Tagged: சங்கராச்சாரி

பார்ப்பன பண்ணயம் கேட்பாரில்லை பிரணாப் முகர்ஜி ஜெயேந்திரனிடம் ஆசி பெறலாமா?

வங்காளிப் பார்ப்பனர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் ஜூலை 24இல் முடிவடைகிறது. ‘பார்ப்பன தர்மத்தோடு’ வாழ்ந்தவர். பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக காஞ்சிபுரம் வந்து, சங்கராச்சாரியிடம் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார். ஜெயேந்திர சரசுவதி, சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி. புதுவை நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது. அரசு தரப்பு சாட்சிகள் எல்லாம் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர். புதுவை நீதிபதியிடம் தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க தொலைபேசியில் பேரம் பேசியவர் ஜெயேந்திரர். இது ஆதாரத்துடன் அம்பலமாகி, உயர்நீதிமன்றத்திலும் வழக்காக பதிவாகியுள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், புதுவை நீதிமன்றம் ஜெயேந்திரரை விடுதலை செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்றும்  கேட்டு, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம், ஜெயேந்திரனைக் காப்பாற்ற முயன்ற சக்திகளின் தலையில் குட்டு வைத்திருக்கிறது. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தான் குடியரசுத் தலைவர் ஜெயேந்திரனிடம் ஆசி பெற வந்திருக்கின்றார். ஜெயேந்திரனிடம்...

சங்கராச்சாரி வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில ஆர்ப்பாட்டம் 06062017

புதுச்சேரி – சங்கராச்சாரி வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, புதுவை மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 06062017 அன்று காலை 11 மணியளவில் மாநிலக் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். நிறைவுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி விசாரணையில் சாட்சியம் அளித்துவிட்டு பிறழ்சாட்சிகளாக மாறியவர்கள் மீது புதுவை அரசு ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், சங்கராச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ பதிவாக உள்ளநிலையிலும், அவரது வாக்குமூலத்தின் வழியாக தெரியவந்து கைது செய்யப்பட்ட காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியமும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தும் ஏன் மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என்றும், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் இக்கேள்விகளை எழுப்பியுள்ளநிலையிலேனும் மேல்முறையீட்டுக்கோ, மீள்விசாரணைக்கோ உடனே நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாழ 200 பேர் கலந்துகொண்டனர்.

நீதிபதிக்கு இலஞ்சப் பேரம்: ஜெயேந்திரர் சிக்குவாரா?

நீதிபதிக்கு இலஞ்சப் பேரம்: ஜெயேந்திரர் சிக்குவாரா?

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? அவருக்கும் நீதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் குறித்து என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக புதுச்சேரி, தமிழக அரசுகள் இன்று விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சி ஜெயேந்திரர், ரவி சுப்பிர மணியம், ரகு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த புதுச்சேரி மாநில அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதியும், ஜெயேந் திரரும் தொலைபேசியில் பேசிய தாக உரையாடல் ஒன்று வெளியானது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் கூடுதல் காவல் துணை ஆணையர் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை....

சங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள்

ஆதிசங்கரர் என்ற கேரள பார்ப்பனர், புத்தமதத்தை வீழ்த்தி அழிப்பதில் பெரும்பங்காற்றியவர். அவர் நான்கு சங்கர மடங்களை மட்டுமே உருவாக்கினார். பத்ரிநாத், சிருங்கேரி, , துவாரகா, பூரி ஆகிய நான்கு மடங்களே அவை. ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டவை 50க்கும் மேற்பட்ட சங்கராச் சாரிகள் வந்து விட்டனர். டேராடூன் நகரிலிருந்து செயல்படும் சமூக செயல்பாட்டாளர் அஜய்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள சங்கராச்சாரிகள், சங்கர மடங்கள்  குறித்த தகவல்களை மனிதவளத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் கேட்டார்.  இது குறித்த எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று அமைச்சகங்கள் கூறிவிட்டன. ஆக எந்த சங்கரமடமும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பது தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மகாசிவராத்திரியன்று அரித்துவாரைச் சார்ந்த அச்சுயதானந்தா என்ற பார்ப்பன சாமியார், தன்னை துவாரகபீட சங்கராச்சாரியாக அறிவித்துக் கொண்டார். ஏற்கெனவே சுவாமி சுவரூபானந்தா என்பவர் உள்ளிட்ட இரண்டு சங்கராச்சாரிகள், இந்த மடத்தில் இருக்கிறார்கள். புதிதாக...

