மலேசிய பயணத்தில் பெரியார் சந்தித்த எதிர்ப்புகள்

“மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்” என்ற தொகுப்பு நூலை வெளியிட்டிருக்கிறார் ‘கவி’ எனும் தோழர் க.விநாயகம். இன்றைய மலேசியா வின் அன்றைய பெயர் ‘மலாயா’. அன்றைய மலாயாவில் தமிழர்களுக்காக குரல் கொடுத்த முன்னோடித் தமிழர்களையும் 1929 மற்ளும் 1954இல் பெரியார் ‘மலாயா’ வுக்கு வருகை புரிந்த வரலாற்றையும் ஆவணமாக பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு.
தமிழர் சீர்திருத்த சங்கம், தமிழர் நூல் நிலையம், பெரியார் பிறந்த நாள் விழாக்கள் என்ற தலைப்புகளின் கீழ் விரிவான செய்திகளை அரும்பாடுபட்டு சேகரித்து தொகுத்துள்ளார் நூலாசிரியர். 1936இல் தொடங்கப்பட்ட ‘தமிழர் சீர்திருத்த சங்கம்’ பெரியார் இயக்கத்தோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தது. ‘குடிஅரசு’ இதழில் இச்சங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. தமிழவேள் சாரங்கபாணி நடத்திய ‘தமிழ்முரசு’ நாளேடு, தமிழர் களின் குரலாகவும் வரலாற்றுப் பதிவாகவும் வெளிவந்ததோடு சுயமரியாதை கொள்கை களுக்கு ஆதரவாக இருந்தது. மற்றொரு முன்னோடியான அ.கி. சுப்பையா, ‘தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி’, ‘சுந்தர மூர்த்தி நாயனார்க் கிரிமினல் கே°’ எனும் மிகச் சிறந்த நூல்களை பெரியாரின் முன்னுரை யோடு வெளியிட்டார். இந்து மத புராணங்கள், சடங்குகள் அத்தனையை யும் கேள்விக்குள்ளாக்கி பகுத்தறிவு வினாக் களோடு படைக்கப்பட்ட நூல் – ‘சுந்தர மூர்த்தி நாயனார் கிரிமினல் கே°’. தமிழர் சீர்திருத்த சங்கம், மதங்களின் பார்வையி லிருந்து விலகி, இ°லாமியர்களையும், தமிழர்களாக இணைத்துக் கொண்டதை சிறப்பாகக் குறிப்பிடவேண்டும்.
1929இல் பெரியார் மலேசிய வருகைக்கு வைதிக தமிழர்கள் கடுமையாக எதிhப்பு தெரிவித்தனர். இந்து மதவாதிகளாக தங்களை அடையாளம் காட்டிக் கொண் டவர்கள், சுயமரியாதை கொள்கையுடன் வாழ்ந்த தமிழர்களுக்கு பெரும் தொல்லை, மிரட்டல்களை தந்தனர். இந்துமத இடுகாட்டில் சுயமரியாதை இயக்க ஆதரவாளர்கள் பிணத்தைப் புதைப்பதற்கு அனுமதி மறுத்து தீர்மானமே போட்டார்கள். இந்த நெருக்கடியான சூழலில் 1929இல் மலாயா வாழ் சுயமரியாதை தமிழர்கள் மாநாடு ஏற்பாடு செய்து, ‘இந்து சனாதனிகள்’ கொட்டத்தை அடக்க பெரியாருக்கு அழைப்பு விடுத்தனர். பெரியார் வருகையை தடுப்பதற்கு இந்து சனாதனக் கூட்டம் பெரும் முயற்சி எடுத்தது. மாநாடு ஒத்தி வைக்கப்பட்டு விட்டதாக பெரியாருக்கு பொய்யான தந்தி கொடுத்தார்கள். அக்காலத்தில் ‘தந்தி’ மட்டுமே சர்வதேச தொடர்பு ஊடகமாகும். தந்தியை சந்தேகித்த பெரியார் மீண்டும் தந்தி அனுப்பி விளக்கம் கேட்டு, மாநாடு நடப்பதை உறுதி செய்து, 1924 டிசம்பர் 15இல் நாகையிலிருந்து கப்பல் ஏறி ‘மலேயா’ சென்று ஒரு மாத காலம் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.
