புதுடில்லியும்
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டனின் மேயராக தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சாதிக்கான் என்ற இஸ்லாமியர், கடந்த மே 5ஆம் தேதி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டி யிட்டவர் இங்கிலாந்து நாட்டின் ஆளும் கட்சியான ‘கன்சர்வேட்டிவ்’ கட்சியைச் சார்ந்த ஜாக். கோல்ட் ஸ்மித் என்ற பெரும் பணக்காரர். ‘நான்தான் சாதிக் கான்; இலண்டன் மாநகரத்தின் மேயர்’ என்று மக்களிடம் எளிமையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவரின் மூதாதையர் பாகிஸ்தானியர்கள். இவரது தந்தை, இலண்டன் மாநகர வீதிகளில் பேருந்து ஓட்டுனர். சாதிக் கான் 1970இல் இலண்ட னில் பிறந்தவர்; சட்டம் படித்தவர். எதிர்த்துப் போட் டியிட்ட கோல்ட்ஸ்மித், சாதிக் கானை இஸ்லாமிய பயங்கரவாதி என்று பிரச்சாரம் செய்தார். இஸ்லாமிய பயங்கரவாதம் இலண்டனுக்குள் ஊடுருவிவிடும் என்று மக்களிடம் மத வெறுப்புகளைத் தூண்டி விட்டார். இலண்டன் நகர மக்கள், இந்த ‘மதவெறி’ப் பிரச்சாரங்களை புறந்தள்ளி விட்டார்கள். ஒவ்வொரு மனிதருக்கும் பல்வேறு அடையாளங்கள் உண்டு. ஒற்றை...