வினாக்கள்… விடைகள்…!
இந்தியாவில் தேசியப் பாதுகாப்புப் படையில் முதல்முறையாக ‘பெல்ஜியம் ஷெப்பர்டு’ நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. – செய்தி
இந்து தேசியத்தைக் காப்பதற்கு கிறிஸ்தவ நாட்டு நாய்களா என்று இராம. கோபாலன்கள் எதிர்க்க மாட்டார்கள் என்று நம்புவோமாக! ‘ஆமென்’.
சென்னையில் ‘கத்தி’ படம் ஓடும் திரையரங்கு வளாகத்தில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் சிலை. – செய்தி
அப்படியே, சிலைக்கு அர்ச்சனை டிக்கட் போட்டு அதையும் ‘கவுண்டரிலேயே’ விக்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சுடுங்க…
சோனியா, அத்வானி, முலாயம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த 401 எம்.பி.கள், தங்கள் சொத்து விவரங்களை இன்னும் அறிவிக்கவில்லை. – செய்தி
அவசரப்படாதீங்க… சொத்துகள் எங்கெங்கே பரவி கிடக்குதுன்னு கண்டுபிடிக்க கால அவகாசம் வேணும்ல.
மோடி கூட்டிய தீபாவளி விருந்து விழாவில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தினார். – செய்தி
குப்பையைப் பெருக்கி சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் தீபாவளியைக் கொண்டாடாதீங்கன்னு சொல்லியிருப்பார் போல!
திருப்பதி ஏழுமலையான் ‘தரிசன’ டிக்கட்டுகள் இனி அஞ்சலகங்களிலேயே கிடைக்கும். – செய்தி
அப்படியே, அஞ்சலக அதிகாரிகளாக புரோகிதர்களை நியமிச்சிடுங்க. மந்திரம் ஓதிண்டே ‘டெலிவரி’ செய்யலாம்!
தீண்டாமையை வலியுறுத்திய பூரி சங்கராச்சாரியை கைது செய்ய தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் ஆணை. – செய்தி
சிறைக்குள்ளும் தீண்டாமையை கடைப்பிடிப்பாரே; அப்ப என்ன செய்யறது? பேசாம ஆணையத்தையே கலைச்சுட வேண்டியது தான்!
பெரியார் முழக்கம் 30102014 இதழ்