Tagged: அறிவியல் பரப்பரை பயணம்
தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் கட்டுரை போட்டி, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 06082016 அன்று அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தின் துவக்க விழாவின் போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி வாழ்த்தி வணங்கினார் நம்புங்கள் அறிவியலை, நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கத்தோடு நடைபெற உள்ள பரப்புரை பயணத்தின் துவக்க விழா சென்னை திவிக சார்பில் 08082016 மாலை 6 மணிக்கு லாயிட்ஸ் சாலையில் நடைபெற்றது அவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை… அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துவக்க பொதுக் கூட்டம் 06.08.16 சனிக் கிழமை மாலை 6.00 மணியளவில் இலாயிட்ஸ் சாலை, சென்னையில் மாவட்டத் தலைவர் உமாபதி முன்னுரையுடன் இனிதே துவங்கியது. சம்பூகன் இசை குழுவின் பகுத்தறிவு பாடல்களை தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கருத்துரையுடன் கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, அருண் ஆகியோரும் அறிவியல பரப்பரையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்கள் தோழர் தர்மா நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது செய்தி தோழர் குகநந்தன்
மக்களிடம் அறிவியல் சிந்தனைகளையும் பகுத்தறிவு கருத்துகளையும் விளக்கி, ‘நம்புங்க-அறிவியலை; நம்பாதீங்க-சாமியார்களை’, ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை’ என்ற முழக்கத்தோடு, பரப்புரைப் பயணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஆகஸ்டு 7ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை தமிழகம் முழுதும் நான்கு முனைகளிலிருந்து பரப்புரை பயணக் குழு புறப்படுகிறது. சத்தியமங்கலம் – சென்னை – மயிலாடுதுறை – திருப்பூரிலிருந்து 4 அணிகளும் தனித் தனி யாகப் புறப்பட்டு, மக்களிடம் அறிவியல் கருத்துகளையும் மூடநம்பிக்கைகளால் சமூகத்தின் பாதிப்புகளையும் விளக்கிப் பேசுவார்கள். குறிப்பாக பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அழிக்கும் பெண் சிசுக் கொலை, 18 வயது முழுமையடைவதற்கு முன்பே சிறுமிகளாக இருக்கும் பெண்களுக்கு ‘மரபு வழக்கம்’ என்ற பெயரால் நடத்தப்படும் இளம் வயது திருமணத்தால் பெண்களுக்கு உடலியல், உளவியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள் – பறிக்கப்படும் பெண்களின் உரிமைகள்; பெண்களிடம் அவர்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்தி ஏமாற்றி கெடுக்கும் சாமியார்கள் மோசடி, ‘பேய்- பில்லி-சூன்யம்’ என்ற கற்பனைகள்...