Tagged: கண்டனம்

சுற்றுச் சூழல் போராளி பியூஸ் மீதான சிறை தாக்குதலுக்கு கண்டனம்

17-7-2016 ஞாயிறு அன்று காலை 11-00 மணிக்கு, சேலம் குடிமக்கள் குழுவின் சார்பாக, பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் கடும் சித்திர வதைக்கு உள்ளான பியூஸ் மானுஷ், ஈசன் கார்திக், முத்து செல்வன் ஆகியோரை விடுவிக்கவும், அவர்கள்மீது பொய்யாக புனையப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுமாறும், நீதிமன்றக் காவலில் இருந்த அவர்களை சிறையில் தாக்கி சித்திரவதை செய்த சிறைத்துறையினர்மீது குற்றவியல் வழக்குப் பதிந்து இடைநீக்கம் செய்ய வலியுறுத்தியும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் குடிமக்கள் குழுவின் பொறுப்பாளர் டாக்டர் விஜயன், பிரபல மருத்துவர் கே.என்.ராவ், பசுமை இயக்கம் டாக்டர் ஜீவானந்தம், கோவை டாக்டர் ரமேஷ், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன், சென்னை, கோவை, தருமபுரி பகுதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பினர், தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் ஒசூர் மாரிமுத்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்டத்தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், மாநகர...

சீமானின் அநாகரீகம்: பாண்டேயின் பார்ப்பனியத்துக்கு கழகம் கண்டனம்

‘தந்தி’ தொலைக்காட்சியில் மூத்த பொதுவுடைமைவாதி அருணனை ஒருமையில் இழிவாகப் பேசிய சீமானையும், இதை கண்டிக்காத ‘தந்தி’ தொலைக்காட்சி நெறியாளர் பாண்டேயையும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டித்து கழகத்தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கை. ‘தந்தி’ தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு நேரலை விவாதத்தில் பங்கு கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தை முன் வைத்த மூத்த பொதுவுடமைவாதி, எழுத்தாளர், பேராசிரியர் அருணனை அருவருக்கத்தக்க வகையில் தடித்த வார்த்தைகளால் பேசியது கண்டிக்கத்தக்கதாகும். தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தையோ அல்லது விமர்சனத்தையோ முன்வைக்கும் போது அதற்கு தக்க பதிலை, தன் நிலைப் பாட்டை நாகரீகமாக வெளிப்படுத்துவதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்தில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். மாற்றுக் கருத்துக்கு தக்க பதில் சொல்ல இயலாத நிலையில் ஒரு மூத்த பொதுவுடமைவாதியை நோக்கி, ‘உனக்கு தத்துவம் என்ன உள்ளது?’ என கேட்பதும், ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசுவதும், மோசமாக...

‘அருந்ததினர்’ மீதான  தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

‘அருந்ததினர்’ மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள வெட்டல் நாயக்கன்பட்டியைச் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞர் பாலமுருகன் என்பவருக்கும் ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தைச் சார்ந்த நதியா என்பவருக்கும் காதல் திருமணத்தை தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சார்ந்த மாவட்ட செயலாளர் போஸ் (இவர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்) நடத்தி வைத்துள்ளார். இதற்காக விடுதலை சிறுத்தைகள், புரட்சிப் பாரதம், பறையர் பேரவை அமைப்பைச் சார்ந்தவர்கள், அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த போஸ் என்ற தோழரை கொடூரமாக கொலை வெறியோடு தாக்கியதாக செய்திகள் வந்துள்ளன. இதேபோன்று விழுப்புரம் கச்சிராப்பாளையம் அருகே உள்ள கரடி சித்தூரில் ஆதிதிராவிடர் பரிமளா என்பவரை (பறையர் சமூகம்) அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த இளைஞன் வீரன் என்பவர் காதலித்து இருவரும் ஊரை விட்டே ஓட நேர்ந்தது. தொடர்ந்து அருந்ததியர் சமூகப் பெண்கள் நான்கு பேரை மந்தையில் நிறுத்தி மானபங்கப்படுத்தி, 19 வயது வெள்ளையம்மாள் என்பவரை படுகொலை செய்ததாகவும், 17 வயது நதியாவை மனநோய்க்கு உள்ளாக்கியதாகவும்...