மத விரோதி பெரியாரை மலாயா வுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசுக்கு மனு கொடுத்து துண்டறிக்கைகள் வழியாக எதிர்ப்பு இயக்கம் நடத்தியதோடு, ‘தமிழ்நேசன்’ என்ற ஏட்டை நடத்திய அய்யங்கார் பார்ப்பனர் ஊர் ஊராகச் சென்று பெரியாருக்கு எதிராக பரப்புரை செய்தார். மலாயாவில் வைதீகர்கள் உருவாக்கிய ‘இந்து மகா சபை’யில் ஆதி திராவிடர்கள், மருத்துவர்கள் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை உறுப்பினர்களாக சேர்க்க தடை விதித்திருந்த காலகட்டம் அது. எதிர்ப்புக் குறித்து பெரியார் ‘குடிஅரசில்’ எழுதியிருப்பது நிலைமையை உணர்த்து கிறது.
“பினாங்கில் இறங்கியவுடன் பலவிதமான விஷயங்கள் காதுக்கு வந்தன. அவற்றுள் ஒன்று நம்மை கத்தியால் குத்துவதற்கு ஒரு நபருக்கு 500 வெள்ளி பேசி ஏற்பாடு செய்திருப்பதாகவும், நாம் போகு மிடங்களிலெல்லாம் கலகம் செய்வதற்கும் துண்டு பிரசுரங்கள் போட்டு வழங்கி
வதற்கும் 500 வெள்ளி பேசி பலரை நியமித் திருப்பதாகவும் மற்றும் கிரு°துவுக்கு விரோதமாய் பேசினதாகவும், இந்து மதத்தை ஒழித்து இந்துக்களை மகமதிய மதத்தில் சேர்ப்பிக்க மகமதியரிடம் பணம் வாங்கிக் கொண்டு மலாய் நாட்டுக்கு வருவதாகவும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விரோதமாய் ஒத்துழையாமை பிரச்சாரம் செய்ய வருவதாகவும் போல்ஷிவிசம் பிரச்சாரம் செய்ய வருவதாகவும் இன்னும் பலவிதமாக துண்டுப் பிரசுரங்கள் மூலமாக வும் பத்திரிகை மூலமாகவும் பிரச்சாரம் செய்திருந்த விஷயம் நேரில் பார்த்தோம். தவிரவும் அவ்விடத்தில் ஒரு ஆங்கில தினசரிப் பத்திரிகை, அரசாங்கத்திற்கும் சட்டபை அங்கத்தினர்களுக்கும் நாம் பெரிய கலகக்காரரென்றும் நம்மை மலாய் நாட்டில் விட்டால் ஜனசமூகத்தின் சாந்த குணம் கெட்டு சர்க்காருக்கு தொல்லையேற் படுமென்றும் எச்சரிக்கை செய்வதாக ஒரு வாரம் தவறாமல் தலையங்கமும் உப தலையங்கமும் எழுதி வந்தது” – என்று பெரியார் குறிப்பிடுகிறார்.
பெரியாரின் கொள்கைப் பயணம் வெளிநாடுகளில்கூட எவ்வளவு இடையூறுகளை சந்தித்தது என்பதற்கு இவை சான்றுகள். இந்த எதிர்ப்புகளை முறியடித்து தமிழர்கள் மிகப் பெரும் வரவேற்புத் தந்த செய்திகள் தொகுதியில் பதிவாகியுள்ளன.
பெரியார், மலேசிய வருகை குறித்து ஏற்கெனவே நூலகள் வெளி வந்திருந்தா லும் இந்த தொகுப்பு மேலும் விரிவான செய்திகளையும் ஆவணங்களையும் தொகுத்துத் தந்திருக்கிறது. மலேசிய திராவிடர் கழக முன்னாள் தலைவர் இரெ.சு.முத்தையா வெளியிட்டுள்ளார். விலை : ரூ.400.
முகவரி : 32, Jalan 6, Taman Shah Jaya, 43200, Batu 9, Cheras, Selangor, Malaysia. Cell: (6)019-2460609

பெரியார் முழக்கம் 27112014 இதழ்

You may also like...

Leave a Reply