Tagged: பார்ப்பனர்கள்

அர்ச்சகர்களுக்கு தேர்வு

அர்ச்சகர்களுக்கு தேர்வு

அர்ச்சகர்கள் – பிறவியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அதற்கான தகுதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்  உச்சநீதிமன்றம் வரை போகிறார்கள். ஆனால், கேரளாவில் அர்ச்சகர் நியமனம் அப்படி அல்ல. அங்கே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகி விட்டார்கள். ‘கேரள தேவஸ் வம் போர்டு’ என்ற மாநில அரசின் கோயில் நிர்வாக அமைப்பு அர்ச்சகர்களாக பணிபுரிவோருக்கு பூஜை சடங்கு ‘தாந்திரீகம்’ மந்திரம் ஒதுதல் போன்ற சடங்குகளுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தி, பிறகு தேர்வு நடத்த முடிவு செய்தது. ஏற்கனவே அர்ச்சகர்களாக இருப்பவர்கள் பயிற்சியில் சேராமலேயே தேர்வு எழுதலாம் என்றாலும், அவர்கள் திறமையை சோதிக்க நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அப்போது இரண்டு பேர் மட்டுமே சரியான விடை தந்தார்கள். 95 பேருக்கு அர்ச்சகருக்குரிய பயிற்சி இல்லை. எனவே அவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுத வேண்டும் என்று தேவஸ் வம் போர்டு அறிவித்துள்ளது. தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக...

‘தேவாரம்’ பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி

‘தேவாரம்’ பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி

சிதம்பரம் கோயில் சைவ சமயக் குரவர் நால்வராலும் பாடல் பெற்றத் தலம். பாடல்கள் என்றால் தேவாரப் பாடல்கள்தான். அவை வெறும் பாடல்கள் அல்ல. சைவர்களுக்குத் தமிழ் மறை! அந்தப் பாடல்களை நியாயமாக தில்லை வாழ் அந்தணர்கள் பாதுகாத்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் பாதுகாக்கவில்லை! இறைவனைவிட கரையான் மேல் பற்று அதிகம்போல் தெரிகிறது. தேவாரப் பாடல்களை அறையில் பத்திரமாகப் பூட்டி வைத்து கரையானுக்கு ‘அமுது’ செய்தனர். அந்தக் காலங்களில் எழுத்துக்கள் எல்லாம் வடிக்கப்படுவது ஓலைச் சுவடிகளில் தானே? ஓலைச் சுவடிகள் மலிவுப் பதிப்பும் அல்ல சந்தையில் கிடைக்கக் கூடியதும் அல்ல. கோயில்களிலும், மடங் களிலும் மற்றும் முக்கிய சைவ நெறிப் பற்றாளர் களிடம் மட்டுமே கிடைக்கக் கூடியவையாகும். அவை முழுமையாகக் கிடைப்பது முற்றிலும் அரிது. தேவாரப் பாடல்களின் ஓலைச் சுவடிகள் எல்லாம் சிதம்பரம் கோயிலில் இருந்தன. ஆனால் தில்லைவாழ் அந்தணர்கள் அவற்றை யாருக்கும் கொடுப்பதில்லை. தேவாரப் பாடல்களைக் கேட்டு ரசித்த ராஜராஜ சோழன்...

நடராசன் ‘நர்த்தன தாண்டவத்தின்’ கதை

நடராசன் ‘நர்த்தன தாண்டவத்தின்’ கதை

தில்லை நடராசன் கோயில் நிர்வாக உரிமையை தீட்சதப் பார்ப்பனர்களிடம் மீண்டும் ஒப்படைத்து விட்டது உயர்நீதிமன்றம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியும் இதற்கு மறைமுகமாக உதவியிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் அனைத்துக் கோயில் களும் கொண்டு வரப்பட்டாலும், தில்லை நடராசன் கோயில் நிர்வாகம், வழிபாடு இரண்டையும் பார்ப்பனர்களிடமிருந்து பறி போய்விடக் கூடாது என்று துடிக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டிலேயே இந்த நிலை என்றால், கடந்த நூற்றாண்டுகளில் பார்ப்பனர்களின் ‘கோரத் தாண்டவம்’ எப்படி இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. இந்த நிலையில் தில்லை நடராசன் கோயில், பெண்ணடிமை – வர்ணாஸ்ரமத் திமிரின் கோட்டையாகவும், சைவ வைணவ மோதல் களமாகவும் இருந்து வந்துள்ளதற்கான வரலாற்றுத் தகவல்களை இங்கு வெளியிடுகிறோம். சைவத்தின் பெருமை பேசும் தில்லை நடராசன், தன்னுடன் போட்டிக்கு வந்த பெண் தெய்வத்தை எப்படி சூழ்ச்சியில் வெற்றி பெற்றான் என்பதைக் கூறுகிறார் அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி. சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சில...

