Tagged: உச்சநீதிமன்றம்

தில்லை நடராசன் வழக்கு: தீட்சதர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆட்சி சதி

தில்லை நடராசன் வழக்கு: தீட்சதர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆட்சி சதி

28.11.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதம் குறித்த சுருக்கமான குறிப்புகள்: சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறை 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோற்ற தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, சுப்பிரமணிய சாமி இந்த வழக்கில் இணைத்துள்ளார். கோயிலை அறநிலையத் துறை மேற்கொண்டதற்கு ஆதரவாக ஆறுமுகசாமி (சிவனடியார்), வி.எம். சவுந்தரபாண்டியன் (சிதம்பரம்) ஆகியோர் வழியாக மனித உரிமை பாதுகாப்பு மையமும் சத்தியவேல் முருகனாரும் இவ்வழக்கில் தலையிட்டுள்ளனர். இவ்வழக்கு சௌகான், பாப்டே ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நவம்பர் 28 அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களான தீட்சிதர்கள் சார்பில் யாரும் வாதிடவில்லை. மாறாக, சுப்பிரமணிய சாமி வாதத்தை துவக்கி வைத்தார். சுப்பிரமணிய சாமியுடைய வாதங்களின் சுருக்கம்: “பிராமணர்கள்” எனப்படுவோர் பிறப்பினால் தோன்றுபவர்களல்ல. குணம் தான் ஒருவர் “பிராமணரா” என்பதைத் தீர்மானிக்கிறது என்று கீதை கூறுகிறது. அதனால்தான்...

தலையங்கம்: மீண்டும் ‘377’

தலையங்கம்: மீண்டும் ‘377’

டெல்லி உயர்நீதிமன்றத்தால் 2009 இல் நீக்கம் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவுக்கு இப்போது உச்சநீதிமன்றம் உயிர் கொடுத்திருப்பது நாடு முழுதும் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. “இயற்கைக்கு விரோதமாக உடல்உறவு கொள்வது தவறு; மீறுவோருக்கு ஆயுள் தண்டனை” என்று கூறும் இந்தச் சட்டம் 1860 இல் மெக்காலே உருவாக்கிய குற்றவியல் சட்டத்தில் இடம் பெற்றதாகும். பிரிட்டிஷ்காரர்கள் அன்றைய இங்கிலாந்தில் இதே போன்ற சட்டம் இருந்ததால் இந்தியாவுக்கும் கொண்டு வந்தார்கள். இன்று இங்கிலாந்திலேயே அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின் அடுத்தக்கட்டப் பரிமாணம் ‘இது’ என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. 18 ஆப்பிரிக்க நாடுகளும், 20 ஆசிய நாடுகளும் இந்த ‘ஓர் பால்’ திருமண முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. 78 நாடுகள் இதை குற்றமாகக் கருதுகின்றன. பாலின உறவுகள் தனி மனித உரிமைகளின் பாற்பட்டது....

பெரியார் கருத்து வெற்றி பெறுகிறது! திருமணமின்றி சேர்ந்து வாழலாம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பெரியார் கருத்து வெற்றி பெறுகிறது! திருமணமின்றி சேர்ந்து வாழலாம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 28.11.2013 அன்று வழங்கியது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணையும், அவருக்குப் பிறந்த குழந்தையையும் தனியாகத் தவிக்கவிட்டு, திடீரென ஆண் ஒருவர் பிரிந்து சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னை தவிக்கவிட்டுச் சென்ற அந்த ஆணிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி கே.எ°.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “திருமண மாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள், அவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத்தை இயற்ற வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தர விட்டது. மேலும், “திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றமும் அல்ல, பாவம் அல்ல....

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

தில்லை தீட்சதர் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது.  – உச்சநீதிமன்றம் சரி; அப்படியானால், அரசு நிறுவனமான நீதிமன்றம் தலையிடு வதும், வழக்கை விசாரித்து, தீர்ப்பு வழங்குவதும் நியாயமா? திருநாவுக்கரசர், திருஞானசம் பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சைவக் குரவர்கள் பாடல் பெற்ற திருத்தலம் தில்லை.  – செய்தி அது அந்தக் காலம். இப்போது தீட்சதர்கள் மட்டுமே பாடலாம்; ஓதுவார்கள் நுழைந்தால் அடி, உதை! பொது தீட்சதர்கள் சபைக்கு தலைவரே, தில்லை நடராசன் தான்.  – தீட்சதர்கள் வாதம் தலைவர் பதவி வேண்டாம்; பொரு ளாளர் பதவியைக் கொடுத்து விடுங்கள்; உண்டியல் பணம், நகைகள் திருட்டுப் போனால் தீட்சதர்களை நோக்கி எவனும் கேள்வி கேட்க முடியாது? அறநிலையத் துறை சட்டத்தின் கீழ் தில்லை நடராஜன் கோயில் வராது.  – உச்சநீதிமன்றம் அதேபோல், இந்திய அரசியல் சட்டம், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் தீட்சதர்களும் வர மாட்டார்கள் என்பதையும் இப்போதே உறுதி செய்து விடுங்கள். ஒரு வேளை...

