Tagged: பசு கவுதமன்

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? புத்தக வெளியீட்டு பரப்புரை விழா திருச்சி

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா ! தோழர் பசு.கவுதமன் அவர்கள் தொகுத்துள்ள ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.” எனும் நூலின் நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா 04.03.2017 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் திருச்சி,சத்திரம் பேருந்து நிலையம்,கலைஞர் அறிவாலையம் அருகில் உள்ள சுசி ஹாலில் நடைபெற்றது. 4000க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ள A4 அளவு தாளில் அச்சிடப்பட்ட ரூபாய் 4000 மதிப்புள்ள இத்தொகுப்பு நூல் முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 2000த்திற்கு இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் இயக்குனர் தோழர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார். ஜனசக்தி இதழின் பொறுப்பாசிரியர் தோழர் இந்திரஜித் அவர்கள், சி.பி.எம். மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நூல் குறித்த செய்திகளை பகிர்ந்து கொண்டு நூலின் முன் வெளியீட்டுத்திட்டத்திற்கு ஆதரவளித்து புத்தகத்தை வாங்கி பயன் பெற...

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா !

நூல் முன் வெளியீட்டு பரப்புரை விழா ! தோழர் பசு.கவுதமன் தொகுத்த ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்.” நாள் : 04.03.2017 சனிக்கிழமை,மாலை 5 மணி. இடம் : சுசி ஹால்,கலைஞர் அறிவாலையம் அருகில், சத்திரம் பேருந்து நிலையம்,திருச்சி. தலைமை : தோழர் தா.பாண்டியன், இயக்குனர்,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ். வாழ்த்துரை : தோழர் இந்திரஜித், பொறுப்பாசிரியர், ஜனசக்தி. தோழர் ஶ்ரீதர், மாநிலக்குழு,உறுப்பினர் சிபி.எம். நூல் பரப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் பசு.கவுதமன். நூல் தொகுப்பாசிரியர்.

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? – பசு கவுதமன்

முன் வெளியீட்டுத்திட்டத்தில் அதிரடி விலைக் குறைப்பு ! ரூபாய் 2000 மட்டுமே ! ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் ?” பெரியாரின் 1925 முதல் 1973 வரையிலான முழுமையான பதிவுகள். ஐந்து தொகுதிகள் – 4000 பக்கங்கள் – விலை 4000/= முன் வெளியீட்டுத்திட்டத்தில் ரூபாய் 2000 மட்டுமே ! தோழர் பசு.கவுதமனின் பல்லாண்டு பெரும் முயற்சியில் பெரியார் எழுதியபடியே பெரியாரின் எழுத்துக்களுக்கான ஒரு செம்பதிப்பு !