Tagged: டைம்ஸ் ஆப் இந்தியா
‘கொள்கைக்காகவே பலியான மகனுக்காகப் பெருமை அடைகிறேன்’ “பெரியார் என்ற தலைவர் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவரது கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான் இன்றைய தேவையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு (மார்ச் 31) அளித்த பேட்டியில் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் தந்தை ஆர் ஹமீது (54) கூறியிருக்கிறார். “தந்தை பெரியாரின் கொள்கைகளை நான் படிக்கத் தொடங்கி விட்டேன்” என்றும் அவர் கூறினார். கோவை உக்கடம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பிலால் எஸ்டேட் எனும் குறுகிய வீதியில் அவரது சிறிய வீட்டில் அமர்ந்து பேசிய அவர், “நான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைவது என்று முடிவு செய்துள்ளேன்” என்றார். “மூட நம்பிக்கை களுக்கு எதிராக நான் போராடப் போகிறேன். ஆனால் மதங்களுக்கு எதிராகப் பேசுவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. நம்முடைய ‘ஆன்மா’தான் கடவுள் என்று நம்புகிறேன்” என்றார்...
தனியார் துறை இடஒதுக்கீடு; முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு என்று தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் சமூக நீதி பேசியது. ஆனால், டெல்லி அதிகார மய்யங்களில் சமூக நீதியை முற்றிலுமாக புறக்கணித்தது என்ற உண்மை வெளி வந்துள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் முதல் நிலை ‘ஏ’ குரூப் அதிகாரிகள் பதவியில் ஒரு தாழ்த்தப்பட்டவரோ, பழங்குடியினரோ இல்லை. 2013 ஜனவரி நிலவரப்படி இந்தப் பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இரண்டே பேர் மட்டுமே! ஏனைய 49 பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர்தான். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் அன்சாரி அலுவலகத்தில் ஒரு தலித் அதிகாரிகூட இல்லை. குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் முதல் நிலை அதிகாரியாக ஒரு பிற்படுத்தப்பட்டவர்கூட இல்லை. தலித் அதிகாரிகள் 3 பேரும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மட்டுமே உள்ளனர். எஞ்சிய 27 உயர்நிலை அதிகாரிகள் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் தான்! (இடஒதுக்கீடுப் பிரிவில் இடம் பெறாதவர்கள்) திட்டக் குழுவிலும் சமூகநீதிக்கு...
டெல்லியில் அதிகார மய்யங்களில் அதிகார சக்திகளாக செயல்பட்ட பார்ப்பன உயர்ஜாதி அதிகாரக் கும்பல், ஆட்சி மாற்றம் வரப் போவதை உணர்ந்து, உலக வங்கி, சர்வதேச நிதியம், வெளிநாட்டுத் தூதரகங்களில் தங்கள் பதவியை உறுதி செய்து கொண்டுள்ளன. அதற்கான முயற்சிகளைத் தொடங்கி விட்டார்கள். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (மே 9, 2014) வெளியிட்டுள்ள செய்தி: மத்திய அமைச்சகங்கள் இப்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்தவர்கள், கூடு தாவும் பறவைகளாகி விட்டனர். உதாரணமாக, பிரதமரின் தனிச் செயலாளராக இருந்த இந்து சேகர் சதுர்வேதி, இப்போது வாஷிங்டனில் அய்.எம்.எப். எனும் சர்வதேச நிதியத்தில் ஆலோசகர் பதவிக்குப் போய்விட்டார். அன்னிய முதலீட்டு ஆலோசனை துறையின் கூடுதல் செயலாளராக இருந்த அஞ்சலி பிரசாத், ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக நிறுவனத்தின் தூதர் பதவிக்குப் போய்விட்டார். அரசாங்கத்தின் தலைமைச் செய்தி தொடர்பாளராக இருந்த நீலம் கபூர், லண்டனில் உள்ள நேரு மய்யத்தில் முக்கிய...