Tagged: நாமக்கல் திவிக பொதுக்கூட்டம்

கொட்டும் மழையில் ஜாதிக்கெதிரான பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” “இளையதலைமுறைக்கு வேலைவேண்டும்” என்கிற தலைப்பில் 27-09-2015,ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. தோழர் துரை.தாமோதரன் அவர்களின்”மந்திரமா-தந்திரமா”நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து திராவிடர் கலைக்குழுவின் நாடகங்கள் அரங்கேறியது. நமது கலைக்குழுவின் பகுத்தறிவு நாடகங்கள் பகுதியில் நல்ல வரவேற்பைப்பெற்றன. கூட்டத்தற்கு நகரசெயலாளர் தோழர் வெங்கட் தலைமையேற்றார். மாவட்டத்தலைவர் சாமிநாநன்,மாவட்ட செயலாளர் சரவணன்,மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர் ப.செல்வம் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் இறுதிவரை கூட்டத்தை கேட்டது குறிப்பிடத்தக்கது