Tagged: திருப்பூர்

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் முற்றுகை திருப்பூர் 16032016 – நிழற்படங்கள்

திருப்பூரில், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதில் காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 16.3.2016 அன்று கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவல்துறை முற்றுகைக்கு அனுமதி மறுத்துவிட்ட நிலையிலும் முற்றுகைப் போராட்டம் தடையை மீறி எழுச்சியுடன் நடைபெற்றது. • ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் வரவேண்டும். • ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதில் காவல்துறை அலட்சியம் காட்டுவதை மாற்றிக் கொள்ள வேண்டும். • ஜாதி மறுப்புத் திருமணம் புரிந்தோரின் வாழ்வுரிமைப் பாதுகாப்பைப் புறக்கணித்து, வாக்குரிமை பேசும் அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். • ஜாதி எதிர்ப்பு – தீண்டாமை எதிர்ப்புக்கான போராட்டக் களத்தை மேலும் வலிமையாக்கிட ஜாதி எதிர்ப்பு, சமூகநீதி இயக்கங்களின் வலிமையான ஒற்றுமை உருவாக வேண்டும். எனும் கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்ற இந்த...

ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – திருப்பூர் புகைப்படங்கள்

திருப்பூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவன் ரோகித் வெமுலா மரணத்திற்கு நீதி கேட்டு,அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் 01.02.2016 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் ஆசிரியர் சிவகாமி அவர்கள்,தோழர் அகிலன்,கவிஞர் கனல்மதி,தனபால்,பரிமளராசன் உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் தோழர் பிரசாந்த அவர்கள் நன்றியுரையாற்றினார். பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்கமாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்திற்கு நீதி கேட்போம்! என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.