பார்ப்பனர்களும் வஞ்சிக்கப்படும் விவசாயமும்

பார்ப்பனர்களும் வஞ்சிக்கப்படும் விவசாயமும்

விவசாயத் துறை இந்தியாவில் நலிவடைவதற்குக் காரணம் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பார்ப்பனர்கள் விவசாயம் செய்வதை ‘மனு சாஸ்திரம்’ தடை போட்டுள்ளது. சாஸ்திரத்தை மீறி விவசாயம் செய்த இரண்டு “பிராமணர்களை” குடந்தையில் மூத்த சங்கராச்சாரி, ஜாதி நீக்கம் செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. விவசாயம் என்ற அறிவியலின் வளர்ச்சியை சமூகப் பார்வையில் முன் வைக்கும் இக்கட்டுரையை எழுதியவர் சமூக ஆய்வாளர் காஞ்சா அய்லையா. நமக்கு உணவு தரும் உழவுத் தொழிலுக்கு நன்றி சொல்லும் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. மனிதனின் ஆதித் தொழில்களில் ஒன்றான விவசாயம் எப்படித் தோன்றியது? ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடியும், காய், கனி போன்றவற்றைச் சேகரித்தும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். பிறகு காட்டு விலங்குகள் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பழக்கி மேய்க்க ஆரம்பித்தார்கள். ஒரே இடத்தில் குழுக்களாக வாழத் தொடங்கிய மனிதர்கள், தங்களைச் சுற்றியிருந்த நிலத்திலிருந்தே உணவைப் பெற முயற்சித்தனர். அந்த முயற்சிதான், மனித இனம் பெரிய...

பார்ப்பன-பனியா ஆதிக்கம்: அம்பலப்படுத்துகிறார் அருந்ததிராய்

பார்ப்பன-பனியா ஆதிக்கம்: அம்பலப்படுத்துகிறார் அருந்ததிராய்

1936இல் லாகூரில் ஜாதி ஒழிப்பு சங்கம், ஜாதி குறித்து அம்பேத்கரை பேச அழைத்தது. கடுமையான உழைப்பில் அம்பேத்கர் தயாரித்த ஆழமான அந்த ஆய்வுரையில் பார்ப்பனர், இந்து மதம் தொடர்பான கருத்துகளை நீக்க வேண்டும் என்று சங்கத்தார் கூறியதை ஏற்காத அம்பேத்கர், உரை நிகழ்த்த மறுத்துவிட்டார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த உரையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் சுயமரியாதை இயக்க பதிப்பாக வெளிவந்தது. பல நூறு பதிப்புகளைக் கண்ட அந்த ஆங்கில நூலை, அண்மையில் நவயாண பதிப்பகம் வெளியிட்டது. இதற்கு உலகப் புகழ் பெற்ற புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், 200 பக்க அளவில் விரிவான முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் பொருளாதார ஊடகத் துறைகளில், தலித் மக்கள் புறக்கணிக்கப்படு வதற்கும், பார்ப்பன பனியா ஆதிக்கம் தொடர் வதற்கும் ஜாதியமைப்பே காரணம் என்கிறார் அருந்ததிராய். அவர் எழுதிய முன்னுரையி லிருந்து ஒரு...

திருமண மந்திரங்களின் ஆபாசம் – வேத பண்டிதர்களே – ஒப்புதல்!

திருமண மந்திரங்களின் ஆபாசம் – வேத பண்டிதர்களே – ஒப்புதல்!

