Tagged: காசு.நாகராசன்

ககாபுதூர் சாதீய வன்முறை – உண்மையும் தீர்வும் கோவை 31012017

கா.க.புதூர் சாதீய வன்முறை மற்றும் பரவலாக நடைபெறும் ஆதிக்க சாதி இந்துத்துவ கூட்டு வன்முறையைக் கண்டித்து கோவை, பொள்ளாச்சி நகரங்களில் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்! கடந்த சனவரி 8ஆம் தேதி கா.க.புதூரில் தோழர் கா.சு. நாகராசன் இல்லத்தில் ஆதிக்க சாதியினரும் இந்து முண்ணனி மதவெறிக் கும்பலும் சேர்ந்து நடத்திய வன்முறை தாக்குதல் பற்றிய உண்மையும்,தீர்வும் என்ற தலைப்பில் 31.01.2017 செவ்வாய் மாலை 05 மணிக்கு கோவை ஆதித்தமிழன் அரங்கில் அனைத்து இயக்கங்களின் கலைந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் “கொளத்தூர்” மணி அவர்கள், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ” ஆதித்தமிழர்” பேரவை நிறுவனர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். திவிக தோழர் பொள்ளாச்சி வெ.வெள்ளிங்கிரி கா.க.புதூர் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் அதிக்க சாதி இந்து முண்ணனி கூட்டணி குறித்தும் வரவேற்புரையில் தெளிவுபடுத்தினார்.தொடர்ந்து தோழர் கா.சு.நாகராசன் 8 ஆம் தேதி வன்முறை மற்றும் அதன் பின்னணி குறித்து அறிமுக உரையாற்றினார்....

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம். ******************* 31.01.17 செவ்வாய் மாலை 05 மணி. ஆதித் தமிழன் அரங்கம், மேட்டுப்பாளையம் சாலை, கோவை. தலைமை ———– தோழர் கொளத்தூர் மணி. தலைவர், (திராவிடர் விடுதலைக் கழகம்) முன்னிலை ————- தோழர் அதியமான் தலைவர், ( ஆதித் தமிழர் பேரவை ) சமூக நீதிக்கான களத்தில் நிற்கிற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். இப்படிக்கு காசு.நாகராசன். #94439 33669

காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு

காளியப்பகவுண்டன் புதூரில் கழகத் தலைவர் நேரில் ஆய்வு

பொள்ளாச்சி காளியப்பகவுண்டன் புதூரில் ஆதிக்க ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்ட தோழர் காசு.நாகராசன் மற்றும் தோழர்களையும் மருத்துவமனையில் சந்தித்து விட்டு பின்னர் ஊரில் சேதமடைந்த பகுதிகளையும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்… பேட்டி பார்க்க இங்கே சொடுக்கவும் பேட்டியில் காவல்துறை இரண்டு நாள் அவகாசம் அளிக்க கேட்டுள்ளனர் அதற்குள் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றால் தமிழ்நாடு தழுவிய அளவில் பெரிய போராட்டம் காசு.நாகராசன் க்கு ஆதரவாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.. பின்பு ஊரில் கூடியிருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.  காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் ஊரில் பொதுகூட்டமாகவே நிகழ்ச்சி நடந்தது. இதில் திராவிடர் விடுதலைக் கழகம், தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமுமுக, இந்திய ஜவ்ஹீத் ஜமாத் கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், மக்கள் விடுதலை முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் கட்சி, அம்பேத்கர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு மாணவர் மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10012017

பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10012017

பொள்ளாச்சியில் நாளை 10.01.17 “கண்டன ஆர்ப்பாட்டம்” ஜாதி வெறியர்களால் தோழர் கா.சு.நாகராசன் மற்றும் தோழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவல்நிலைய பாதுகாப்பில் இருந்து தப்பிச்சென்ற குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும், தப்பவிட்ட காவல்துறைமீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அனைத்துக்கட்சிகள்,அனைத்து சமுக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை : தோழர் “கொளத்தூர்மணி” (தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்) நாள் – 10.01.17,காலை -11.00மணி. இடம்: திருவள்ளுவர் திடல்,பொள்ளாச்சி அனைவரும் ஒன்றுபடுவோம் சாதிவெறியர்களுக்கு எதிராக ! பேச : 9842487766, 8344053307