Tagged: காஷ்மீர் விடுதலை

இந்தியாவில் சுயநிர்ணய உரிமை கோருவது சட்டப்படி குற்றமா?

உலக அளவில் சுய நிர்ணய உரிமை என்பது பல காலக் கட்டங்களில் பலவித வரலாற்று சிறப்பு மிக்க விளக்கங்களை உள்வாங்கி, இன்று செறிவுமிக்க ஒன்றாக பரிணமித்திருக்கிறது . ஆனால் வரலாற்று நெடுகிலும் அது மிகவும் விவாதிக்கப்பட்ட, கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் அதன் பொருத்தப்பாடு என்பது அரசியல் நடைமுறைகளின் ஊடாகவே சாத்தியப்பட்டுள்ளது. எனவே அது சட்டப் பூர்வமாக கோரத்தக்க உரிமைதான். எனினும் அதன்நடைமுறை,பயன்பாடு என்பதுஅரசியல் செயல்பாடுகள் சார்ந்ததாகவே உள்ளது. சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் தோற்றம் என்பது, குறிப்பாக அய்ரோப்பிய சூழலில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் விளைவாகவே இருந்தது. அண்மையில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பேசப்படும் பொருளாகமாறியது. இந்தமாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு பண்பாட்டு நிகழ்வில் எழுப் பப்பட்ட முழக்கங்கள் இந்தியாவில்...

கரன்சி ஒழிந்தது; கல்வீச்சு நின்றது!

கரன்சி ஒழிந்தது; கல்வீச்சு நின்றது!

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் ஏற்பட்ட பயன் ஒன்றை கண்டுபிடித்து காதில் பூ சுற்றியிருக்கிறார் மத்திய இராணுவ அமைச்சர்  பாரிக்கர். காஷ்மீரில் இராணுவத்தினர் மீது, மக்கள் (அதாவது பயங்கரவாதிகள்) கல்வீசுவது நின்று விட்டதாம்; ஒரு கல் வீசினால் ரூ.500 என்று ‘தீவிரவாதிகள்’ கொடுத்து வந்தார்களாம்! இனிமேல் இந்தியாவில் இராணுவத்துக்கு எதிரான எந்த பயங்கரவாத நடவடிக்கையும் அப்படியே நின்று போய்விடும் என்று நம்புவோமாக! அதேபோல் பாகிஸ்தான் இந்திய எல்லையிலும், சீனா-இந்திய எல்லைப் பகுதியிலும் இனி குண்டுகள் வெடிக்காது. அந்த செய்தியையும் பாரிக்கர் நாட்டுக்கு அறிவிக்கும் நாள் விரைவில் வரக் கூடும். அப்படியானால் ‘பாரத’ தேசத்தில் இராணுவத்துக்கே இனி வேலை இல்லை என்ற நிலை வந்தாலும் வரலாம். இதேபோல், “10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை ஒழித்து விட்டால் பிச்சைக் காரர்களை ஒழித்து விடலாமே” என்று ஒரு நண்பர் யோசனை கூறுகிறார். இதுவும் கூட ஒரு நல்ல யோசனைதான்! ஆக,...

காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 21072016

கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய அரசே!  காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! காஷ்மீர் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமல்ல காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே! இந்திய ராணுவமே காஷ்மீரை விட்டு வெளியேறு! எனும் முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 21.7.16 அன்று மாலை 4 மணிக்கு கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இதில் அபதுல் சமது மனித நேய மக்கள் கட்சி, ஏ.கே. கரீம் எஸ.டி.பி.ஐ, சுந்தரமூர்த்தி த.வி.இயக்கம், பொழிலன் த.மக்கள் முன்ணனி, கரு.அண்ணாமலை த.பெ.திக, முகமது ரபீக் ராஜா பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, சதீஷ் CPImட மக்கள் விடுதலை, செந்தில் இளந்தமிழகம் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தபசிகுமரன், உமாபதி, வேழவேந்தன், இயேசு உள்ளிட்ட கழக தோழர்கள் தோழமை இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இளந்தமிழகம் இயக்கம்.