காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 21072016
கண்டன ஆர்ப்பாட்டம்! இந்திய அரசே! காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து! காஷ்மீர் இந்தியாவுக்கோ, பாகிஸ்தானுக்கோ சொந்தமல்ல காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே! இந்திய ராணுவமே காஷ்மீரை விட்டு வெளியேறு! எனும் முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 21.7.16 அன்று மாலை 4 மணிக்கு கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இதில் அபதுல் சமது மனித நேய மக்கள் கட்சி, ஏ.கே. கரீம் எஸ.டி.பி.ஐ, சுந்தரமூர்த்தி த.வி.இயக்கம், பொழிலன் த.மக்கள் முன்ணனி, கரு.அண்ணாமலை த.பெ.திக, முகமது ரபீக் ராஜா பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, சதீஷ் CPImட மக்கள் விடுதலை, செந்தில் இளந்தமிழகம் மற்றும் கழக பொறுப்பாளர்கள் தபசிகுமரன், உமாபதி, வேழவேந்தன், இயேசு உள்ளிட்ட கழக தோழர்கள் தோழமை இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: இளந்தமிழகம் இயக்கம்.