Tagged: தூக்கு தண்டனை

பிரிட்டிஷ் ஆட்சியின் மனித நேயமும்  பார்ப்பன ஆட்சியின் ‘மனுதர்மமும்’

பிரிட்டிஷ் ஆட்சியின் மனித நேயமும் பார்ப்பன ஆட்சியின் ‘மனுதர்மமும்’

பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய கவலையைக்கூட இந்திய “சுதந்திர” ஆட்சி தூக்குத் தண்டனைக் கைதிகளிடம் காட்ட முன்வரவில்லை. கிரிமினல் குற்றங்களில் தூக்குத் தண்டனைக்குள்ளாவோர் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத ‘சூத்திரர்களும்’, ‘பஞ்சமர்களும்’ தான் என்பதால் மனுதர்மப் பார்வை யுடனே  இந்திய பார்ப்பன ஆட்சி செயல்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலமான 1937 ஆம் ஆண்டில் நடந்த ஒரு வழக்கைக் குறிப்பிட வேண்டும். அப்போது கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது. ‘அத்தப்பா கவுண்டன்’ என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்துக்கு அப்பீல் விசாரணை வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று கீழ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது. ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியமாக ஏற்க முடியாது என்று மற்றொரு  நீதிமன்றம், விளக்கம் கூறி, தூக்குத் தண்டனையை நிறுத்தியது. ஒப்புதல் வாக்கு மூலத்தையே சாட்சியமாக ஏற்றுக் கொண்டால், அது, குற்றவாளிக்கு தண்டனையை...

மனித உரிமைக்கு குரல் கொடுத்த நீதிபதிகள்

மனித உரிமைக்கு குரல் கொடுத்த நீதிபதிகள்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கையெழுத்திட்டு தனித்தனியாக கடிதங்கள் எழுதியுள்ள நீதிபதிகள்: பி.பி. சாவந்த் (உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி) எ.பி.ஷா (டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) டிபிலால் நஸ்கி (ஒரிசா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி) ஆர்.கே. மிஸ்ரா (பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி; கோவா மனித உரிமை ஆணையத்தின் தலைவர்) ஹோஸ்பெட் சுரேஸ் (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) பன்சன்த் ஜெயின் (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) பிரபா சீனிவாசன் (சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) கே.பி. சிவசுப்ரமணியன் (சென்னை உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) பி.சி. ஜெயின் (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) எஸ்.என். பார்கவா (சிக்கிம் உயர்நீதிமன்ற முன்னாள்  தலைமை நீதிபதி, அசாம் மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர்) பி.ஜி. கோல்சே பட்டீல் (பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) இரன்வீர் சாய் வர்மா (ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள்  நீதிபதி) பி.ஏ. கான் (ஜம்மு காஷ்மீர்...

உச்சநீதிமன்றம் ஒப்புதல் 9 ஆண்டுகளாக சட்ட விரோதமாக தூக்கு

உச்சநீதிமன்றம் ஒப்புதல் 9 ஆண்டுகளாக சட்ட விரோதமாக தூக்கு

தூக்குத் தண்டனை ஒழிப்பு இயக்கத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தவறான குற்றச்சாட்டு களின் அடிப்படையில் ஒருவரை சாகடித்துவிடும் ஆபத்துகள் நிறைந்த தண்டனை என்பதை உலகம் முழுதும் மனித உரிமையாளர்கள் வற்புறுத்தி வரு கிறார்கள். இதே கருத்தை இப்போது இந்தியாவில் நீதிபதிகளாக இருந்தவர்களும் சுட்டிக்காட்ட முன் வந்துள்ளதோடு, குடியரசுத் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கும், கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 2012 ஜூலை 25 ஆம் தேதி 14 முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கையெழுத்திட்டு தனித்தனியாக எழுதியுள்ள முறையீட்டு கடிதங்களில் தற்போது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 13 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்துவதற்கு குடியரசுத் தலைவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை (அரசியல் சட்டத்தின் 72வது பிரிவு) பயன்படுத்த முன்வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதில் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, உச்சநீதி மன்றமே தவறான தீர்ப்புகள் அடிப்படையில்...

தூக்குத் தண்டனை; சில தகவல்கள்

தூக்குத் தண்டனை; சில தகவல்கள்

உலகம் முழுதும் அனைத்து நாடுகளும் மரண தண்டனையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று, 2007, 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் அய்.நா.வின் பொதுச் சபை தீர்மானம் வலியுறுத்தியது. நடப்பு ஆண்டிலும் இதே போன்ற தீர்மானம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு அய்.நா. முதலில் இத் தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது 104 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. 54 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. 29 நாடுகள் விலகி நின்றன. அடுத்த ஆண்டில் மேலும் 2 நாடுகள் கூடுதலாக வாக்களித்தன. எதிர்க்கும் நாடுகள் எண்ணிக்கை 54லிருந்து 46 ஆக குறைந்தது. விலகி நின்ற நாடுகள் 34 ஆக உயர்ந்தது. மீண்டும் 2010 இல் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்தபோது, 109 நாடுகள் ஆதரவாகவும், 41 நாடுகள் எதிர்ப்பாகவும் ஓட்டளித்தன. 36 நாடுகள் வாக்கெடுப்பில் பங்களிக்காமல் விலகி நின்றன. 1945 இல் அய்.நா. சபை உருவானபோது 8 நாடுகள் மட்டுமே தூக்குத் தண்டனையை முழுமையாக ஒழித்திருந்தன....

தூக்குத் தண்டனைக்கு உள்ளாவது யார்?

தூக்குத் தண்டனைக்கு உள்ளாவது யார்?

இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற இயக்கம் தீவிரமடைந்து வருகிறது. இராஜீவ் கொலை வழக்கில் 23 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிறையில் வாழும் 7 தமிழர்கள் தூக்குத் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள். ஆனாலும், ஏனைய சிறைவாசி களுக்கு வழங்கப்படும் உரிமைகள் இவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் தூக்குத் தண்டனைக்கு உள்ளாகிறவர்கள், சமூகப் பொருளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற ஆய்வை  கடந்த வெள்ளிக் கிழமை (மே 6, 2016) டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதுவரை தூக்கிலிடப்பட்டவர் களில் பெரும்பான்மையினர், எழுதப் படிக்கத் தெரியாத தற்குறிகள். மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மற்றும் ஏழைகளாகவே இருப்பதை ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது. தற்போது தூக்குத் தண்டனைக்காக காத்திருக்கும் 385 பேரில் 241 பேர் முதன்முறையாக குற்றம் செய்தவர்கள். இதில் பல இளஞ்சிறார்களும் உண்டு. இளம் சிறார்களையும் முதியவர்களையும் தூக்கிலிடக் கூடாது...