நாடாளுமன்றக் குழு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் மோடியின் “பணமதிப்பு நீக்கம்” படுதோல்வி
மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை படு தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த அறிவிப்பால் காதொடிந்த ஊசி நன்மைக்கூட ஏற்படவில்லை என்பது மட்டு மல்ல; மிக மோசமான கேடு களையும் உருவாக்கியிருக் கிறது. இது குறித்து நாடாளு மன்றக் குழுவின் அறிக்கை தயாராகிவிட்டது. எதிர் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளு மன்றத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பே அறிக்கையின் முக்கிய பகுதிகளை ‘டெகல்கா.காம்’ இணைய இதழ் வெளியிட்டு விட்டது. அதன் முக்கிய பகுதிகள் : மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரும் தவறு; அந்த நோக்கத்தில் ஒன்றுகூட நிறைவேறவில்லை. ரூ.1000, 5000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் 5-லிருந்து 7 இலட்சம் கோடி கருப்புப் பணம் வெளியே வந்து விடும் என்று மோடி அறிவித்தார். ஆனால் ரூ.4,172 கோடி அளவிலான பணம் தான் கறுப்புப் பணம் என்று சந்தேகிக்கும் அளவுக்கு கண்டறியப்பட்டிருக் கிறது என்று நிதியமைச்சகமே ஒப்புக்...