கழக மாநாட்டில் நீதிபதி அரிபரந்தாமன் வலியுறுத்தல் இந்தியை அலுவல் மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும்
இந்தியை அலுவல் மொழி என்று அறிவிக்கும் சட்டப் பிரிவுகளை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற போராட்டமே இந்தி எதிர்ப்புக்கான சரியான போராட்டம் என்று சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், சென்னை திருவான்மியூர் தெப்பக்குளம் மைதானத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாட்டில் பேசுகையில் வற்புறுத்தினார். “இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; இழந்து வரும் உரிமைகளை மீட்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாட்டை திராவிடர் விடுதலைக் கழகம், 2017 ஜூன் 4ஆம் தேதி நடத்தியது. மாநாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நீதிபதி அரிபரந்தாமன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல; விருப்பம் உள்ள எந்த மொழியையும் எவரும் படிக்க உரிமை உண்டு. ஆனால் ஒரு மொழியை அதிகாரத்தைப் பயன்படுத்தி திணிக்கும்போதுதான் எதிர்ப்பு வருகிறது. 1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கிவிட்டது. பெரியார் தலைமையில் நடந்தது அப் போராட்டம். நாம் இந்தியை...