சங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள்

சங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள்

ஆதிசங்கரர் என்ற கேரள பார்ப்பனர், புத்தமதத்தை வீழ்த்தி அழிப்பதில் பெரும்பங்காற்றியவர். அவர் நான்கு சங்கர மடங்களை மட்டுமே உருவாக்கினார். பத்ரிநாத், சிருங்கேரி, துவாரகா, பூரி ஆகிய நான்கு மடங்களே அவை. காஞ்சிமடம், ஆதிசங்கரர் நிறுவியது அல்ல; அது கும்பகோணத்திலிருந்து காஞ்சிக்கு மாற்றப்பட்டு, ஆதி சங்கரர் உருவாக்கியதாக பொய்யாக ஆவணங்களை உருவாக்கினார்கள். இப்போது சங்கரமடங்கள் என்றும் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டவை என்றும் 50க்கும் மேற்பட்ட சங்கராச் சாரிகள் வந்து விட்டனர். டேராடூன் நகரிலிருந்து செயல்படும் சமூக செயல்பாட்டாளர் அஜய்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள சங்கராச்சாரிகள், சங்கர மடங்கள் குறித்த தகவல்களை மனித வளத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் கேட்டார். இது குறித்த எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று அமைச்சகங்கள் கூறிவிட்டன. ஆக எந்த சங்கரமடமும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பது தெரிகிறது. காசியில், ‘அகில இந்திய அக்ஹரா பிரஷாத்’ என்ற அமைப்பு இருக்கிறது....

வேத மரபு மறுப்பு மாநாடு சேலம் 24122016 தீர்மானங்கள்

24-12-2016 அன்று சேலத்தில் ,சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  நிறைவேற்றப்பட்ட தீர்மானம். வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றிவிட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் –  புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார சக்தியாகவும் மாற்றிக் கொண்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி –...

சங்கராச்சாரியுடன் வாதிட்ட வள்ளலார்

சங்கராச்சாரியுடன் வாதிட்ட வள்ளலார்

இறந்து போன காஞ்சி சீனியர் சங்கராச்சாரிக்கும் வள்ளலாருக்கும் ‘சமஸ்கிருதம்’ தொடர்பாக நேரடி மோதல் நடந்த வரலாறும் உண்டு. ஒரு முறை வள்ளலார், காஞ்சி சங்கராச்சாரியை சந்திக்கச் சென்றபோது ‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்’ என்று சங்கராச்சாரி ஓங்கி அடித்துப் பேசியிருக்கிறார். அங்கேயே இதை ஏராளமான ஆதாரங்களைக் கொண்டு வள்ளலார் அவரிடம் மறுத்து வாதாடியிருக்கிறார். வள்ளலார் வரலாற்றை எழுதியுள்ள ‘சன்மார்க்க தேசிகன் என்ற ஊரன் அடிகள்’ நூலில் இந்த நிகழ்வை பதிவு செய்திருக்கிறார். ‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று நீங்கள் கூறினால் தந்தை மொழி தமிழ் தான் என்று நான் கூறுவேன். தமிழ் இல்லாவிட்டால் பிறமொழிகள் வந்திருக்காது’ என்று பதிலடி தந்திருக்கிறார் வள்ளலார்.  ஊரன் அடிகள் அந்த சம்பவத்தை இவ்வாறு எழுதுகிறார். “ஆரிய அரசன் பிரகத்தனுக்கு – தமிழ் அறிவுறுத்துவான் வேண்டிக், கபிலன் குறிஞ்சிப் பாட்டினைப் பாடியதைப் போல் ஆரியமொழி மட்டுமே நன்கு உணர்ந்த சங்கராச்சாரிக்கு தென்மொழி, வட மொழி என்ற...