Tagged: தேச பக்தி

1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார் எல்லை மீறும் தீர்ப்புகள் இன்னும் தொடர்கின்றன!

1957இல் பார்ப்பன நீதிபதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் முழங்கியவர் பெரியார் எல்லை மீறும் தீர்ப்புகள் இன்னும் தொடர்கின்றன!

நீதிபதிகள் சில வழக்குகளில், சட்ட எல்லைகளைத் தாண்டி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து, அவர்களுக்கான அதிகார வரம்புகளை மீறுகிறார்கள்; நீதிபதிகள் சமுதாயத்தை வழி நடத்தும் தலைவர்கள் அல்ல! 1956ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆர்.எஸ். மலையப்பன் (இவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான ‘கள்ளர்’ வகுப்பைச் சார்ந்தவர்) – நிலக் குத்தகை தொடர்பான வழக்கில் நில பிரபுகளுக்கு எதிராக ஒரு தீர்ப்பு வழங்கினார். மேல்முறையீட்டில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு பார்ப்பன நீதிபதிகள், தீர்ப்பை இரத்து செய்ததோடு மாவட்ட ஆட்சித் தலைவரை கடுமையாக, “அவர் பதவியில் நீடிக்கவே தகுதியற்றவர். உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று பார்ப்பன வெறியுடன் தீர்ப்பு கூறினார். ‘இந்து’ பார்ப்பன ஏடு, தீர்ப்பை உச்சி மோந்து பாராட்டியது. பெரியார் கொதித்து எழுந்தார். மக்களைக் கூட்டிய பெரியார் பார்ப்பன நீதிபதிகளின் உள்நோக்கத்தை வன்மையாகக் கண்டித்தார். மக்கள் மன்றத்தில் தீர்ப்பு தீயிடப்பட்டது. பெரியார் மீது நீதிமன்ற அவமதிப்பு...

ஆட்சி அதிகார மமதையில் திமிர் பேசும் ராஜாக்கள் பதில் சொல்லட்டும்!

ஆட்சி அதிகார மமதையில் திமிர் பேசும் ராஜாக்கள் பதில் சொல்லட்டும்!

“வெகு மக்களை ‘சூத்திரர்’களாக்கும் ‘பூணூலை’ முதுகில் போட்டுக் கொண்டு மக்களை பிளவுபடுத் தும் கும்பல் சட்டைப் பையில் தேசியக் கொடியை குத்திக் கொண்டு திரிவதுதான் ‘தேச பக்தி’ என்றால், இந்த தேசமே வேண்டாம்; அதில் மானங் கெட்ட குடிமக்களாக இருக்கவும் வேண்டாம்” என்பதே தன்மானமுள்ள தமிழனின் பதிலாக இருக்க முடியும். தேசத்தின் பற்று என்பது – அங்கே வாழும் மக்களின் உரிமைகளோடு பிரிக்க முடியாமல் இணைந்திருப்பது; பறக்கும் கொடியிலும் – கூவிடும் கூச்சலிலும் இல்லை! புரிந்து கொள்ளுங்கள்! – இரா பெரியார் முழக்கம் 17032016 இதழ்

தேசியக் கொடிக்குள் பதுங்கியிருக்கிறதா தேசபக்தி?

தேசியக் கொடிக்குள் பதுங்கியிருக்கிறதா தேசபக்தி?

பார்ப்பனக் கொழுப்புடன் பேசி வரும் பா.ஜ.க. எச். ராஜா, தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் வழக்கமான திமிரோடு பேசினார். தன்னை ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றும், தேசியக் கொடியை அவமதிப்பவர்கள் எவராக இருந்தாலும் அதை இந்த  தேசத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் ‘ஹிட்லர்’ குரலில் மிரட்டினார். ‘இவாள்’களின் தேச பக்தி,  தேசியக் கொடி எனும் துணிக்குள்தான் பதுங்கிக் கிடக்கிறது. மற்றபடி தேசத்தின் ‘இறையாண்மை’யை சர்வதேச நிதி மூல தனத்திடமும், பன்னாட்டு சுரண்டல் நிறுவனங்களிட மும் தாராளமாக அடகு வைப்பார்கள். ‘தேசியக் கொடி’யின் கீழே அமர்ந்து கொண்டு இதற்கான அடிமைப் பத்திரத்தை எழுதிக் கொடுப்பார்கள். அந்த அடிமைப் பத்திரத்துக்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று பெயர் சூட்டிக் கொள்வார்கள். ‘அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கே’ என்று தேசபக்தியோடு கூறிக் கொள்வார்கள். ரவிசங்கர் என்ற ஆன்மீகப் பார்ப்பன வியாபாரி, யமுனை ஆற்றுப் படுகையில் சுற்றுச் சூழல் விதிகளுக்கு எதிராக ‘உலக கலாச்சார விழா’ என்று பல...