முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம் ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்
ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையின் தொடர்ச்சி – முஸ்லீம்கள் வீடுகட்டினால் யார் வேண்டு மானால் வாடகைக்கு வரலாம். ஆனால், பார்ப் பனர்கள் வீட்டில் வேறுயாரும் வசிக்க முடியாது. இந்த நாட்டில் அனைத்து பயங்கரவாத செயல்களையும் செய்வது பார்ப்பனீயம். ஆனால், பழியை சுமப்பது முஸ்லீம்கள். இந்த சூழ்ச்சி அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த குற்றச்சாட்டு, முஸ்லீம்கள் தீவிர மதநம்பிக்கை உடையவர்கள் அவர்களது குரானில் நான்கு பெண்டாட்டிகளைத் திருமணம் செய்ய சொல்லியிருக்கிறது. எவ்வளவு வேண்டுமானலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறது. அதனால் அவர்கள் அந்த மதக் கருத்தை பின்பற்றி நிறைய திருமணம்...