Tagged: இந்து முன்னணி

இந்து முன்னணி வன்முறை கும்பலை தடை செய்! திருப்பூரில் 2500 தோழர்கள் கைது!

தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுறுத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டு கைதானார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும், கடைகளுக்கு அச்சுறுத்தலாககலவரத்தை ஏற்படுத்தும் இந்து முன்னணியை தடை செய்யவும், அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது  செய்யவும் வலியுறுத்திப் பேசினர்.கோவையில்...

கோவை மதவெறிக் கலவரத்துக்கு பச்சைக் கொடி காட்டிய காவல்துறை

கோவையில் இந்து முன்னணியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்த டி.சசிக்குமார் (35) என்பவர் 22.09.2016 அன்று இரவு அடையாளம் தெரியாத சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை மாவட்டம் முழுவதும் காலை முதல் இரவு வரை கடைகள் அடைக்க வைக்கப்பட்டது. இந்து முன்னணியினர் இருசக்கர வாகனங்களில் சென்று அதிகாலை முதலே கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டிச் சென்றனர். காலை 9 மணி வரை பெரும்பகுதி அரசு, தனியார் பேருந்துகள் இயங்கின. பிறகு காலை 9 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்கவில்லை. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டது, பள்ளிகள் கல்லூரிகள் மதியத்திற்குமேல் விடுமுறை அளிக்கப்பட்டது. வன்முறையாளர்கள் நகரம் முழுவதும் கலவரத்திலும், தாக்குதலிலும், சொத்துக்களை அழிப்பதிலும், வாகனங்களை கொளுத்துவதிலும், சூறையாடுவதிலும் ஈடுபட்டனர். மாவட்ட காவல்துறையினர் இந்த நிகழ்வுகளில் எல்லாம் உரிய முறையில் தடுக்கவோ, கலைக்கவோ நடவடிக்கை எடுக்காததோடு, சார்பு தன்மையோடும் நடந்து கொண்டனர். அதிகாலை முதல் கலவரச் சூழல் உருவாகும் என்று தெரிந்தும் நடவடிக்கை போதுமானதல்ல, பள்ளி...