Tagged: பரப்புரை பயணம்

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் !  சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம்  கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

இழந்துவரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயணம் கழக தலைமைக் குழுவின் முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழுக் கூட்டம் 2017 ஜூலை 10ஆம் தேதி காலை சென்னை கழகத் தலைமை நிலையத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம், மாலை 7 மணி வரை நீடித்தது. தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி காலூன்ற துடிக்கும் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகளின் ஆபத்துகளை முறியடிப்பது குறித்தும் தமிழ்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கும் பரப்புரை இயக்கங்களை முன்னெடுப் பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாடு மதக்கலவரங்கள் இல்லாத சமூகநீதி கோட்பாடுகளைப் பின்பற்றி ஏனைய மாநிலங் களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருவதை சீர்குலைக்கும் சதிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருவதை கவலையுடன் தலைமைக்குழு பரிசீலித்தது. குறிப்பாக கல்வித் துறையில் மோடியின் குறுக்கீடு, தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்கல்விக்கு உருவாக்கி வரும் தடைகள், நீட் தேர்வால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள...

ஆக.8 முதல் 12 வரை நான்கு முனைகளிலிருந்து புறப்படுகிறது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கழகத்தின் பரப்புரைப் பயணம்

ஆக.8 முதல் 12 வரை நான்கு முனைகளிலிருந்து புறப்படுகிறது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கழகத்தின் பரப்புரைப் பயணம்

மேட்டூரில் கூடிய கழக செயலவையில் மூட நம்பிக்கைளுக்கு எதிரான பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒரு குடிமகனின் அடிப்படை கடமை என்று அரசியல் சட்டம் கூறுகிறது.  ஆனால் சமுதாயத்தில் அறிவியலுக்கு எதிராக சமூகத்தைப் பாதிக்கும் மூட நம்பிக்கைகள் ஏராளமாக மக்களிடத்தில் படிந்திருக்கின்றன. பெண் சிசுக்கொலை, இளம்வயது திருமணம், பெண்களை ஏமாற்றி கெடுக்கும் சாமியார்களின் மோசடி, பேய், பில்லி, சூனிய நம்பிக்கைகளில் அச்சம், அதனால் சந்திக்கும் இழப்புகள், நரபலி போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியாக விளக்கி தன்னம்பிக்கையை விதைக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துவது என இந்த செயலவை முடிவு செய்கிறது. 7-8-2016 அன்று சென்னை, கோவை, மயிலாடுதுறை, சத்திய மங்கலம் ஆகிய நான்கு முனைகளிலிருந்து புறப்பட்டு கிராமம் கிராமமாக 5 நாட்கள் பரப்புரை செய்யப்படும். திராவிடர் விடுதலைக் கழகம் என்ற புதிய பெயரோடு...

அறிவியல் பரப்புரை பயண விபரம் நாள்வாரியாக

7.8.2016 சத்திய மங்கலம் அணி மாலை 6 மணி- சத்திய மங்கலம் – பயணத் துவக்கம், பொதுக் கூட்டம். சென்னை அணி காலை 9 மணி – இராயப்பேட்டை – துவக்கம்; காலை 10 மணி – போரூர்; காலை 11 மணி – பூவிருந்தவல்லி; மாலை 4 மணி – திருப்பெரும்புதூர்; மாலை 5.30 மணி – காஞ்சிபுரம் – இரவு தங்கல். மயிலாடுதுறை அணி மாலை 6 மணி – மயிலாடுதுறை – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம். திருப்பூர் அணி இரவு 7 மணி – திருப்பூர் – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம்     8.8.2016 சத்திய மங்கலம் அணி காலை 10 மணி – தூக்க நாயக்கன் பாளையம்; மாலை 4 மணி – அந்தியூர் – மதிய உணவு; இரவு 7 மணி – குருவரெட்டியூர் – பொதுக்...