Tagged: ஆதியோகி

ஜக்கி அவர்களே… பதில் சொல்லுங்கள்!

ஜக்கிவாசுதேவ் -தொலைக்காட்சிகளுக்கு பேட்டிஅளித்துவருகிறார். அவரது பேட்டி தொடர்பான பல கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ‘ஆதியோகி சிவன்’ சிலை – அதைப் பார்ப்பவர்கள் நினைவி லிருந்து நீங்கவே நீங்காது; அந்த வகையில் 112 அடியில் வடிவமைத்திருக்கிறோம் என்கிறார். அப்படியானால் உருவ வழிபாடே கூடாது என்று இதுவரை இவர் கூறிவந்த கருத்துக்கு விடை கொடுத்து விட்டாரா? ஆதியோகி சிலை கடவுள் சிலை அல்ல; அது சிவன் சிலையும் அல்ல என்கிறார் ஜக்கி. அப்படியானால் அந்த சிலையில் சிவனின் அடையாளத்தைக் குறிக்கும் -கழுத்துப் பாம்பு; தலையில் சந்திரன் உருவங்கள் இடம் பெற்றிருப்பது ஏன்? எனது மய்யம் அமைந்த பகுதியில் ஒரு அங்குலம்கூட வனப்பகுதி கிடையாது; இந்தப் பகுதிகளில் நடமாடும் மான்களை வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர்கள், எங்கள் கட்டிடம் வந்த பிறகு, அது கிடைக்காமல் போனதால் எங்களை எதிர்க் கிறார்கள் என்கிறார். அப்படியானால் மான்கள் நடமாடக்கூடிய, அதன் மேய்ச்சல் பகுதியில்தானே இந்த மய்யம் கட்டப்பட்டிருக்கிறது....

ஆன்மீகமா? வணிகமா? ஈஷா மய்யத்தில் என்ன நடக்கிறது?

ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இந்த சமூகத்திலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டிய தீய சக்திகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இவர்கள் ஏன் தீய சக்திகள் தெரியுமா ? பாஸ் வாங்கி, அதை கழுத்தில் மாட்டிக் கொண்டால்தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சென்றால் இருபது அடிக்கு ஒரு முறை பாஸை பார்த்து செக் பண்ணுவார்கள். உள்ளே சென்றால், கண்ணை மூடிக்கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, ஆழ்ந்த தியானத்தில் பல இடங்களில் அமர்ந்திருப்பார்கள். பாதாள அறை போல இருக்கும் ஒரு அறைக்குள் லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த லிங்கத்தை தியானலிங்கம் என்று கூறுகிறார்கள். அந்த தியானலிங்கத்தை சுற்றி பலர் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பார்கள். அந்த தியானலிங்கத்தின் அருகில் சென்றாலே தியானம் செய்தது போல மன அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார் ஜக்கி வாசுதேவ். அதன் உள்ளே சென்று ஜக்கி சொன்னது போல 20 நிமிடம் அமர்ந்திருந்தும் எந்த...

ஜக்கி அவர்களே! பதில் சொல்லுங்கள்!

ஜக்கி அவர்களே! பதில் சொல்லுங்கள்!

ஜக்கி வாசுதேவ் – தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரது பேட்டி தொடர்பான பல கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ‘ஆதியோகி சிவன்’ சிலை – அதைப் பார்ப்பவர்கள் நினைவி லிருந்து நீங்கவே நீங்காது; அந்த வகையில் 112 அடியில் வடிவமைத்திருக்கிறோம் என்கிறார். அப்படியானால் உருவ வழிபாடே கூடாது என்று இதுவரை இவர் கூறிவந்த கருத்துக்கு விடை கொடுத்து விட்டாரா? ஆதியோகி சிலை கடவுள் சிலை அல்ல; அது சிவன் சிலையும் அல்ல என்கிறார் ஜக்கி. அப்படியானால் அந்த சிலையில் சிவனின் அடையாளத்தைக் குறிக்கும் – கழுத்துப் பாம்பு; தலையில் சந்திரன் உருவங்கள் இடம் பெற்றிருப்பது ஏன்? எனது மய்யம் அமைந்த பகுதியில் ஒரு அங்குலம்கூட வனப்பகுதி கிடையாது; இந்தப் பகுதிகளில் நடமாடும் மான்களை வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர்கள், எங்கள் கட்டிடம் வந்த பிறகு, அது கிடைக்காமல் போனதால் எங்களை எதிர்க் கிறார்கள் என்கிறார். அப்படியானால் மான்கள் நடமாடக்கூடிய, அதன்...

குலுங்கியது கோவை – எங்கெங்கும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் 24022017

கோவை வந்த மோடிக்கு கருப்பு கொடி. வனங்களை அழிக்கும் ஈஷா யோகா விழாவிற்க்கு வருகை தரும் மோடிக்கு எதிராக #திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 24022017 மாலை கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் காட்டப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர் ஈஷா மையத்தில் 122 அடி உயர சிவன் பொம்மையைத் திறக்க வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணி அணியாய் தோழர்கள் ஆர்ப்பாட்டம்-கருப்புக் கொடி-கைது.. # முதல் அணியில் த.பெ.தி.க, த.மா.கா,வி.சி ,விவசாய சங்கங்களின் தோழர்கள்.. # இரண்டாம் அணியில் தி.க தோழர்கள்.. # மூன்றாம் அணியில் தி.வி.க, சமூக நீதிக் கட்சி,மாதர் சங்கம், DYFI தோழர்கள்.. குறிப்பு: கைது செய்து நேரே மண்டபத்திற்கு கொண்டு சென்றிருந்தால் கூட, நிகழ்வுகளை பொதுமக்கள் அறிய முடியாமல் போயிருக்கும்.. ஆனால் திவிக தோழர்களை கைது செய்து, மண்டபம் கிடைக்காமல் கோவை முழுதும் வீதிவீதியாய்...