Tagged: கால்பந்து

சுயமரியாதை கால்பந்து கழகத்தின் 5ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி 24092017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலை பகுதி நடத்தும்… #சுயமரியாதை_கால்பந்து_கழகத்தின் 5ஆம் ஆண்டு கால் பந்து போட்டி குருவிளையாட்டுத்திடல் மயிலாப்பூர் பகுதியில் 24.09.2017 காலை 8 மணியளவில் நடைபெற்றது. போட்டி துவக்கி வைக்க வந்த மயிலை த. வேலு (மயிலை கிழக்கு பகுதி செயலாளர், திமுக) அவர்களுக்கு தோழர்.மாணிக்கம் மற்றும் தோழர்.சி.பிரவீன் சால்வை அணிவித்து வரவேற்றனர். கால்பந்து போட்டியை மயிலை த.வேலு அவர்கள் இந்த கால்பந்து போட்டியை ஒருங்கிணைத்த மயிலை பகுதி தோழர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி போட்டியை துவக்கி வைத்தார். இந்த கால்பந்து போட்டியில் பல்வேறு பகுதியிலிருந்து 16 அணிகள் பங்கேற்றனர். இந்த கால்பந்து போட்டியில் AVP பிராட்வே அணி வெற்றி பெற்றது. இரண்டாவது அணியாக MKFC அணி வந்தது. இந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் 26.09.2017 அன்று நடைபெறவுள்ள செரின் மேரீஸ் பாலம், மந்தவெளி இரயில் நிலையம் அருகில் தந்தை பெரியாரின் 139வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும் என்று...

மயிலைப் பகுதி கழகம் எடுத்த கால்பந்து போட்டி – பெரியார் பிறந்த நாள் விழா

மயிலைப் பகுதி கழகம் எடுத்த கால்பந்து போட்டி – பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா மயிலை கழகம் சார்பாக 27.9.2015 அன்று காலை 10 மணியளவில் செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் 3ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை ஜெ. அன்பழகன் (சட்ட மன்ற உறுப்பினர் தி.மு.க.) துவக்கி வைத்தார். போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து 28.92015 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பார்க் அருகே நடைபெற்றது. ஆ. சிவா தலைமை வகிக்க, ஆ. பார்த்திபன், சி. பிரவீன் முன்னிலையில் இரா. மாரி முத்து வரவேற்புரையாற்ற சம்பூகன் குழு வினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நா. நாத்திகன், ஆனந்தகுமார், கோவை இசைமதி ஆகியோர் ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைப் பாடல்களைப் பாடினர். கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்,...