உலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன-பனியாக்கள்
வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் மோடி. அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து போகிறார். மோடி பறக்கும் நாடுகளில் எல்லாம் அங்கே வாழும் ‘இந்தியர்’கள் நடத்தும் விழாக்கள் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மெய்டன் மைதான சதுக்கம், இலண்டன் வெம்பில்டன் அரங்கம் என்று நடக்கும் இந்த மாபெரும் வரவேற்பு விழாக்கள் திட்டமிடப் பட்டு நடத்தப்படுகின்றன. பெருமளவில் கூட்டம் திரட்டப்படுகிறது. இந்த வேலைகளை செய்வது எல்லாம் அந்நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற ‘இந்துத்துவ’ பார்ப்பன சக்திகள்தான். இலண்டனில் வெம்பில்டன் மைதானத்தில் 60,000 பேர் திரண்டதாக செய்திகள கூறுகின்றன. இதை முன்னின்று நடத்தியது ‘தேசிய இந்து மாணவர் கழகம்’ என்ற அமைப்பு. 29 வயதுடைய மயூரி பார்மர் என்ற செல்வாக்கு மிக்க பார்ப்பன குடும்பத்தின் இளைஞர், இதற்கான பொறுப்பாளராக செயல்பட்டார். இந்த ஏற்பாடுகள் எல்லாம் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக உள்ள ராம் மாதவ் என்பவரால் திட்டமிடப்படுகின்றன. உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் பார்ப்பன-பனியா தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து மோடிக்கு ஆதரவாக...