குஜராத் இனப் படுகொலையை தூண்டியவர் மோடி

குஜராத் இனப் படுகொலையை தூண்டியவர் மோடி

2013 செப்டம்பர் 18 அன்று கலவரத்தில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. எஷான் ஜஃரியின் மனைவி திருமதி ஜக்கியா ஜஃப்ரி, அகமதாபாத் 11 ஆவது பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வமான குற்றமுறையீட்டின் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறோம். அதில் மோடிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்: 2002 பிப்ரவரி 27 அன்று துயரார்ந்த கோத்ரா சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு ‘மகாயஜ்னா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ இந்து பரிசத் அமைப்புகளின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து, புலனாய்வு அமைப்புகள் அனுப்பிய செய்திகளை அரசு வேண்டுமென்றே உதாசீனம் செய்தது. இந்த செய்திகளில் பைசாபாத் – அயோத்யாவிற்கு அனுப்பப்பட்ட 2800 மற்றும் 1900 கரசேவகர்கள் செல்லும் வழியெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் வரும் சமயத்தில் கரசேவகர் களால் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப் படுவது தொடர்பாக...

இழிதொழிலுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

இழிதொழிலுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

மனித மலத்தை எடுத்தல், சாக்கடைக் குழிக்குள் இறங்கி மூச்சுத் திணறி இறத்தல் என்று துப்புரவுத் தொழிலாளர்களான தாழ்த்தப்பட்டோர், இப்போதும் ஈடுபடுத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு அவர்கள் புனர்வாழ்வுக்கான திட்டங்களையும் முன் வைத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகி, என்.வி.இரமணா ஆகியோரடங்கிய அமர்வு 27.3.2014 அன்று பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 1993 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆபத்தான வேலையில் உயிரிழந்த குடும்பங் களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தும் ஒப்பந்தக்காரர்கள் குற்றத்துக்கு பொறுப்பு ஏற்கச் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் ‘தொழிலில்’ ஈடுபடுத்தப்படுவோரை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வுக்காக மாத ஊதியத்துடன் கூடிய வேறு தொழில் பயிற்சிகள், குடியிருப்பு மனைகள் அல்லது வீடுகள் வழங்குதல், குடும்பத்தில் ஒருவருக்கு மாற்றுத் தொழில் செய்வதற்கான சலுகைக் கடன் வழங்குதல் ஆகிய திட்டங்களை முன் வைத்துள்ளது உச்சநீதிமன்றம். இரயில்வே துறையில், இப்போதும்...

குஜராத் கலவரம்: மோடிக்கு தொடர்பில்லையா?

குஜராத் கலவரம்: மோடிக்கு தொடர்பில்லையா?

குஜராத் படுகொலையில் மோடிக்கு தொடர் பில்லை என்று உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு கூறிவிட்டது. எனவே மோடிக்கும் குஜராத்தில் 2002இல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் படுகொலைக்கும் தொடர்பே இல்லை. மோடி புத்தரின் வாரிசு, அகிம்சையின் அவதாரம் என்று மோடிக்கு முகமூடி போடுகிறார்கள் – மோடி ரசிகர்கள். ராகவன் என்ற ஓய்வு பெற்ற பார்ப்பன காவல் துறை அதிகாரியின் தலைமையில் மோடி உள்ளிட்ட 63 நபர்கள் மீது வந்த புகார் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு விசாரணையை நேர்மையாக நடத்தியதா? இது முக்கிய கேள்வி. இஷான் ஜாப்ரி என்ற கொலையுண்ட முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மனைவி, குஜராத்தில் 12 மாவட்டங்களில் நடந்த படுகொலைகளுக்கு காரணமான மோடி, அவரது சக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 62 நபர்களை பட்டியலிட்டு, அவர்கள் மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். விசாரணை நடத்திய ராகவன்...

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

தலையங்கம்: ‘ஏழு தமிழர் விடுதலை’யை அரசியலாக்குவதா?

