கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா !

தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் கு.சூரியகுமார் தலைமையில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கொளத்தூர் சோதனைச்சாவடியில் கோவிந்தராசு, பேருந்து நிலையத்தில் ஆட்டோ செல்வம், வடக்கு ராஜா வீதி ஓவியர் மூர்த்தி, திருவள்ளுவர் நகரில் காயத்திரிசீமா, உக்கம்பருத்திக்காட்டில் லக்கம்பட்டி சக்தி, தார்காடு விஜயகுமார், லக்கம்பட்டியில் பெரியசாமி, நீதிபுரம் டைகர் பாலன் ஆகியோர் கழக கொடியை ஏற்றினர். தோழர்களுக்கு மதிய உணவு தார்காடு தர்மலிங்கம் இல்லத்தில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

ஊர்வலத்தில் 20 இருசக்கர வாகனங்களில் 35 தோழர்கள் கலந்துகொண்டனர்.

14354961_1806929212924304_193843431679365826_n

You may also like...