Tagged: தென்மண்டல ஐஜி அலுவலகம் முற்றுகை

தென்மண்டல ஐ.ஜி.அலுவலக முற்றுகை – ஆணவக்கொலை மதுரை 03112016

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத்  தவறிய காவல்துறைக் கண்டித்து, தென்மண்டல காவக்துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம்  3-11-2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணிதிரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிரிட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக்கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேஏற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு போன்றோர் உரையாற்றிய பின்னர் ஐ.ஜி...

தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம் மதுரை 03112016

இன்று 03112016 பெரியாரிய, தலித்திய, தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம். நெல்லையில் திண்டுக்கல் சிவகுருநாதன், பெண் காவலர் ராமு, திண்டுக்கல்லில் பாண்டிச்செல்வி, தேனியில் தங்கபாண்டியன் ஆகியோரின் கொலைகளுக்கு காரணமான சாதி வெறி கொலையாளிகளை கைது செய். குற்றவாளிகளை தப்பவிடாதே! சாதிவெறிக்கு துணை போகாதே! சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு சிபிஐ விசாரணை நடத்து. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டத்தினை அனைத்து தோழமை இயக்கங்களும் இணைந்து நவம்பர் 3 அன்று நடத்த உள்ளோம். வாய்ப்புள்ளோர் பங்கேற்கவும்