வினாக்கள்… விடைகள்…!

திருச்செந்தூரில் ‘சூரபத்மனை’ முருகப் பெருமான் ‘வதம்’ (கொலை) செய்வதை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு. – செய்தி
அதே பக்தி உணர்வோடுதான் காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் ‘வதம்’ செய்கிறார்கள் போலிருக்கிறது!

காந்திக்கு பதிலாக கோட்சே நேருவைத் தான் சுட்டிருக்க வேண்டும். – ஆர்.எஸ்.எஸ். ஏடு ‘கேசரி’
ஏதோ, சின்ன ஆள் மாறாட்டம் நடந்துடுச்சு; விடுங்க. இனி யாரை, யார் சுட வேண்டும்னு குழப்பமில்லாம பாத்துக்குங்க, சரியா?

‘தீபாவளி’ பற்றி தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்துக்கு எதிர்ப்பு; வெளியே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போராட்டம். – செய்தி
விவாதத்தில் பங்கேற்க வந்த ஆர்.எஸ்.எஸ்.காரர், தனது வாதத்துக்கு வலிமை சேர்க்க இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருப்பார் போல!

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலுக்குள் நுழைய பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி வாசல். – செய்தி
அச்சச்சோ… இந்த கோயிலுக்குள்ளே சங்கர்ராமனை வெட்டி கொலை செய்ய வந்த கும்பல் எந்த வாசல் வழியா வந்து தொலைஞ்சாங்களோ தெரியலையே…!

காங்கிரசில் இருப்பது ஒரே கோஷ்டிதான்; அதற்கு தலைவர் சோனியா காந்தி. – ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன்
அப்படியா! இதுவரை ‘பேரியக்கம், பேரியக்கம்’ன்னுதானே சொல்லிக்கிட்டு வந்தீங்க… இப்ப கோஷ்டியாயிடுச்சா?

விநாயகன் என்ற உடலுக்கு யானை தலையைப் பொருத்தும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறை புராண காலத்திலேயே இருந்திருக்கிறது.- பிரதமர் மோடி
ஆமாம்! அதற்குப் பிறகு இந்த அறுவை சிகிச்சையை எவரும் செய்யக் கூடாது. மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று சிவபெருமான் ‘சாபம்’ விட்டார்ன்னு சேர்த்து சொல்லுங்க. இன்னும் கதை நல்லாவேயிருக்கும்!

பெரியார் முழக்கம் 06112014 இதழ்

You may also like...

Leave a Reply