Tagged: சேலம் மேற்கு திவிக

தோழர் ஃபாரூக் படுகொலை கணடித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 27032017

திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் கழகத்  தோழர் கோவை பாரூக் படுகொலையைக் கண்டித்தும், வழக்கை சி.பி.சி.ஐ.டி -க்கு மாற்ற வலியுறுத்தியும் கண்டன  ஆர்ப்பாட்டம் மேட்டூர் பேருந்து நிலையம் எதிரில் 27.3.2017 மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சி.கோவிந்தராசு தலைமை தாங்கினார். தி.வி.க. தோழர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, K.A. சந்திரசேகரன் திராவிடர் கழகம் மேட்டூர் நகரம், மா.சிவக்குமார் மேட்டூர் சட்ட மன்றத் தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசிவா மாநில இளைஞரணித் துணை செயலாளர் ஆதிதமிழர் பேரவை, கி.முல்லைவேந்தன் திராவிடர் பண்பாட்டு நடுவம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். படுகொலையை கண்டித்து வழக்கை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்ற வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. கழக தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா !

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் கு.சூரியகுமார் தலைமையில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொளத்தூர் சோதனைச்சாவடியில் கோவிந்தராசு, பேருந்து நிலையத்தில் ஆட்டோ செல்வம், வடக்கு ராஜா வீதி ஓவியர் மூர்த்தி, திருவள்ளுவர் நகரில் காயத்திரிசீமா, உக்கம்பருத்திக்காட்டில் லக்கம்பட்டி சக்தி, தார்காடு விஜயகுமார், லக்கம்பட்டியில் பெரியசாமி, நீதிபுரம் டைகர் பாலன் ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். தோழர்களுக்கு மதிய உணவு தார்காடு தர்மலிங்கம் இல்லத்தில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் 20 இருசக்கர வாகனங்களில் 35 தோழர்கள் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழக கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழக தலைவர் தோழர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. காவலாண்டியூரில் தோழர் சுந்தரமும், செ.செ.காட்டுவளவில் தோழர் சின்ராசு, கண்ணாமூச்சியில் தோழர் மாரியப்பன், மூலக்கடையில் தோழர் இராசேந்திரன், காந்தி நகரில் தோழர் சரசுவதி ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி, சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடையில் தோழர் இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.