தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு. திருவள்ளுவர் ஆண்டுதான் தமிழருக்கான ஆண்டு கணக்கு. இதற்கு மாறாக சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று பார்ப்பனர்கள் தமிழர்கள் மீது திணித்தனர். அந்த தமிழ்ப் புத்தாண்டுகளுக்கு 60ஆம் ஆண்டு கணக்குகள் மட்டுமே உண்டு. அதில் ஒன்றுகூட தமிழ்ப் பெயரே இல்லை. அத்தனையும் வடமொழிப் பெயர்கள். 60 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் முதலாம் ஆண்டிலிருந்துதான் தொடங்க வேண்டும். 60 வயதுக்கு மேல் வாழ்வோரை இந்த வடமொழிப் பெயரை வைத்து வயதைக் கணக்கிட முடியாது. ‘சஷ்டியப்தப்பூர்த்தி’ என்று 60 ஆண்டை பார்ப்பனர்கள் விழாவாகக் கொண்டாடுவதன் நோக்கம் 60க்கு மேல் ஆண்டுகளுக்கு பெயர் கிடையாது என்பதால்தான், சித்திரையில் தொடங்கும் “தமிழ்ப் புத்தாண்டு” என்று பார்ப்பனர்கள் கூறும் 60 ஆண்டுகளின் பெயர்களைப் பாருங்கள்! பிரபவ விபவ சுக்ல பிரமோதூத பிரசோற்பத்தி ஆங்கீரச ஸ்ரீமுக பவ யுவ தாது ஈஸ்வர வெகுதானிய பிரமாதி விக்கிரம விஷு சித்திரபானு...
தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு … திருவல்லிக்கேணி பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து நடத்தும் … 17ம் ஆண்டு … தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா … வாருங்கள் தமிழர்களாய் இணைந்து மனிதர்களாய் கொண்டாடி மகிழ்வோம் … நாள் : 12 : 01 : 2017 இடம் : வி . எம் . தெரு, இராயப்பேட்டை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்
திருப்பூரில், திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ”தமிழ் புத்தாண்டு,பொங்கல் விழா.” மற்றும் இரண்டாம் ஆண்டு விளையாட்டுவிழா. நாள் : 31.01.2016 ஞாயிற்றுக்கிழமை. இடம் : திருவள்ளுவர் தெரு,இராயபுரம் மேற்கு,திருப்பூர் – 1. ”காலை முதல் மாலை வரை விளையாட்டுப் போட்டிகள்” மாலை 6 மணிக்கு மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு பகுத்தறிவுப் பாடல்கள். மாலை 7 மணிக்கு ”பொதுகூட்டம் .” தலைமை : தோழர் கருணாநிதி. வரவேற்புரை : தோழர் நீதி ராசன். சிறப்புரை : ”தோழர் கொளத்தூர் மணி,” தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை : தோழர் மா.ஜெகதீசன்.
சென்னை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் கழக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னையில் கடந்த 16 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பகுதி கழக சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வாண்டு இந்த விழா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விழாவாக நடந்தது. ‘ஜாதி மதம் கடந்து மனிதர்களானோம்; உதவிக் கரங்களை உயர்த்தி உறவுகளானோம்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஓர் ஆறுதல் விழா தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா” – என்ற முழக்கத்தோடு விழா நடந்தது. 13.1.2016 மாலை 5 மணியளவில் புதுவை அதிர்வு கலைக் குழுவினரின் பறை இசை கிராமிய கலை நிகழ்வுகள் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பகுதி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாற்றுடைப் போட்டிகளைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நகைச்சுவை, பாட்டு பட்டிமன்றம்...
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்திருப்பது, அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மாற்றத்தை வன்மையாக எதிர்க்கிறது. சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியலுக்கு எதிரானது. தமிழர் கொண்டாடிய தை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித் தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் – சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற் கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனை யாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது....