வினாக்கள்… விடைகள்…!

ஓரின உறவு இயற்கையானது அல்ல; இயற்கைக்கு முரணான ஒன்றை பா.ஜ.க. ஆதரிக்காது.  – ராஜ்நாத்சிங்

ஆடையின்றிப் பிறந்ததுதான் – மனிதனின் இயற்கை. மனிதன் ஆடை அணிவதையும் பா.ஜ.க. ஏற்காதோ?

திருப்பதி ‘லட்டு’ தரம் உயர்த்தப்படும்.  – தேவ°தானம் அறிவிப்பு

அப்படியே, ‘மொட்டை’ போடுவதையும் தடை செய்து, பக்தியின் தரத்தையும் சற்று உயர்த்தக் கூடாதா?

‘ஆதார்’ அடையாள அட்டை அமைப்பின் தலைவர் நந்தன் நிலகேணி, காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம். – செய்தி

சரிதான்! காங்கிரசுக்கே அவர் அடையாள அட்டையாகிவிட்டாரா?

ஏற்கனவே தங்கப் புதையல் பற்றி கூறிய சாமியார் சோபன்சர்க்கார், இப்போது பதேப்பூர் கோட்டைக்குக் கீழே 2500 டன் தங்கம் இருப்பதை தோண்ட வேண்டும் என்று அலகாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. – செய்தி

அடுத்து நீதிபதி வீட்டுக்குள் 3000 டன் தங்கம் புதைக்கப்பட்டிருக்கிறது என்று வழக்கு தொடரப் போகிறார், பாருங்கள்!

நாடாளுமன்றத்தில் ஊழலைத் தடுக்கும் ‘லோக்பால் மசோதா’வை காங்கிர° கொண்டு வருகிறது.    – செய்தி

செய்து முடித்த எல்லா ஊழல்களுக்கும் ஒரே சட்டத்தில் முற்றுப்புள்ளி வைத்து சரித்திரம் படைத்த காங்கிரசுக்கே எங்கள் ஓட்டு!

மன்மோகன் சிங்குக்கு பிரதமர் பதவி வழங்கி யிருக்கக்கூடாது என்று பல ஆண்டுகளாகவே கூறி வருகிறேன்; யாருமே கேட்கவில்லை. – மணி சங்கர் அய்யர்

வருத்தப்படாதீர்கள். இன்னும் சில மாதங்களில் மக்கள் காதுகொடுத்து கேட்கத் தயாராக இருக்கிறார்கள்.

பில்லி சூன்ய எதிர்ப்புச் சட்டத்தை இந்துக்களுக்கு விரோதமாக அரசு பயன்படுத்தினால் வீதியில் இறங்கிப் போராடுவோம்.    – மராட்டிய சட்டசபையில் சிவசேனா எதிர்ப்பு

ஏன் வீதிக்கு வருகிறீர்கள்? பில்லி சூன்யத்தை ஏவி விட வேண்டியது தானே?

பட்டேல் நினைவு நாளில் பாரதிய ஜனதா நாடு முழுதும் ‘ஒற்றுமை ஓட்டம்’ நடத்தியது.  – செய்தி

ஓட்டு வேட்டைக்கு உடற்பயிற்சி வேறு செய்ய வேண்டுமா? தாங்க முடியலடா, சாமி!

‘அய்யப்பன் சீசனால்’ டா°மாக்கில் மது விற்பனை குறைந்துவிட்டது.  – செய்தி

கவலை வேண்டாம்! ‘அய்யப்பன் ரிட்டர்ன் சீசன்’ வரும்போது விற்பனை சரிகட்டப்பட்டு விடும்.

பெரியார் முழக்கம் இதழ் 19122013

You may also like...