Tagged: தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் பெரியார் 135 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 17.9.2013 காலை 9.30 மணி அளவில் பெரியார் சிலைக்கு பால்துரை மாலை அணிவித்தார். பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர கழகச் செயலாளர் பால். அறிவழகன், செல்லத்துரை மற்றும் ஏராளமான கழகத்தினரும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு முழக்கமிட்டனர். வடக்கு கோட்டையன் தோப்பில் கழகக் கொடியை பிரபாகரன் ஏற்றினார். ஏராளமான தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். முக்காணியில் திருவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளர் தே.சந்தனராசு கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு – பயிலரங்கம் தூத்துக்குடி 13032016

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 13.03.2016 அன்று தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி ஒன்றியத்தில் வைத்து, “சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஒருநாள் பயிரங்கம் நடைபெற்றது. பயிற்சியளித்தவர் மாநில பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய பயிலரங்கம் மதியம் 1:30 மணிவரை நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 2:30க்கு தொடங்கிய பயிலரங்கம் மாலை 6 மணிவரை நடைபெற்றது. இந்த இருவேளைகளிலும், சாதி ஒழிப்பில் பெரியார் இயக்கத்தின் பங்கு என்ன என்பதைப்பற்றி பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் அவர்கள் மிக அழகாக, தெளிவாக விளக்கி கூறினார். பயிலரங்கம் முடிந்த பிறகு தோழர்கள் தங்களது கருத்துகளையும், சந்தேகங்களையும் பரப்புரை செயலாளரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். இப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் தேநீரும், சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. தோழர்களுக்கு மதிய உணவாக சுவையான மாட்டுக்கறி பிரியாணி பரிமாறப்பட்டது. இப்பயிலரங்க...

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – தூத்துக்குடி புகைப்படங்கள்

தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் ! பார்ப்பன சூழ்ச்சியால் மரணமடைந்த ‘ரோஹித் வெமுலா’வின் மரணத்திற்கு நீதி கேட்டும்,மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விளிம்புநிலை மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் 01.02.2016 அன்று மாலை 5 மணியளவில் சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொறிஞர்.சி. அம்புரோசு தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அம்புரோசு அவர்களின் தலைமை உரையைத் தொடர்ந்து, மதிமுகவின் மாநில மீணவரனி செயலாளர் தோழர்.நக்கீரன் கண்டன உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து SDPIயின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் மைதீன்கனி, ஆதித் தமிழர் கட்சியின் சு.க.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் கா.மை.அகமது இக்பால், மனித நேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஆசாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இவர்களைத்...