ஜாதிப் பாகுபாட்டுக்கு பலியான மாணவர் அகிலன்; நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் போராட்டம்

கோவை கே. கே. நாயுடு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவர் அகிலன் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட ஜாதிய வன்கொடுமை காரணமாக 21.10.2026 அன்று தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணமான வகுப்பு ஆசிரியர் விஜயகுமார், தலைமையாசிரியர் அருண்குமார் மற்றும் இரண்டு சக மாணவர்கள் ஆகியோரில் இரண்டு சக மாணவர்களை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளது.

மாணவன் அகிலன் தற்கொலைக்குக் காரணமான வகுப்பாசிரியர் விஜயகுமாரையும், அவர் மீது புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளித் தலைமையாசிரியர் அருண்குமார் ஆகியோரைக் கைது செய்யக் கோரி மூன்றாவது நாளாக 24.10.2026 அன்று நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டம் அனைத்து முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று மாணவன் அகிலனின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அதியமான் (ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர், தலைவர்), நாகை திருவள்ளுவன் (தலைவர், தமிழ்ப் புலிகள் கட்சி), ஜக்கையன் (தலைவர், ஆதித்தமிழர் கட்சி), வெண்மணி (தலைவர், திராவிட தமிழர் கட்சி), மற்றும் முற்போக்கு இயக்கங்களின் கூட்டமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

கோவை மாவட்டக் கழகத் தோழர்களான பன்னீர்செல்வம் (மாவட்டச் செயலாளர்), நிர்மல் (மாநகரத் தலைவர்), வெங்கட் (மாநகரச் செயலாளர்), நவீன் (மாநகர அமைப்பாளர்), கிருஷ்ணன் கதிரவன், சதீஷ், லோகு, ராஜலட்சுமி, அறிவுகனல் ஆகியோர் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் இதழ் 29102026

You may also like...