நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் `பாவ’ யோசனை!

பெரியார் அறிவுலகத்தில் நடந்த புத்தக மோசடி ‘பாவங்களை’த் தீர்க்க உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு யோசனையை ‘அருள்வாக்காக’ வழங்கியிருக்கிறார். ‘காஞ்சிப்பெரியவாள்’ நூல்களை பெரியார் அறிவுலகத்தில் அடுக்கி வைத்தால் இந்தப் பாவங்கள் பறந்தே போகும் என்பதுதான் இந்த ஆலோசனை. ‘பெரியவா’ புத்தகங்களை இப்படி அடுக்கி வைத்தால்,
“தீண்டாமை பாவம்,
ஸ்திரீ பாவம்,
ஸ்நான பாவம்,
ஆகார பாவம்,
சமுத்திர பாவம்”
உள்ளிட்ட அனைத்து ‘பாவங்களும்’ நூலகத்தை தொற்றிக் கொள்ளும் என்பதால் அது வேண்டாம்; ‘மைலார்ட்’.
அந்த நூல்கள் உங்கள் சட்ட அலமாரியில் அப்படியே இருப்பதே ஷேமஹரமானது.
பெரியார் முழக்கம் இதழ் 19112026

You may also like...