வினாக்கள்… விடைகள்…!

பகவத் கீதையை காமசூத்திரத்தோடு ஒப்பிட்டு ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் இழிவுபடுத்துவதா? – இந்து முன்னணி கண்டனம்
வாத்சாயர் எழுதிய சமஸ்கிருத ‘இலக்கிய’மான காமசூத்திரத்தை இந்து முன்னணி, இப்படி இழிவு படுத்தலாமா?

நோயிலிருந்து குணம் பெற பக்தர்கள் ‘பிராமணர்’ சாப்பிட்ட எச்சில் இலை மீது உருளும் ‘பிரார்த்தனை’யை தடை செய்யக் கூடாது. – உச்சநீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வாதம்
அதுக்கு அம்புட்டு சக்தியா? அப்படின்னா, மோடி யிடம் பேசி, இந்த ‘எச்சலை’களுக்கு காப்பீட்டு உரிமை வாங்கிடுங்கோ…

கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் பள்ளிகளுக்கு விடுமுறையை இரத்து செய்து, மனித வளத்துறை அமைச்சகம் உத்தரவு. – செய்தி
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை விடுமுறையும் கிறிஸ்துவர்கள் கொண்டு வந்தது தானே! அதையும் இரத்து செய்து பாருங்களேன்…!

திருநள்ளாறு சனிப் பெயர்ச்சிக்கு வரும் பக்தர்கள் – அங்குள்ள நளன் குளத்தில் முழுக்குப் போட்டு, கட்டிய ஆடையை குளத்திலேயே விட்டு விடுகிறார்கள். – செய்தி
முழுக்குப் போட்ட இந்த நாள் முதல் நீ மான மில்லாதவனாக வாழ வேண்டும் என்பதே, இதில் அடங்கியுள்ள அ ய்தீகம் என்று அறிக!

இந்த 65 வயதிலும் காதல் காட்சிகளில் நான் நடிக்க வேண்டும் என்பது ‘ஆண்டவனின்’ விருப்பம்.
– ரஜினிகாந்த்
அப்ப, ஒரு ‘ஏ.சி.’ தியேட்டரைப் பிடிச்சு சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்யலாம்ல; ஆண்டவன்களை ஏமாத்தக் கூடாது, சார்?

காந்தியை கொன்ற கோட்சவுக்கு சிலை வைப்போம். – இந்து மகாசபை
வச்சுடலாம்! சம்பூகனைக் கொன்ற இராமனுக்கு பக்கத்திலேயே கோட்சேவுக்கும் வச்சிட்டா, ஜோடிப் பொருத்தம் நல்லாவே இருக்கும்!

இந்து மதத்துக்கு பிற மதத்தினர் வருவது மதமாற்றமல்ல; தாய் மதம் – திரும்புவதாகும்.
– சங் பரிவார்
சரி திரும்பிடலாம்; அப்படியே தாய் மதத்தின் ‘தகப்பன் அட்ரசை’ கொஞ்சம் சொல்றீங்களா?

பெரியார் முழக்கம் 25122014 இதழ்

You may also like...

Leave a Reply