Tagged: நெடுவாசல்

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களுக்கு திராவிடர் விடுதலைக்கழகம் ஆதரவு !

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 04.03.2017 அன்று நெடுவாசலில் போராடிக் கொண்டிருக்கும் மக்களை சந்தித்து கழகத்தின் ஆதரவினை தெரிவித்து உரையாற்றினார். மேலும் நெடு வாசல் கிராமம் அருகே ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றையும், அருகில் அமைக்கப்பட்டுள்ள ரசாயணக்கழிவு தேக்க தொட்டியையும் பார்வையிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தமிழ் நாட்டின் விவசாய நிலங்களை அழிக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பினை பதிவு செய்தார். மீத்தேன் திட்டத்தை தற்காலிகமாக நடைமுறைப்படுத்த மாட்டோம் என சொன்ன மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எனும் வேறொரு பெயரில் வந்து இதே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள மண்ணிற்கு அடியில் செய்யப்படும் நீர் விரிசல் முறை ஏற்படுத்தும் பாதிப்புகளை விவரித்து எந்த வடிவத்திலும் இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது...

நெடுவாசல் மீட்போம்! இரயில் மறியல் போராட்டம் மதுரை 08032017

நெடுவாசல்மீட்போம் ! நாளை மதுரையில் ரயில் மறியல் போராட்டம். நாள் : 08.03.2017 நேரம் : காலை 10:30 மணி. இடம்: ரயில் நிலையம்,மதுரை. “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விடக் கோரியும் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும் தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழர் விரோதி மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும் திராவிடர்விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்கேற்கும் ரயில்மறியல் தொடர்புக்கு: மா.பா.மணிகண்டன், மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம், மதுரை மாவட்டம். 9600 40 8641  

நெடுவாசல் போராட்ட களத்தில் கழக தோழர்கள்

நெடுவாசல் போராட்ட களத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களோடு திருச்சி,பேராவூரணி கழக தோழர்கள். காணொளி இணைப்பு செய்தி மனோகரன் முத்துக்கண்ணன்