Tagged: அனிதா

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேச்சு நீட் ஆதரவாளரின் புரட்டு வாதங்கள்

அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக செப்.13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் கா. ரசினிகாந்த் தலைமை தாங்கினார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பிற்பகல் நிகழ்வில் பங்கேற்று பேசினார். அவரது உரையிலிருந்து: “வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எதிர்த்து செண்பகம் துரைராசன் என்ற பார்ப்பனப் பெண், தனது 37ஆவது வயதில் உயர்நீதிமன்றத்தில் மருத்துவக் கல்லூரிக்கு மனுவே போடாமல் தனக்கு மருத்துவ கல்லூரியில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் இடம் கிடைக்காமல் போய்விட்டது என்று வழக்கு தொடர்ந்தார். அரசியல் சட்ட நிர்ணய வரைவுக் குழுவில் இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே வழக்கறிஞராக நின்று வாதிட்டபோது, “சென்னை மாகாண மக்கள், புதிய சகாப்தத்திற்கேற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர வகுப்புரிமை நீதி போன்ற பிற்போக்கான பிரச்சினையை பேசிக் கொண்டிருக்கக் கூடாது”...

அனிதா நினைவேந்தல் மற்றும் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் 05092017

குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தங்கை அனிதா நினைவேந்தல், நீட் தேர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில், வடசேரி, அண்ணாச் சிலை அருகில் 05092017, செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணிக்கு கொட்டும் மழையில் மாவட்டத் தலைவர் தோழர். வழக்குரைஞர்.சதா தலைமையில் நடைப் பெற்றது. தோழர் நீதி அரசர் மா தலைவர், (பெ.தொ.க)முன்னிலை வகித்தார், மாவட்டச் செயலாளர் தோழர்தமிழ் மதி கண்டன முழக்கங்கள் எழுப்பினார்.தோழர்கள் விஸ்ணு, சூசையப்பா ,மஞ்சுகுமார் ,சஜீவ், போஸ், றசல் இராஜ் ,சுகுமார்,குமரேசன்,மணிகண்டன்ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மாணவி அனிதாவிற்கு நீதி வேண்டி பேராவூரணி வேதாந்தம் திடலில் உண்ணாவிரதம் 10092016

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கையில் 15 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – மருத்துவர் ஜெயராமன் தகவல். “நீட் தேர்வுக்குப்பின் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு நடத்தும் மருத்துவக்கல்லூரிகளில் 85 விழுக்காடு மாணவர்களுக்கான சேர்க்கையை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிறைவு செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள 150 மாணவர்களுக்கான இடங்களில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள். எல்லா மாநிலங்களிலிலும் நீட்டை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று இங்கு பொய் பரப்புரை செய்யப்படுகிறது. சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள ஆந்ரா மாநிலத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி நீட் தேர்வை புறந்தள்ளிவிட்டது. தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி என்ற அடிப்படையில் 24 மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தமிழக ஏழை எளிய மாணவர்கள் சேர்ந்து படிக்க...