Tagged: ஆகம விதிகள்

ஆகமத்துக்குள் பதுங்கும் பார்ப்பனர்களே! இதற்கு என்ன பதில்?

ஆகமத்துக்குள் பதுங்கும் பார்ப்பனர்களே! இதற்கு என்ன பதில்?

இந்து சமூகத்தில் அனைத்துப் பிரிவினருக்கும் அர்ச்சகராகும் உரிமை மீண்டும் மறுக்கப்பட்டுள்ளது. ஆகமங்களைப் பின்பற்றும் கோயில்களின் நடைமுறைகள் அப்படியே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆகமங்களுக்கு சட்டப்பூர்வ ஏற்பை வழங்கியிருக்கிறது. “பிராமணர்களில்”கூட எல்லோரும் கருவறைக்குள் சென்று பூஜை செய்து விட முடியாது. அதற்குரிய ஆகம தகுதி பெற்றவர்கள்தான் பூஜை செய்ய முடியும் என்று பார்ப்பனர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், அதற்குரிய ஆகமத் தகுதி பெற்ற பார்ப்பன ரல்லாத ‘சூத்திரர்’களுக்கு முற்றிலும் உரிமை கிடையாது. பார்ப்பனர்கள் இப்போது கோயில்களில் வழிபாடுகளில் ‘ஆகம’ விதிகளை அப்படியேதான் பின்பற்றி வருகிறார்களா? அவை மீறப்படாமல் இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க ஏதேனும் அமைப்பு இருக்கிறதா? அல்லது இப்போது ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் வேலை பார்க்கும் அய்யர், அய்யங்கார், சாஸ்திரிகள் ஆகமங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் என்பதற்கு ஏதேனும் தேர்வுகளோ – அதில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றுகளோ இருக்கிறதா? எதுவும் இல்லை. அவர்கள் பின்பற்றுவதுதான் ஆகமம். அவர்கள் நடத்துவது எல்லாமே முறையான...

19122015 சேலம் – மக்களைப் பிளவுப்படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு – தீர்மானங்கள்

தீர்மானம் : 1 உரிய பயிற்சி பெற்ற எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் அறநிலையத் துறையின் ஆளுகைக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என 2006 –ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டது. தீண்டாமையையும், பார்ப்பன மேலாண்மையையும் நிலைநிறுத்தும் – ஆகம சாஸ்திரங்களைப் பின்பற்றுவது “தீண்டாமை” தடுப்பு சட்டத்துக்கோ – சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கோ எதிரானது அல்ல என்றும் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகம விதிகள் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமைக்குரிய கோயில்களில், அதற்கு மாறாக  வேறு எந்தப் பிரிவினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – இந்து மதம் பார்ப்பன மதமே என்பதை உறுதியாக்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து – தமிழக அரசு...