கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 06.09.2015 அன்று காலை 09.30 மணிக்கு தக்கலை,ஜோஸ் அரங்கில் நடைபெற்றது. தோழர் நீதிஅரசர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட தலைவர் தோழர் ஜா.சூசையப்பா தலைமை உரை நிகழ்த்த,மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா வாழ்த்திப் பேசினார்.
மாநில அமைப்புசெயலாலர் தோழர் ரத்தினசாமி அவர்கள் பெரியாரியல் எனும் தலைப்பில் 2 மணிநேரம் உரையாற்றினார்.பிறகு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
பிற்பகல் நிகழ்வாக மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் ”கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதீயம்,நாத்தீகம்’ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.

புதிய பொறுப்பாளர்களாக,
மாவட்ட தலைவர் : தோழர் சதா,
மாவட்ட செயலாளர் : தோழர் தமிழ்மதி,
மாவட்ட பொருளாளர் : தோழர் மஞ்சு குமார்,
பெரியார் தொழிலாளர்கழக மாவட்ட தலைவர் தோழர் நீதிஅரசர், குழித்துறை நகர தலைவர் கே.எஸ்.தாமஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இக்கலந்துயாடல் கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.அனைவருக்கும் பெரியார் படம் அச்சிட்ட குறிப்பேடும் வழங்கப்பட்டது.

111 12009684_1653456768271550_3051750173396423419_n12045790_1653456618271565_2212960243569318247_o

You may also like...

Leave a Reply