புரோகித திருமணங்களில் பார்ப்பனர்கள் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்கள் இழிவும் ஆபாசமும் நிறைந்தவை என்பதை வேத விற்பன்னரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாதாச்சாரியாரே கூறி யிருக்கிறார். ராமானுஜ தாதாச்சாரி இறந்துபோன காஞ்சி சீனியர் சங்கராச்சாரியுடன் நெருக்கமாக இருந்தவர். இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் நக்கீரன் ஏட்டில் இவர் எழுதிய தொடர் வைதிக பார்ப்பனர்களை கதிகலங்க வைத்தது. தொடரை நிறுத்துமாறு பார்ப்பனர்களிடமிருந்து வந்த அழுத்தங்களை புறந்தள்ளிவிட்டு அவர் எழுதினார். திருமணங்களில் கூறப்படும் மந்திரங்கள் குறித்து அவர் எழுதிய பகுதியையும் அதே திருமண மந்திரங்கள் குறித்து கீழாத்தூர் சீனிவாசாச்சாரியார் எழுதி, லிட்டில் ப்ளவர் கம்பெனி வெளியிட்டுள்ள விவாஹ மந்த்ரார்த்த போதினி நூலிலிருந்தும் சில மந்த்ரங்களைத் தொகுத்துத் தந்துள்ளோம்: அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாதாச்சாரியாரின் “இந்து மதம் எங்கே போகிறது?” நூலிலிருந்து: திருமணத்தில் வாத்யார்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் – ஒரு மந்திரத்தைப் பாருங்கள். “தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம்...

உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை

உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பார்ப்பனர்களின் தீண்டாமை

நாட்டின் பெரிய கோயில்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயல்படுகின்றன. கோயில் வழிபாட்டு முறைகளை தீர்மானிக்கிறவர்கள் பார்ப்பனர்கள்தான். தமிழ்நாடு கோயில்களில் உரிய ஆகமப் பயிற்சி பெற்ற எவரும் கருவறைக்குள் நுழையும் உரிமை பார்ப்பனர்களால் இன்று வரை மறுக்கப்பட்டே வருகிறது. ஆனால், கேரளாவில் இப்படி ஒரு தடை இல்லை. தமிழ்நாட்டில் 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் நீதிபதி மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட சைவ வைணவ மதத் தலைவர்கள் இடம் பெற்ற குழு பரிந்துரை செய்த பிறகும் கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் மீண்டும் ஒரு முறை நிர்வாக ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும் பார்ப்பனர்கள் கருவறைக்குள் தாங்கள் மட்டுமே நுழைந்து பூஜை செய்ய முடியும். ‘சூத்திரர்’ நுழைந்தால் தீட்டு என்று சாதிக்கிறார்கள். இது மத சுதந்திர உரிமையில் குறுக்கிடுவதாகும் என்று உச்சநீதிமன்றம் வரை போய் தடை ஆணை வாங்கி விட்டார்கள். பக்தி மார்க்கத்தில் ஊறித் திளைத்திருக்கும் சொரணையுள்ள ‘தமிழர்’...

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்டவர்கள் என்பதற்கு இராமாயணம், மகாபாரதத்திலேயே ஆதாரங்கள் உண்டு. மௌரியர் காலத்துக்குப் பின்பும், குப்தர் காலத்திலும் இலக்கிய வடிவம் தரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மகாபாரதம், இராமா யணம் ஆகியவை மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்துக்குத் தெளிவான ஆதாரங்களைத் தந்துள்ளன. (தொடக்கக்கால °மிருதிகளும், புராணங்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவைதாம்). பொழுதுபோக்குக்கு என்பதை விட உணவுக்காக சத்திரியர்கள் அடிக்கடி வேட்டையாடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு மகாபாரதம் – குறிப்பாக அதிலுள்ள வனபர்வம் – ஆதாரமாக இருக்கிறது. உணவுக்காக வளர்ப்பு விலங்குகள் கொல்லப்பட்டு வந்ததற்கும் இது ஆதாரத்தைத் தருகிறது. ஹிம்சையை பார்த்து மனம் வருந்திய தர்மர்கூட தன் தம்பிகளுக்கும், திரௌபதிக்கும், காட்டில் வாழ்ந்து வந்த பார்ப்பனர்களுக்கும் உணவு தர தினந் தோறும் ரூரூ மான்களையும், கிருஷ்ண மிருகத்தையும் வேட்டையாடியதாக இதில் விவரிக்கப்பட் டுள்ளது. பார்ப்பனர்களின் உணவில் இறைச்சி சாதாரணமாக இடம் பெற்று வந்தது என்ற தகவலை ஆதிபர்வத்தில் இடம் பெற்றுள்ள கல்மாசபாதம் என்ற கதை கூறுகிறது. ஜெயத்ரதனுக்கும்...