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் கோவையில் 18-04-2014 அன்று நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் “வழக்கின் தீர்ப்பினை ஒரு வாரத்திற்குள் (தான் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக) வழங்கப்படும், அதுவரைப் பொறுத்திருங்கள்” எனக் கூறியுள்ளார். அவரது பதவிக்காலம், அவரது பிறந்த நாள் அடிப்படையில் 26-04-2014 – உடன் நிறைவடைகிறது. அந்த அடிப்படையில் 25-04-2014க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை பொறுத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். அவர் பேட்டியில் கூறியிருக்காவிட்டாலும், எந்த ஒரு நீதிபதியும் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பை, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வழங்குவது என்பது மரபான ஒன்றுதான். ஆனால் ஏதோ 24-04-2014 அன்று தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதைக் கணக்கில் கொண்டே, பேட்டி கொடுக்கப்பட்டதைப் போல, தலைமை நீதிபதியின் இயல்பான பேட்டியை விமரிசனம் செய்து தி.மு.க. தலைவர் கலைஞர்...

பெண்கள் – பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

பெண்கள் – பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் வித்தோபா கோயில் வழக்கில் பார்ப்பனர் களல்லாத தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உள்பட அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. “பார்ப்பனர்” மட்டுமே கோயில் அர்ச்சகராகலாம் என்ற ஆதிக்கத்திற்கு உச்சநீதிமன்றம் மரண அடி கொடுத்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், பெண்களும் அர்ச்சகராகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. மகாராட்டிர மாநிலத்தில் சோலாப்பூரை அடுத்த பந்தர்பூரில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த வித்தோபா கோயில் உள்ளது. புனித நகராகக் கூறப்படும் இந்நகரில் உள்ள கோயிலின் வரலாற்றிலேயே முதன்முதலாக பூசை செய்வதற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு அர்ச்சகராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பழமையான ஆண் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. வித்தல் (உ)ருக்குமணி கோயில் அறக்கட்டளையின் தலைவர் அன்னா டாங்கே இது குறித்து கூறும்போது இரு நூற்றாண்டுகளாக பார்ப்பனர் மட்டுமே கோயில் பூசை, சடங்குகள் செய்யப்பட்டு வந்ததை மாற்றி, நாட்டிலேயே முதல் முயற்சியாக கோயில் அறக்கட்டளை மூலமாகவே பழைய...

தூக்குத் தண்டனையை ஒழிக்க சட்ட வாரியம் கருத்து கேட்கிறது

தூக்குத் தண்டனையை ஒழிக்க சட்ட வாரியம் கருத்து கேட்கிறது

இந்தியாவில் ‘தூக்குத் தண்டனை’யை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கடந்த மே 23 ஆம் தேதி சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தூக்குத் தண்டனைக் குறித்து விரிவான ஆய்வுகள், விவாதங்கள் தேவை. இந்த விவாதங்களும் ஆய்வுகளும் சட்டத்தை உருவாக்குவோருக்கும் நீதித்துறைக்கும் பயன்பெறத்தக்க வகையில் உதவிட வேண்டும். தூக்குத் தண்டனைக்கு எதிராக உருவாகி வரும் சர்வதேசப் போக்கினைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில் தூக்குத் தண்டனைக் குறித்து உச்சநீதிமன்றம் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதை சுட்டிக் காட்டும் இந்த அறிக்கை, இந்த தண்டனையை வழங்குவதில் ஒரே சீரான அணுகுமுறை மேற்கொள்ளப்படாததை சுட்டிக் காட்டியுள்ளது. சட்ட ஆணையம் இது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல நேரங்களில் உச்சநீதிமன்றமே பரிந்துரைத்துள்ளது. கருணை மனுக்களை பரிசீலிப்பதில் நீண்ட காலதாமதம் செய்வது உயிர் வாழும் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்ற...

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு ஆட்சி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. “ஜாதி மறுப்புத் திருமணங்கள் தேசத்தின் நலனைக் காப்பதாகும். காரணம், ஜாதி மறுப்புத் திருமணங்களே. ஜாதி அமைப்பை அழிக்கக் கூடியவை” என்று கூறிய உச்சநீதிமன்றம், உ.பி. மாநில ஆட்சிக்கு நிரந்தரமான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் வெவ்வேறு ஜாதி மதங்களுக்குள் திருமணம் செய்து கொள்வார்களேயானால், அவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தருவதும், அச்சுறுத்தலிலிருந்து தடுப்பதும் ஆட்சியாளர்கள், காவல்துறையின் கடமை என்று உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தது. லதாசிங் என்ற பெண், உ.பி. அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு இணையர், மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். கடந்த...