வினாக்கள்… விடைகள்…!

சென்னை சேலையூரில் பாகனை மிதித்துக் கொன்ற அக்கோயில் மடத்தின் யானைக்கு மதம் பிடித்திருந்தது. – ‘தமிழ் இந்து’ செய்தி
தமிழ்நாட்டில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது உண்மைதான் போலிருக்கிறது.

மோடியை கடுமையாக விமர்சித்தால் வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது. – எச். ராஜா
ஆமாம்! எதுக்கும் வைகோ எச்சரிக்கையா இருப்பதுதான் நல்லது. மனுஷன் தனது கட்சி சாமியார்களப் புடிச்சு பில்லி சூன்யத்தை ஏவி விட்டாலும், விட்டுடுவாறு!

அரியானா சாமியார் ராம்பாலை கைது செய் யஅரசுக்கு செலவு ரூ.26 கோடி. – செய்தி
இதுக்கெல்லாம் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செஞ்சிடுங்க… அப்பத்தான், நிதி தட்டுப்பாடு இல்லாம சாமியார்களை பிடிக்க முடியும்!

ஆஸ்திரேலியாவில் மோடி பங்கேற்ற நிகழ்வில் இருந்த இந்திய வரைபடத்தில் காஷ்மீர் இடம்பெறவில்லை. – செய்தி
இனிமே வெளிநாடு போகும்போது, ‘கீதை’க்குப் பதிலாக இந்திய வரைபடத்தையே எடுத்துட்டுப்போய் பரிசாக கொடுத்துடுறதுதான் நல்லது!

புனேயில் கோட்சேயை பாராட்டி, ஆர்.எஸ்.எஸ். நடத்த இருந்த நாடகத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு. – செய்தி
ஒன்றும் பிரச்சினை இல்லை. நாடகத்தை அப்படியே சமஸ்கிருதத்துல மாத்திட்டா, ஒருத்தனுக்கும் புரியாது. அப்போ, எவன் எதுப்பான்னு பாத்துடுவோம்!

இந்தியாவில் இரயில் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். – மோடி
பயணிகளின் கனிவான கவனத்துக்கு! நாக்பூரிலிருந்து நாகூர் வரை செல்லும் கோட்சே விரைவு இரயில் இன்னும் சற்று நேரத்தில் அம்பானி பிளாட்பாரத்தில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரியார் முழக்கம் 04122014 இதழ்

You may also like...

Leave a Reply